Sunday, 16 March 2014

ஹன்சிகாவிற்கு வந்த அதிரடி கட்டளைகள்! தாங்குவாரா.. இவர்?

சிம்புவுடன் காதல் முறிவு ஏற்பட்ட பிறகு, நடிகை ஹன்சிகா செல்போன் பேசக்கூட அம்மாவின் அனுமதியை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சமீபமாக வெளியான வார இதழ் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் ஷூட்டிங் ஸ்பாட்டைத் தவிர மற்ற இடங்களில் ஹன்சிகாவிடம் செல்போனைக் கையில் தருவதே இல்லையாம். இதனால் ஷூட்டிங் ஸ்பாட் தவிர ஏனைய இடங்களில் செல்போன் பேச இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஹன்சிகா.

சமீபமாக சிம்பு - ஹன்சிகா இருவருக்குமிடையேயான காதல் முறிவிற்குக் கூட முக்கியக் காரணமாக அவரது அம்மா இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அம்மாவின் முடிவே தனது முடிவு என்றும் ஹன்சிகா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

சாதாரண மக்களுக்குத்தான் காதலிப்பதில் பிரச்னைகள் என்றால் பிரபலங்களுக்கு அதை விட அதிகப் பிரச்னைகள் இருக்கும் போல என்று ரசிகர்கள்
பேசிவருகின்றனர்.

ஹன்சிகா தற்பொழுது வாலு, அரண்மனை, உயிரே உயிரே, மீகாமன், வேட்டை மன்னன் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், மேலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் படு பிஸியாக நடித்துவருகிறார்.

எப்படியெல்லாம் யேசிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் ...!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா இணைந்து நடித்துவரும் புதிய படத்தின் முக்கிய வில்லன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பாலிவுட் நடிகரான நீல் நித்தின் முகேஷ் விஜயின் வில்லனாக நடிக்கவுள்ளதாக முருகதாஸ் அறிவித்துள்ளார். வங்காள நடிகரான தோட்டா ராய் இப்படத்தின் வில்லனாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் முக்கிய வில்லன் இல்லை என்றும், முக்கிய வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபரைத் தேடிவருவதாகவும் முருகதாஸ் முன்னர் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.


முருகதாஸ் - விஜய் கூட்டணியில் முதல் படமான துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்த வித்யூ ஜம்மாவாலும் பாலிவுட் நடிகர்தான்.பில்லா -2 படத்தில் தமிழுக்கு அறிமுகமான வித்யூ ஜம்மாவால் பின்னர் விஜயின் துப்பாக்கியில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்பொழுது சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்திலும் வில்லனாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.


பாலிவுட் நடிகரான வித்யூ ஜம்மாவாலை அடுத்து, விஜய் - முருகதாஸ் கூட்டணியின் முக்கிய வில்லனாகியிருக்கிறார் நீல் நித்தின் முகேஷ்.
ஹீரோவாக மட்டுமல்லாது, முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் நித்தின் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.


விஜய் - சமந்தா நடித்துவரும் இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ஐங்கரன் இண்டர்நேசனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகின்றன. அனிருத் இசையமைத்துவருகிறார். இவ்வாண்டு தீபாவளி வெளியீடாக இப்படம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோகன்லாலின் வாய்ப்பைத் தட்டிப்பறித்த விஷால்!

இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் மென்மேலும் எதிர்பார்புக்களைக் கிளப்பிவருகிறது. இவ்வாண்டின் மாபெரும் வெற்றிப்படமாக இப்படம் அமையலாம் என்றும் தற்போதிருந்தே விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் இப்படம் உருவாகியிருப்பதால் இப்படத்தின் கதை விஷாலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட கதையாகத்தான் இருக்கும் என்று பெரும்பாலானோர் கருதிவரும் நிலையில், இப்படத்தின் கதையினை மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை மனதில் வைத்து உருவாக்கியதாக இப்படத்தின் இயக்குனர் திரு கூறியுள்ளாராம்.


மோகன்லாலிடம் இப்படத்தின் கதையினைக் கூறி அவரது ஒப்புதலையும் பெற்றுவிட்ட பிறகு, இக்கதையினைக் கேள்விப்பட்ட விஷால் தானே நடிப்பதாக முன்வந்தாராம். விஷாலுடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் பணியாற்றியிருப்பதால், அந்த நட்பின் அடிப்படையில் நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷால் நடிப்பது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.


இவ்வாண்டின் மாபெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பிவரும் இப்படம் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தனை எதிர்பார்ப்புக்களையும்
சமாளிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

யுவன், வைரமுத்து கூட்டணி - வயிற்றில் புளியைக் கரைக்கிறதாம்...?

சமீபமாக யுவனின் பெயர் தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. இளையராஜா இனி ஒருபோதும் இணைந்து பணியாற்ற விரும்பாத வைரமுத்துவுடன் யுவன் இணைந்து பணியாற்ற இருப்பது, திடீரென்று இஸ்லாம் மதத்துக்கு மாறியது.


இந்த இரு விவகாரங்களில் இளையராஜாவும் அவர் குடும்பமும் - கார்த்திக், பவதா‌ரிணி - என்ன நிலைப்பாடு எடுத்துள்ளனர் என்பதை அறிவதில் அனைவருக்கும் ஆவல்.


தான் இஸ்லாம் மதத்தை தழுவியதை தனது தந்தை இளையராஜா உள்பட யாரும் எதிர்க்கவில்லை என யுவனே கூறினார். அது முற்றிலும் உண்மை. ஒவ்வொருவருக்கும் தங்களுக்குப் பிடித்த மதத்தை பின்பற்றும் உரிமை இருக்கிறது என்பதே இளையராஜாவின் நிலைப்பாடும். வைரமுத்துவுடன் இணைந்தது...?


