Monday, 17 March 2014

மதுவுக்கு நோ! சொல்லும் குடிமகன்!

சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சரக்கடிப்பார் உதயநிதி.. ஆனால் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் காதல் தோல்வியால் புலம்பினாலும்கூட சந்தானம் மட்டுமே ட்ரிங்ஸ் அருந்துவார். உதயநிதி அதை தொடாமல் பேசிக்கொண்டு மட்டும் இருப்பார்.


இதற்கு உதயநிதி சொல்லும் காரணம் நம்மை வியக்க வைக்கிறது..”என்னுடைய படங்களில் நான் மது அருந்துவது மாதிரியான காட்சிகளில் மது அருந்துவது போல நடிப்பதை தவிர்த்துவிடுகிறேன்.. இயக்குனரின் கதைப்படி காட்சிகளில் நான் தலையிட மாட்டேன்..


ஆனால் இனிவரும் என்னுடைய படங்களில் இது சம்பந்தப்பட்ட காட்சியில் நடிக்கவேண்டி இருந்தாலும் கூட, நான் மது அருந்துவதில்லை என முடிவே செய்திருக்கிறேன்..” என்கிறார் உதயநிதி.


மேலும் “நான் வந்திருப்பது பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து. நான் நடிக்கும் கேரக்டர்கள் மூலமாக சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்க விரும்பவில்லை. அதுவும் தவிர நமக்கும் சமூக பொறுப்பு என்பது இருக்கிறதே” என்றும் காரணம் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த முடிவு நிச்சயம் பாராட்டத்தக்கது.

அஜித்தா வேணாம் சாமி ! தீபிகா படுகோனே!

கெளதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


பின்னர் அவர் இரண்டு மெகா பட்ஜெட் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அவரால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. எனவெ அவர் படத்தில் இருந்து விலகினார். இதனால் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க பலர் பரிசீலிக்கப்பட்டனர்.


தற்போது தீபிகா படுகோனேவிடம் இயக்குனர் கெளதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் அஜீத் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை.


தீபிகா படுகோனே அஜித்துடன் நடிக்க ரூ.7கோடி சம்பளம் கேட்கிறார். ரூ.7 கோடிக்கு குறைவாக கொடுத்தால் அஜீத் படத்தில் நடிக்க முடியாது என கறாராக் கூறிவிட்டார்.


இவ்வளவு பெரிய தொகையை ஹிரோயினுக்கு கொடுக்க தயாரிப்பாளர் மறுத்துவிட்டதால், கெளதம் மேனன் வேறு நடிகையை பரிசீலனை செய்து வருகிறார். தற்போது நயன் தாரா மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சிம்புவுக்கு தருமடி கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிம்புவும் ஹன்சிகாவும் பிரிந்ததற்கு படத்துறையில் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

அவற்றில் ஒன்று…சிவகார்த்திகேயன் ஹன்சிகா இடையிலான நட்பு.

மான் கராத்தே படத்தில் இணைந்து நடிக்கும்போது ஹன்சிகா உடன் சிவகார்த்திகேயன் நட்பாகப்பழகியதுதான் சிம்புவை சினம் கொள்ள வைத்தது என்றும், அதன் காரணமாகத்தான் ஹன்சிகா உடனான காதலுக்கு குட்பை சொன்னார் என்றும் ஒரு கதை உலவிவரும்நிலையில்….

மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் சிவகார்த்திகேயனின் பேச்சு, அவரது பேச்சில் உள்குத்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.

அப்படி என்ன பேசினார் சிவகார்த்திகேயன்?

‘‘இந்த படம் இவ்வளவு அழகா, கலர் ஃபுல்லா வந்ததுக்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மதன் அவர்கள்தான். எனக்கு அருமையான டீம் அமையறது ரொம்ப லக்குதான்.

இங்க ஜெயிக்கிறதுக்கு ஒரே வழி கடின உழைப்புதான். ஆனால், நல்ல டீம் அமைஞ்சா ஈஸியா ஜெயிச்சிடலாம். நிறைய பேர் அதை லக்குனு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கிதான்.

