Thursday, 6 February 2014

மீண்டும் அஜித்தின் புதிய இளமைத் தோற்றம்!

1980-90களில் கமலஹாசன், ரஜினிகாந்தின் ஆதிக்கம் தமிழ்த் திரையுலகில் மேலோங்கியிருந்தபோதே நவரச நாயகன் எனப்படும் நடிகர் கார்த்திக் தன்னுடைய நடிப்புத் திறமையினால் தனி முத்திரை பதித்தார். 100 படங்களுக்கும் மேலாக கதாநாயக அந்தஸ்தில் நடித்துள்ள இவர் தற்போது வில்லன் வேடங்களில் நடிக்க முன்வந்துள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிக்கும் 'அநேகன்' திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்துவருகிறார். இப்போது ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் கெளதம் மேனனின் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள புதிய படத்திலும் வில்லனாக நடிக்க கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்தும், கார்த்திக்கும் முன்பே இரு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ஹீரோவாக நடித்த 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் அஜித் கௌரவ வேடத்தில் தோன்றியுள்ளார். அதேபோல் அஜித் நடித்த 'ஆனந்தப் பூங்காற்றே' படத்தில் நடிகர் கார்த்திக் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்கு வந்தன.

'வீரம்' படத்தின் வெற்றியை அடுத்து அஜித், கெளதம் மேனனின் படத்தில் இணைந்துள்ளார். கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இதுவாகும். நிதிப் பிரச்சினைகளில் திண்டாடும் கெளதம் மேனனுக்கு உதவும் விதமாகவே அஜித் தானே முன்வந்து இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் வெகு நேர்த்தியாகவும், நவீன உத்திகளுடனும் தயாரிக்கப்பட இருப்பதால் ஒப்பனைக் கலைஞர்களிலிருந்து நடனக் கலைஞர்கள் வரை ஹாலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர். அஜித்தும் சமீபத்திய கருப்பு, வெள்ளை தலைமுடியுடன் கூடிய தோற்றத்தை மாற்றி இந்தப் படத்தில் இளமையாகக் காட்சியளிக்க உள்ளார். இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையுமே அமெரிக்காவில் நடத்துவதற்கு மேனன் திட்டமிட்டுள்ளார். மேலும் அஜித்தின் படங்களில் இதுவே மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகின்றது. 

அம்மா - அப்பா வித்தியாசம் என்ன?

அம்மா - அப்பா வித்தியாசம் என்ன?

இயற்கை நமக்கு அம்மா, அப்பா என்று பெற்றோரைக் கொடுத்திருக்கிறது. இதில் அம்மா என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற ரகசியம் இருக்கிறது. அப்பா என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற ரகசியமும் இருக்கிறது.

தமிழில் "ம்மா' இரண்டும் மெல்லின எழுத்துக்கள். "அ' என்பது உயிர்எழுத்தில் முதல் எழுத்து. தமிழில் எப்படி வைத்தார்கள்? நாம் உயிர் எடுத்ததில் முதல் காரணம் அப்பா, அம்மா. உயிர் எழுத்தில் முதல் எழுத்து அவர்களுக்கு "அ' அடுத்தது என்ன அழகு என்றால் அம்மாவில் "ம்,மா' இரண்டும் மெல்லின எழுத்து.

 அப்பாவில் "ப்,பா' இரண்டும் வல்லின எழுத்து என்ன அர்த்தம்? வாழ்க்கையில் அம்மா இரண்டு மடங்கு மென்மையாக இருக்க வேண்டும். அப்பா இரண்டு மடங்கு வன்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் குடும்பமாக இருக்கும். 

வீ‌ட்டி‌ல் 2 கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் அவ‌சிய‌ம்!!

வீ‌ட்டி‌ல் 2 கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் அவ‌சிய‌ம்!!

‌ஒ‌வ்வொரு ‌வீ‌ட்டிலு‌ம் இர‌ண்டு கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். த‌ற்போது ம‌க்கு‌ம் கு‌ப்பைக‌ள், ம‌க்கா கு‌ப்பைக‌ள் எ‌ன்று ‌பி‌ரி‌‌ப்பது கு‌றி‌த்து நா‌ங்க‌ள் பேச‌வி‌ல்லை.

அதாவது, உல‌ர்‌ந்த கு‌ப்பைகளை ‌கொ‌ட்டவு‌ம், ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ள் த‌ங்களா‌ல் ஒது‌க்க‌ப்படு‌ம் கு‌ப்பைகளை‌ப் போடவு‌ம் ஒரு கு‌ப்பை‌த் தொ‌ட்டி‌ ‌வீ‌ட்டி‌ல் துடை‌ப்ப‌ம் போ‌ன்றவை வை‌க்கு‌ம் இட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌தி‌ல் கா‌கித‌ம், தூசு போ‌ன்றவ‌ற்றையு‌ம், ‌வீ‌ட்டை‌ப் பெரு‌க்‌கினா‌ல் வரு‌ம் கு‌ப்பையையு‌ம் கொ‌ட்டி வை‌க்கலா‌ம்.

ஆனா‌ல், ‌வீ‌ட்டி‌‌ன் சமையலறை‌யி‌ல் த‌னியாக ஒரு கு‌ப்பை‌த் தொ‌ட்டி வை‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌தி‌ல் சமையலறை‌யி‌ல் வரு‌ம் கு‌ப்பைகளை‌ப் போ‌‌ட்டு வை‌க்கலா‌ம். இவை ஈர‌த்துட‌ன் இரு‌க்கு‌ம். இவ‌ற்றையு‌ம் ம‌ற்ற‌க் கு‌ப்பைகளுட‌ன் போ‌ட்டு வ‌ந்தா‌‌ல் ‌வீடே நா‌ற்ற‌ம் எடு‌க்கு‌ம்.

மேலு‌ம், சமையலறை‌க் கு‌ப்பைகளை ‌தினமு‌ம் அ‌க‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌தனை ஒரு அ‌ட்டை போ‌ட்டு மூடி வை‌த்தா‌ல் கொசு‌த் தொ‌ல்லை இரு‌க்காது.