Wednesday, 12 March 2014

டிமிக்கி கொடுக்கும் டேனியல் பாலாஜி!

காக்க காக்க படத்தில், சூர்யாவின் போலீஸ் டீமில் அதிகாரிகளில் ஒருவராக நடித்தவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் புகழ்பெற்றார்.


 அவர் தற்போது மறுமுகம், ஞானகிறுக்கன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டு படங்களிலுமே சைக்கோ கேரக்டர்தான். இதுதவிர ஒரு படத்தை இயக்க இருக்கிறார். தான் இயக்கும் படத்தில் அதிக கவனம் செலுத்துவதால் நடித்த படங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாராம்.


மறுமுகம் படத்தின் புரமோசன்களுக்கு வராமல் அடம்பிடிக்கிறாராம். அந்த படத்தின் எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லையாம். அதேபோல ஞான கிறுக்கன் படத்தின் புரமோசனுக்குவம் வருவதில்லையாம். ஆடியோ பங்ஷனுக்கு தயாரிப்பாளரும், டைரக்டரும் மிரட்டித்தான் அழைத்து வரவேண்டியது இருந்ததாம்.


"பட வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கும் இந்த காலத்தில் கிடைத்த வாய்ப்பைகூட சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவராக இருக்கிறாரே" என்று வருத்தப்படுகிறார்களாம் நண்பர்

ஏப்ரல் 11-ல் கோச்சடையான் ரிலீஸ்! ரஜினி உஷார் நடவடிக்கை!!

எந்திரனுக்குப்பிறகு ரஜினி நடித்த கோச்சடையான் படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகிறது என்பதால் அவரது ரசிகர்கள் சந்தோச கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள்.


அதேபோல் ரஜினியும், நீண்ட நாளைக்குப்பிறகு கோச்சடையான் மூலம் ரசிகர்களை சந்திக்க வருகிறோம். அதுவும் 125 கோடியில் தயாரான மெகா பட்ஜெட் படத்துடன் வருகிறோம் என்று எஜமான் தோரணையில் நடமாடிக்கொண்டிருக்கிறார்.


ஆனால் இந்த சந்தோசத்திலும் உஷார் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளார் ரஜினி. அதாவது, பாபா படம் தோல்வியடைந்தபோது, நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்கினார் ரஜினி.


அவர் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை என்றாலும், தன்னால் அவர்கள் நஷ்டப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் தாமாக முன்வந்து உதவினார். அதனால், அதையடுத்து ரஜினி படங்களை வாங்கி லாபம் சம்பாதித்தபோதும், சிலர் உங்கள் படம் கையை கடித்து விட்டது என்று ரஜினி வீடு தேடிச்சென்று தலையை சொறிந்து நஷ்டஈடு கேட்டு நின்றனர்.


அதனால், இனி அதுபோன்று தன்னைத்தேடி யாரும் வந்து நிற்கக்கூடாது என்பதற்காக, கோச்சடையான் படத்தில் ரஜினி நடிகர் மட்டுமே.


அதனால் லாப நஷ்டங்களுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இலலை என்று ஒரு அக்ரிமென்ட் போடப்பட்டு விட்டதாம். ரஜினியின் இந்த உஷார் நடவடிக்கையால், சில விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

கெளதம்மேனனின் சொத்துக்கள் ஏன் ஏலத்துக்கு வந்தது!

மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என மெகா ஹிட் படஙக்ளை இயக்கியவர் கெளதம்மேனன்.


அதோடு சொந்தமாக பட நிறுவனம் தொடங்கி அதன்மூலம் நடுநிசி நாய்கள், வெப்பம், தங்க மீன்கள் போன்ற படங்கள் தயாரித்தார்.


இதில் சில படங்கள் அவருக்கு நஷ்டத்தைக் கொடுத்தன. இருப்பினும், சிம்புவைக்கொண்டு சட்டென்று மாறுது வானிலை என்ற படத்தை தனது சொந்த பேனரிலேயே தயாரிக்கும் கெளதம், தற்போது அஜீத் நடிக்கும் படத்தை ஏ.எம்.ரத்னம் பேனரில் தயாரித்து வருகிறார்.


இந்த நிலையில், படங்கள் தயாரித்து தான் பட்ட கடனை அடைப்பதற்காக சென்னை இந்திரா நகரில் தனக்கு சொந்தமாக உள்ள 7 ஆயிரம் சதுர அடி சொத்தை அடமானம் வைத்து கடனை அடைத்திருந்த கெளதம்மேனன்.