எல்லா படத்துலயும் பாடல்கள்தான் படத்துக்கு அடையாளம். தியேட்டருக்கு ரசிகர்களை வரவைக்கிறதே பாடல்கள்தான். அனிருத், இந்த படத்துல கொடுத்திருக்கிற பாடல்களுக்கு டான்ஸ் ஆடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சி. என்னால முடியவேயில்லை. சாதாரணமா இந்தப் பாடல்களுக்கு நடந்தே போயிட முடியாது. டான்ஸ் ஆடினால் மட்டும்தான் அந்த பாடல்களுக்கு மேட்ச் பண்ண முடியும்.”

என்று வழக்கமான வாசிப்புகளுக்குப் பிறகு ஹன்சிகா மேட்டரை டச் பண்ணினார் சிவகார்த்திகேயன். “ இந்த படத்துக்கு ஹன்சிகா , ஹீரோயின்னு சொன்ன உடனே, பாருப்பா இவனுக்கு பயங்கர மச்சத்தைன்னு சொன்னாங்க. அவங்க கூட நடிக்கதானங்க செஞ்சேன்? அது ஒரு பெரிய தப்பா?”

என்று அவர் கேட்டது வெளிப்பார்வைக்கு காமெடியாகத் தோன்றினாலும், அது காமெடி இல்லை, சீரியஸ்.

“இது சிம்புவுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதிலடி” என்றே சொல்கிறார்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.

தேசிய விருதுப் போட்டிக்கு 40 தமிழ் படங்கள்!!



2013ம் ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன.



61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது.



கடந்த பெப்ரவரி 14ம் திகதி வரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது.



40 தமிழ் படங்கள் பல்வேறு தலைப்பின் கீழ் இப்போட்டியில் மோத உள்ளது.




தேசிய விருதில் மொத்தம் 30 விருது பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், மரியான், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தலைமுறைகள், தங்க மீன்கள் மற்றும் விடியும் முன் உள்ளிட்ட பல படங்கள் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.



பொக்ஸ் ஒபீஸ் பட பிரிவில் கோலிசோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ராஜா ராணி, சூதுகவ்வும் படங்களும் மற்றும் திரைக்கு வரவுள்ள இனம், நெடுஞ்சாலை, ராமானுஜம் ஆகிய படங்களும் நுழைந்துள்ளன.

இது நடிகை அஞ்சலியின் திருவிளையாடல்!

நடிகை அஞ்சலி மீண்டும் மாயமாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார்.


சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை. உடல் எடையும் கூடியது. தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.


இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஐதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவி உள்ளன. மொபைல் போன் சுவிட்ஜ்ஆப் செய்யப்பட்டு உள்ளது. தெலுங்கு திரையுலகினரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரகசிய திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது.


அமெரிக்காவுக்கு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் அது உறுதிபடுத்தப்படவில்லை. தொடர்ந்து தேடும் படலம் நடக்கிறது.

பல கண்டிஷன் போடும் நித்யா மேனன்

நித்யா மேனன் என்றதும் தெலுங்கிலும் மலையாளத்திலும் விநியோகஸ்தர்கள் விழுந்தடித்து அவர் நடித்த படங்களை வாங்குகிறார்கள்.


தெலுங்கிலும் மலையாளத்திலும் நித்யா மேனன்க்கு இருக்கும் மார்கெட் தமிழில் அவருக்கு இல்லை என்பது மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்திலிருந்தே நமக்கு தெரிந்த விஷயம்.


மாலினி 22 படத்திற்கு பிறகு அவர் தமிழில் நடித்த ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் வாங்க ஆள் இல்லாமல் முடங்கியுள்ளது.
இந்நிலையில் நித்யாவை, படத்தில் புக் செய்ய அணுகும் இயக்குனர்களிடம் அதிக கண்டிஷன் போடுகிறாராம்.


நான் நடிக்கும் படத்தில் எது எது இருக்ககூடாது என ஒரு பட்டியலே முன் வைக்கிறாராம்.
ஆகையால் இது வேலைக்கு ஆகாது என கேரளா வரை செல்லும் இயக்குனர்கள் நித்யாவின் வீட்டில் தலையை கூட காட்டுவது இல்லையாம்.

அலுத்துப்போன தங்கர்பச்சான்!

அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களை இயக்கிய தங்கர் பச்சான் வெகுகாலம் முன் களவாடிய பொழுது என்ற படத்தையும் முடித்தார்.



களவாடிய பொழுது திரைப்படத்தை இயக்கிய தங்கர் பச்சான் அப்படத்தை வெளியிட பெரும் பாடுபட்டிருக்கிறார்.



இப்படத்தை வெளிகொண்டு வர பல முயற்சிகளை எடுத்துள்ளார் ஆனாலும் அப்படம் வெளியிட முடியவில்லை.



சலித்துப்போன தங்கர்பச்சான் இனி இப்படத்திற்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என அடுத்த படத்திற்கு தாவி விட்டார்.



அந்த படத்தில் தன் மகனையே ஹீரோவாக நடிக்க வைக்க அவருக்கு ஜோடியாக முன்னனி ஹீரோயின்களை தேடி வருகிறாராம் தங்கர்பச்சான்.

திரிஷா இல்லைன்னா நயன்தாரா – ஜி.விக்கு யாரு?

பென்சில் என்ற படத்தின் மூலம் பேனா சைஸ் கூட இல்லாத ஜீவி பிரகாஷ் ,ஹீரோ அவதாரம் எடுத்து உள்ளார் என்பது பழைய செய்தி.


தற்போது தன்னுடைய அடுத்து படத்துக்குக்கான கதை விவாத்தில் இறங்கி உள்ளாராம் நம்ம ஜிவி .


முதல் படமே வர வில்லை அதற்குள் தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவித்து விட்டார்.


இதில் சுவாரசியம் என்னவென்றால் தன்னால் முன்னணி கதாநாயகி கூடலாம் நடிக்க முடியாது என்ற தெரிந்த கொண்டு ஜீவி, சமீபத்தில் புதுமுக  இயக்குனர் அட்ஹிக் சொன்ன  டைட்டில் கேட்டு பஜ்ஜர் ஆகி உடனே ஓகே சொல்லி விட்டதாக தகவல்.


அவர் சொன்ன டைட்டில் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா" , அட டா  டைட்டில்  செம என்று சொல்லி இயக்குனர் அட்ஹிக் சொன்ன ஒன்லைன் கேட்டு ரொம்பவும் பிடித்து போக , உடனே Rebel Studio என்ற தயாரிப்பு நிறுவனத்திடம்  இயக்குனரை அனுப்பி வைத்தாராம்.



அவர்களுக்கும் கதை பிடித்து போக கூடிய விரைவில் இப் படத்தை தொடங்க உள்ளனராம்.


Rebel studio ஏற்கனவே விஜய் சேதுபதின் மெல்லிசை படத்தை தயாரித்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

புரியாத கேள்விக்கு விடை கொடுத்த "தம்பி சிவகார்த்திகேயன்" வாழ்க.. வாழ்க..!

திரைப்படங்களின் தயாரிப்புச் செலவு அதிகமாகிவிட்டது, அதனால் தயாரிப்பாளர்கள் நஷ்மடைகிறார்கள் என்ற புலம்பல் ஒலிக்கும்போதெல்லாம் கூடவே ஒரு பட்டிமன்ற விவாதமும் படத்துறையில் நடக்கும்.

தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகைகளைக் கெடுக்கிறார்களா?

நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்களைக் கெடுக்கிறார்களா?

மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழாவில்.. அப்படத்தின் நாயகனான சிவகார்த்திகேயனின் வெள்ளந்தியான பேச்சில் இதற்கு விடை கிடைத்தது..

பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்கள் தன்னை எப்படி எல்லாம் பார்த்துக்கொண்டார்கள் என்பதை சொல்வதற்காக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுப்பேசினார்…

“….ஹன்சிகாவுக்கு மேட்ச்சா, இந்த படத்துக்காக என்னை கலரா காட்டறதுக்கு கேமிராமேன் கூட ஃபாரின் போயிட்டு 20 லைட்டு எல்லாம் வாங்கிட்டு வந்தாரு.