அதன்பிறகு அந்த கடனை திருப்பி அடைக்காததால் இப்போது அவரது சொத்துக்களை ஏலம் விடுவதாக கோர்ட் அறிவித்துள்ளதாம்.


ஏலத்துக்கு வந்துள்ள கெளதம்மேனனுக்கு சொந்தமான அந்த சொத்தின் மதிப்பு ரூ.12.26 கோடியாம்.

காதல் குறித்து காஜல்! அதிரடி ஸ்டேட்மென்ட்!

பொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வந்தார்.


அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை. ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.அந்த செய்தி காட்டுத்தீயாய் பத்தி எறிந்தது.


அதனால் ஆந்திராவில் தொடர்ந்து முகாமிட்டிருந்தால், எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகி விடும் என்று ஒரு மாற்றத்துக்காக கோலிவுட்டுக்கு வந்தார் காஜல்.


அந்த நேரம் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் கிடைத்ததால் சென்னையிலேயே தங்கி விட்டார். அதையடுத்து ஆந்திராவுக்கு மீண்டும் அவர் சென்றபோது, பழைய தொழிலதிபர் சர்ச்சை காணாமல் போயிருந்தது. அதனால் நிம்மதியடைந்தார் நடிகை.


ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது ஒரு நபருடன் ஊர் சுற்றிய போட்டோக்கள் வெளியாக, மீண்டும் அதே தொழிலதிபர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இருப்பினும் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்த காஜல்அகர்வால், தற்போது சில மீடியாக்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.


அதில், நடிகைகள் காதலிப்பது ஒன்றும் பெரிய பாவச்செயல் அல்ல. நடிகைகளுக்கும் மனசு உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள காஜல், தான் தொழிலதிபரை காதலிக்கவில்லை என்று மறுப்பு சொல்லவில்லை. மாறாக, இன்னும் மூன்று ஆண்டு கழித்து என் திருமணம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். 

10 மணி நேரம் தண்ணீரில் மிதந்த லட்சுமி மேனன்!!

கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என்று தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை லட்சுமி மேனன்.


இவர் இப்போது மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் பாண்டியநாடு ஹிட்டுக்கு பிறகு விஷாலுடன் இரண்டாவது முறையாக நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்து வருகிறார்.


விஷாலே தயாரிக்கும் இப்படத்தை திரு இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது லட்சுமி மேனனை, கிட்டத்தட்ட 10 மணிநேரம் தண்ணீரில் மிதக்கவிட்டுள்ளார் இயக்குநர் திரு.


இதற்காக சென்னையை ஒட்டியுள்ள கடற்கரையில் லட்சுமி மேனனை தண்ணீரில் இறக்கிவிட்டு படமாக்கியுள்ளார் திரு.


இதுப்பற்றி நடிகை லட்சுமி மேனன் கூறும்போது, கும்கி படத்திற்கு பிறகு நான் சிகப்பு மனிதன் படத்திற்காகத்தான் ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்தேன். அதிலும் தண்ணீரில் சுமார் 10 மணிநேரம் என்னை மிதக்கவிட்டுவிட்டார் இயக்குநர்.


அதற்காக நான் வருத்தப்படவில்லை. கஷ்டப்பட்டால் தான் முன்னேற முடியும். இதுவரை நான் நடித்த படங்கள் கஷ்டப்பட்டு நடித்ததால் தான் வெற்றி பெற்றுள்ளன.


அதேப்போல் இந்தப்படமும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். 

இளவட்ட நடிகர்களை ஆச்சர்யப்படுத்தும் கமலின் அதிரடி வேகம்!

அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.


அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல்.


அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர், இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் ஈடுபட்டிக்கிறார்.


இதற்கிடையே ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்தை இன்னும் 6 மாதத்திற்குள் ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் கமல், அதை மனதில் கொண்டு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.



அதோடு, உத்தம வில்லனை முடிக்கும் தருவாயில் இருக்கும்போதே, த்ரிஷ்யம் ரீமேக்கிலும் நடிக்கிறார். ஆக, அந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு விடும் நிலை உள்ளது.


அதனால், ஓய்வு கொடுக்காமல் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல்.


அவருக்கு ஒன்றும் இது புதிது இல்லை என்றாலும், தாங்களெல்லாம் வருடம் ஒரு படம் கொடுத்துக்கொண்டிருக்க கமலோ, வருடத்திற்கு மூன்று படம் வரை கொடுத்து விடுவார் போலிருக்கே என்று கோடம்பாக்கத்தின் முன்னணி இளவட்ட நடிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.