மத்த படத்துலலாம் எனக்கு ஒரே ஒரு அசிஸ்டென்ட்தான் இருப்பாங்க. ஆனால், இந்த படத்துல 10 பேர்என்கூடவே வருவாங்க.

இவர் யாருங்கன்னு கேட்டால், அவர்தான்ங்க உங்க ஹேரை சரி செய்வாரும்பாங்க.

இவரு யாருன்னு கேட்டால்… அவர்தான்ங்க உங்க சட்டை பட்டனை சரி செய்வாருன்னு சொல்லுவாங்க.

அப்ப, இவரு யாருன்னு கேட்டால்… உங்களுக்கு மேக்கப் போட்ட பிறகு துளி ஆயில் கூட முகத்தில வராம டச்சப் பண்ணுவாருன்னு, சொல்லுவாங்க.

மைக்கேல் ஜாக்சன் பாப்பா மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாங்க.”

தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகைகளை கெடுக்கிறார்களா?

நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்களை கெடுக்கிறார்களா?

- என்ற கேள்விக்கான பதில் சிவகார்த்திகேயனின் பேச்சிலிருந்தே புரிந்திருக்குமே?

நடிப்பில் களமிறங்கிய பிரபல இயக்குனரின் அப்பா!

சிவி குமார் தயாரித்து புதுமுக இயக்குனர் ராம் கைவண்ணத்தில் விஷ்ணு, நந்தித்தா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் “முண்டாசு பட்டி”.


பிட்சா படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அப்பா ஏற்கனவே அவரது மகன் இயக்கத்தில் பிட்சா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார்.


 தற்போது அவரது மகனின் இரண்டாவது படமான ஜிகர்தண்டாவில் அவரும் மகனுடன் இணைந்து கடைசி கட்டத்தில் மூழ்கியிருக்கிறார்கள் .


இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜின் அப்பாவுக்கு தற்போது "முண்டாசு பட்டி" படத்தில் கதாநாயகி நந்தித்தாவுக்கு அப்பாவாக நடித்து கொண்டு இருக்கிறார்.


இதை பற்றி நந்திதாவே தனது ட்விட்டர் பக்கத்தில், கார்த்திக் சுப்பராஜின் அப்பா இப்பொழுது நான் நடிக்கும் “முண்டாசு பட்டி படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் - கெளதம் மேனன் மீண்டும் தலயின் 55வது படத்தில் ?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜீத் தனது 55ஆவது படத்தினை நடிக்க உள்ளார் என்பது தெரிந்த விஷயம்.


கௌதம் மேனன் படம் என்றாலே கதையோடு சேர்த்து இசைக்கும் தனி முக்கியத்துவம் தருவது வழக்கம் தான்.


ஆனால் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இன்னும் யார் என்று தெரியவில்லையாம்.


தல 55ஆவது படத்திற்கு அனிருத் இசையமைக்க போவதாக அவரே சில சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். ஆனால் இப்படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக உறுதி செய்யவில்லை.


பின்னர் ஏ.ஆர். ரகுமான் தல 55ஆவது படத்தில் இசையமைக்கவுள்ளார் என்று வதந்திகள் வந்தன.


ஆனால் தற்போது வந்த தகவலின்படி கௌதம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


சில ஆண்டுகளுக்கு முன் ஹாரிஸ் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வந்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நேத்து வந்த சிவகார்த்திகேயன் பண்ற அலட்டலைப் பாத்தீங்களா..?´ : திட்டித் தீர்த்த பிரபலங்கள்.!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற மெகா வெற்றியின் மூலம் சர்ரென்று வெற்றிச் சிகரத்தில் ஏறிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு முதல் கரும்புள்ளி விழுந்துள்ளது, மான் கராத்தே இசை வௌியீட்டு நிகழ்ச்சி மூலம். சத்யம் சினிமாஸில், சற்றும் முறையற்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வந்த திரையுலகப் பிரபலங்கள், செய்தியாளர்கள் அனைவருமே பவுன்சர்கள் எனப்படும் குண்டர்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.


´போன வாரம் இதே அரங்கத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் நிகழ்ச்சி நடந்தது. ஒரு முதல்வரின் நிகழ்ச்சிக்குரிய அத்தனை பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தாலும், யாரும் சிறிதளவுகூட முகம் சுளிக்காதபடி அத்தனை சிறப்பாக நடந்தது அந்த நிகழ்ச்சி.


ஆனா நேத்து வந்த சிவகார்த்திகேயன் பண்ற அலட்டலைப் பாத்தீங்களா?´ என பலரும் வெளிப்படையாகத் திட்டித் தீர்த்தனர் நேற்றைய நிகழ்ச்சியில்.


பொதுவாக இசை வெளியீட்டு விழாக்களில் திரையுலகினர் மட்டும்தான் அதிகமாகப் பங்கேற்பார்கள். இரசிகர்களுக்கு அனுமதி இல்லை.


ஆனால் சிவகார்த்திகேயனோ மாஸ் காட்ட வேண்டும் என நினைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்களை வேறு வரவழைத்திருந்தார். இதனால் விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை வாசலில் மறித்து கெடுபிடி செய்ய, சிலர் கோபத்துடன் திரும்பிச் சென்றனர்.


 சினிமா செய்தியாளர்கள் பலரும் அரங்கத்துக்கு வெளியே நின்றுவிட்டுத் திரும்பினர். தொலைக்காட்சி கேமராமேன்களும் படாதபாடுபட்டனர். அவர்களை வசதியான இடத்தில் கேமராவை வைத்து ஷூட் பண்ணக் கூட விடவில்லை பவுன்சர்கள்.


இத்தனைக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். எளிமையானவர், பந்தா இல்லாதவர் என்றெல்லாம் பெயரெடுத்தவர். ஆனால் மும்பையின் பவுன்சர் கலாச்சாரத்தை சத்யம் தியேட்டர் வரை அழைத்து வந்திருப்பது அவர்தான் என்றார்கள் நிகழ்ச்சிக்கு வந்த திரையுலகப் புள்ளிகள்.


நம்ம வீட்டுப் பையன் என்ற இமேஜ் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. கவனத்தில் கொண்டால் சரி! 

3 வார்த்தையில் கதை சொல்லும் பெண் டைரக்டர்!

கறுப்பு வெள்ளை படங்களிலிருந்து டிஜிட்டல் சினிமாவரை நடிப்பை தொடர்ந்துகொண்டிருக்கிறார் சீனியர் நடிகை லட்சுமி.


 இவர் தமிழில் கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு கடைசியாக நடித்தார்.


5 வருட இடைவெளிக்கு பிறகு மூணே மூணு வார்த்தை என்ற படத்தில் நடிக்கிறார்.


அவருடன் புதுமுக நடிகை அதிதி செங்கப்பா அறிமுகமாகிறார்.


இப்படம்பற்றி இயக்குனர் மதுமிதா கூறும்போது,வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா படங்களையடுத்து நான் இயக்கும் 3வது படம்.


ஐ லவ் யூ என காதலை வெளிப்படுத்துவதும், ஹவ் ஆர் யூ என்று நலம் விசாரிப்பதும் 3 வார்த்தைதான்.


இதில் காதலை குறிப்பிடும் படமாக இக்கதை இருக்குமா என்பதுதான் சஸ்பென்ஸ்.


வெங்கடேஷ் ஹரி நாதன் ஹீரோ.


அதிதி செங்கப்பா ஹீரோயின்.


எஸ்.பி.பி., லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


 சீனுவாசன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு.


கார்த்திகேய மூர்த்தி இசை.


எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். இவ்வாறு இயக்குனர் மதுமிதா கூறினார். 

மோகன்லால் செய்தது துரோகம்..?

தமிழில் மோகன்லால், ஜீவா நடித்த அரண் என்ற படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. இப்படம் மலையாளத்தில் கீர்த்தி சக்ரா என்ற பெயரிலும் வெளியானது.


மேலும் மோகன்லால் நடித்த கந்தகார், குருசேத்ரா ஆகிய படங்களையும் மேஜர் ரவி இயக்கினார். இந்நிலையில் இந்திய எல்லை பகுதியில் காவல் காக்கும் ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்தார்.


இப்படத்தில் நடிக்க மோகன்லாலிடமே கால்ஷீட் கேட்டு வந்தார். கால்ஷீட் தந்துவிடுவார் என்று காத்திருந்த மேஜர் ரவிக்கு மோகன்லால் டிமிக்கி கொடுத்தார்.


இதையடுத்து பிருத்விராஜை ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் ரவி.


இதன் ஷூட்டிங்கிற்காக சமீபத்தில் பிருத்விராஜ் மற்றும் பட குழுவினர் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர்.


இந்திய எல்லையில் பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவ வீரன், அதேசூழலில் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவ வீரரின் உணர்வுகளையும் மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.?

முடிவுக்கு வருது கவுதம் மேனன் - ஹாரிஸ் மோதல் !

கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் மோதல் முடிவுக்கு வரும் என தெரிகிறது. மின்னலே படம் தொடங்கி கவுதம் மேனனின் எல்லா படத்துக்கும் இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.


திடீரென சென்னையில் ஒரு மழைக்காலம் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்தார் கவுதம். இது ஹாரிசுக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையில் வாரணம் ஆயிரம் படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே பணப் பிரச்னையும் ஏற்பட்டது.


இதையடுத்து இருவரும் மோதிக் கொண்டனர். ஒருவரை தாக்கி ஒருவர் கருத்து தெரிவித்து விலகினர். இந்நிலையில் இப்போது இருவரும் சேர்ந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அஜீத் நடிக்கும் படத்தை கவுதம் மேனன் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு இசையமைக்க முதலில் ரஹ்மானிடம்தான் கவுதம் பேசினார். ஆனால் மற்ற படங்களில் ரஹ்மான் பிசியாக இருக்கிறார்.


இதனால் இந்த படத்துக்கு அவர் இசையமைப்பது சந்தேகம் என கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஹாரிசுடன் இணைய கவுதம் விரும்புகிறாராம்.


சமீபத்தில் பெரிய ஹிட் எதுவும் தராத ஹாரிசும் கவுதம் படத்தில் அஜீத் நடிப்பதால் அதில் இணைவது மூலம் ஃபாமுக்கு திரும்பலாம் என நினைக்கிறாராம்.


 இது தொடர்பாக இருவர் தரப்பிலும் பேச்சு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

ஸ்ரேயாவை கைவிட்டார் பாலா - கைகொடுக்கிறார் அமீர்!

பாலா இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஸ்ரேயாவுக்கு அமீர் கைகொடுக்க உள்ளார். பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் படம் கரகாட்டம்.


 இதில் ஹீரோயினாக ஸ்ரேயா நடிப்பதாக கூறப்பட்டது. இதற்காக ஸ்ரேயாவை வைத்து போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது. கிராமத்து வேடத்துக்கு பொருந்தமாட்டார் என்பதால் அவருக்கு பதிலாக வரலட்சுமியை தேர்வு செய்தார்.


 பாலா படம் தனக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்பார்த்த ஸ்ரேயா ஏமாற்றம் அடைந்தார். அவரது கவலையை போக்கும் விதமாக அமீர் தனது படத்தில் நடிக்க ஸ்ரேயாவை அழைத்திருக்கிறாராம்.


 இயக்குனர் சரண் உதவியாளர் கார்த்திக் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.


அமீர் படம் என்றாலே வருடக்கணக்கில் ஷூட்டிங் நடக்குமே என்ற பேச்சு இருக்கிறது.


 அந்த பேச்சை மாற்றும் விதமாக இப்படம் இருக்குமாம். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பெப்சி அமைப்பின் தேர்தல் நடக்க உள்ளது.


 அது முடிந்தபிறகு ஜூலையில் ஷூட்டிங் தொடங்கி செப்டம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமீர் தரப்பு தெரிவிக்கிறது.


 இதில்தான் அமீருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க உள்ளாராம். 

அட நம்ம சிம்புவா இப்படியெல்லாம் பேசுறது?

ஏதோ கடமைக்குத்தான் நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சொல்லப்போனா எனக்கு சினிமாவுல நடிக்கவே புடிக்கல என்று சமீபத்தில் ஒரு ஞானி போல பேசியிருக்கிறார் நடிகர் சிம்பு.


ஹன்ஷிகா கை கழுவியதால் இப்படி ஒரு நிலமைக்கு சிம்பு தள்ளப்பட்டாரா? என்பதை விட அவர் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்பது என்பது ஆச்சரியம் தானே? இதோ சிம்பு பேசியிருப்பதை தொடர்ந்து படியுங்கள்…


சினிமாவைப் பொறுத்தவரைக்கும் நான் எல்லா விஷயங்களிலுமே ஆர்வமாத்தான் இருக்கேன். அது தானாகவே அமைஞ்சிடுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கும் போது நமக்கு சினிமா தெரியாம இருந்தா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு சில நேரங்கள்ல தோணும். ஏன்னா சினிமா தெரிஞ்சதுன்னா அங்க நடக்கிற சில காமெடிகள், தப்புகள் இதெல்லாமே முன்கூட்டியே தெரியும். அதுவந்து ஒரு விதத்துல எனக்கு எரிச்சலாத்தான் இருக்கும். அதையெல்லாம் பார்த்தும் கூட சரி என்ன பண்ண முடியும்னு அமைதியாப் போயிடுவேன்.


இப்போ எனக்கு சினிமாவுல நடிக்கவே புடிக்கல, அதுதான் உண்மை. சின்ன வயசுலேர்ந்தே ரஜினி சார் மாதிரி பெரிய ஸ்டார் ஆகணும்ங்கிற ஆசை இருக்கும். நெறைய படங்கள் பண்ணனும்ங்கிற ஆசையெல்லாம் இருந்துச்சு. ஆனா இப்போ 28 வயசை தாண்டின உடனே வேறவேற ஆசைகள் தான் இருக்கு. சினிமாங்கிற வட்டத்துக்குள்ள மட்டுமே இருக்கிறது எனக்கு புடிக்கல. அதையும் தாண்டி இந்த உலகத்துக்கு எதையாவது செஞ்சோம்கிற மாதிரி எதையாவது செய்யணும்.


எனக்கு பணம் அதிகமா சம்பாதிக்கிறது புடிக்கல. பணத்தால தான் இந்த உலகத்துல மனிதாபிமானமே போயிடுச்சு. பணத்துக்காக நல்லவங்க கூட இன்னைக்கு கெட்டவங்களா மாறிக்கிட்டிருக்காங்க. பணம் இருந்தா எதை வேணும்னாலும் செஞ்சிடலாம்கிற நெலைமை ஆயிடுச்சு. இதனால இந்த சமுதாயத்துல உண்மை இல்லாம போயிடுச்சு, பொய்கள் அதிகமாயிடுச்சு, பொறாமை ஜாஸ்தியாயிடுச்சு. இதுக்கெல்லாம் பணம் தான் காரணம்னு நெனைக்கிறேன். பணமே இல்லேன்னா இந்த உலகம் நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன்.


இடையில என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்துச்சு. அதுக்கப்புறம் தான் எனக்கு ஆன்மீகத்துக்குள்ள ஒரு ஈடுபாடு வந்துச்சு. அதை நோக்கிப்போனேன். இப்போ யாராவது வந்து உங்களுக்கு சூப்பர் ஸ்டார் ஆகணும்னு ஆசை இருக்கான்னு கேட்டா எனக்கு இல்லேன்னு தான் சொல்லுவேன். பெரிய ஸ்டார் ஆகணும், இன்னும் நெறைய படங்கள் பண்ணனும்ங்கிற ஆசையெல்லாம் போயிடுச்சு.


இப்போ கூட நான் படங்கள் பண்றதுக்கு எதுக்குன்னா இதுதான் என்னோட தொழில். இது மட்டும் தான் எனக்குத் தெரியும், நமக்குன்னு சில கடமைகள் இருப்பதில்லையா? அதுபோலத்தான் நான் படங்களின் நடிச்சிக்கிட்டிருக்கேன். யாரோட படத்தையும் பார்க்கும் போது போட்டியோ, பொறாமையோ, கோபமோ வரவே வராது. என்னோட படம் ஹிட்டனாலும் ப்ளாப்பானாலும் ஒரே மனநிலையில தான் இருப்பேன். என்கிறார் சிம்பு.

ஆத்மா சாந்தி அடையட்டும் சனா கானுக்கு சரமாரி மெசேஜ்

நான் விபத்தில் இறந்துவிட்டதாக நினைத்து குடும்பத்தினர் பதறிவிட்டனர் என்றார் சனா கான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனா கான். இதே பெயர் கொண்ட பாகிஸ்தான் நடிகை ஒருவர் கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார்.


 அது தமிழ் நடிகை சனாகான் என நினைத்து அவரது குடும்பத்தினருக்கு பலர் போன் செய்தனர். அவர்கள் பேசியதை கேட்டு அவரது தாய் உள்பட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி சனா கான் கூறியதாவது: பல நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்னுடைய இணைய தள பக்கத்தில் ரெஸ்ட் இன் பீஸ் (ஆத்மா சாந்தி அடையட்டும்) என தகவல் அனுப்பினர். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். என் பெயர் கொண்ட பாகிஸ்தான் நடிகை விபத்தில் இறந்துவிட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது.


பாகிஸ்தான் நடிகை விபத்தில் சிக்கிய தினத்தன்று நான் எனது நண்பர்களுடன் வெளியில் சென்றிருந்தேன். இதனால் எனது மொபைலை சைலன்ட் மோடில் வைத்திருந்தேன். மேலும் எனது அம்மாவுக்கும் யாரோ போன் செய்து நான் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி இருக்கிறார்கள். அவர் பயந்துவிட்டார். என் குடும்பத்தினர் 50 பேர் மிஸ்டு கால் செய்திருந்தனர். ஏதேச்சையாக என் போனை பார்த்தபோது இது தெரியவந்தது. மேலும் என்னுடைய கார் டிரைவரையும் அன்றைய தினம் வரவேண்டாம் என்று சொல்லி இருந்தேன்.


இது என் குடும்பத்தினரை இன்னும் பயத்தில் ஆழ்த்தி இருந்தது. பிறகு எனது நண்பர்களுக்கு, இறந்தது நான் இல்லை என்று தகவல் அனுப்பினேன். தவறாக புரிந்துகொண்டு மெசேஜ் பரப்பியதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நண்பர்களும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இதுபோல் தகவல் சொல்லும்போது உண்மை எது என்று தீர விசாரித்தபிறகு சொல்ல வேண்டும். இவ்வாறு சனா கான் கூறினார். 

நயன்தாரா படத்துக்கு நோ கட்!

நயன்தாரா நடித்துள்ள படத்துக்கு தணிக்கை குழு கட் கொடுக்காமல் சான்றிதழ் வழங்கியது. இந்தியில் வித்யா பாலன் நடித்து திரைக்கு வந்த படம் கஹானி.


இப்படம் தமிழில் நீ எங்கே என் அன்பே, தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும் தயாராகி இருக்கிறது. சேகர் கம்முலா இயக்கி இருக்கிறார்.


 வித்யாபாலன் வேடத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இந்தியில் கர்ப்பிணி வேடத்தில் வித்யா நடித்திருந்தார்.


ஆனால் கர்ப்பிணி வேடத்தை மாற்றும்படி நயன்தாரா கேட்டதையடுத்து அவரது வேடம் மாற்றப்பட்டது.


இப்படம் முடிந்து சென்சார் சான்றிதழுக்காக தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் ஒரு கட் கூட கொடுக்கவில்லை.


யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள். இப்படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் திரைக்கு வரஉள்ளது.