இளையராஜாவுக்கும் அவ‌ரின் குடும்பத்துக்கும் அதில் துளி விருப்பமில்லை. இளையராஜாவின் எண்ணங்களை மட்டுமே வெளிப்படுத்தி அவரது விருப்பத்தை மட்டுமே நடைமுறைப்படுத்துகிறவர் கார்த்திக்ராஜா. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வைரமுத்துவுடன் யுவன் இணைவதில் தனக்கு சுத்தமாக உடன்பாடில்லை என கூறியுள்ளார்.


இளையராஜாவின் விருப்பத்துக்கு மாறாக யுவனை ப்ரைன் வாஷ் செய்தவர் யார்? எது? 

தெலுங்கில் மட்டுமே தயாராகும் மணிரத்னம் படம்?


மணிரத்னத்துக்கே மணி பிரச்சனையா? இரண்டு நாள்களாக இந்தச் செய்திதான் கோடம்பாக்கத்தை சுழற்றியடிக்கிறது.


மகேஷ்பாபு, நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கிறார்கள் என்பது செய்தி. தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் படம் தயாராக உள்ளது. ரோஜா படத்தில் எப்போது தேசிய பிரச்சனைக்குள் தலையை விட்டாரோ அப்போது தொடங்கியது மணிரத்னத்தின் இருமொழி தயாரிப்பு. பல நேரங்களில் தமிழ்ப் படமும் இல்லாமல் இந்திப் படமும் இல்லாமல் மணிரத்னத்தின் படங்கள் தோல்வியைத் தழுவின. தமிழில் அவரின் கடைசி வெற்றி, தமிழில் மட்டுமே தயாரான அலைபாயுதே என்பது கவனிக்கத்தக்கது.


சரி, விஷயத்துக்கு வருவோம். கடல் படம் பலத்த நஷ்டத்துக்குள்ளானதும், படத்தை வாங்கியவர்கள் நஷ்டஈடு கேட்டு மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியதும் வரலாறு. அந்த சம்பவம் காரணமாக தமிழில்நாட்டில் மணிரத்னம் படத்துக்கு பைனான்ஸ் செய்ய தயக்கம் காட்டுகிறார்களாம். அதனால் தெலுங்கில் மட்டும் படத்தை எடுப்பது என மணிரத்னம் தீர்மானித்துள்ளதாக பிரபல நாளிதழே செய்தி வெளியிட்டது.


தனது படத்தை மணிரத்னமே தயாரிப்பார். அவருக்கு பைனான்ஸ் பிரச்சனையெல்லாம் கிடையாது. இது பொய்யான தகவல் என்பது அவருக்கு நெருக்கமானவர்களின் கூற்று.


இதில் யார் சொல்வது சரி? இது ஒருபுறமிருக்க விரைவில் ஹைதராபாத்தில் படவேலைகளை தொங்கும் முனைப்பில் இருக்கிறாராம் மணிரத்னம்.

மோசடியும், காதலும் கலந்த ஒகேனக்கல் கதையின் எக்ஸ்க்ளுசிவ்...!



நடைமுறை பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதும் மவுசு இருக்கவே செய்கிறது. இந்தியாவின் தலையாயப் பிரச்சனையான ஊழலைப் பற்றிய படம் என்பதால் நிமிர்ந்து நில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர். அதேபோலொரு முக்கிய பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ஒகேனக்கல்.


ஒகேனக்கல் அழகும் ஆபத்தும் நிறைந்த பகுதி. அதேபோல் இப்படத்தின் கதையிலும் இவ்விரண்டும் இருக்கிறது. சீட்டு நடத்திவிட்டு ஏழைகளின் பணத்துடன் கம்பிநீட்டும் மோசடியை இப்படத்தில் விலாவரியாக காட்டுகிறார்கள். சீட்டு மோசடியால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறார்களாம். ஆபத்தான சீட்டு மோசடியுடன் அழகான காதலும் படத்தில் உள்ளது.


எழில் புரொடக்சன் சார்பாக மூன்று பேர் இணைந்து தயாரிக்க எம்.ஆர்.மூர்த்தி படத்தை இயக்கியுள்ளார். எம்.ஆர்.மூர்த்தி கன்னடத்தில் பிரபலமான பெயர். அங்கு மூன்று படங்களை இயக்கிவிட்டு தமிழகம் வந்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை, வசனமும் இவரே.


கதாநாயகனாக பாபு நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஜோதிதத்தா என்ற மும்பை நடிகை. இன்னொரு ஹீரோவாக ப்ருத்வி, அவருக்கு ஜோடி ஸ்ராவியா. இவர்களுடன் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.எஸ்.திருப்பதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


உமாபத்மநாபன், நளினி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், முத்துக்காளை, கிரன் மனோகர், காதல் தண்டபாணி, பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் என ஏராளமானோர் நடித்துள்ளனர். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்ய சரண் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அம்மாவா...? தபுவை கோபப்படுத்திய பெண் இயக்குனர்!

பல வருடங்களுக்கு முன்பே, மனசுக்குப் பிடித்த படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்தவர் தபு. மனசுக்குப் பிடித்திருந்தால் சின்ன வேடமானாலும், என்ன வேடமானாலும் நடிக்க தபு தயார். அதனை தவறாக புரிந்து கொண்டார் இயக்குனர் ஸோயா அக்தர்.


விஷயம் இதுதான். ஸோயா அக்தர் இயக்கும் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். அவரின் அம்மாவாக நடிக்க திறமையும், அழகும் கொண்ட நடிகை தேவை. ஸோயாவின் கெட்ட நேரம், அவர் மனதில் தபுவின் முகம் தெரிய, தைரியமாக அவர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினார்.


வந்த காரியத்தை சொன்னதும் தபுவின் முகத்தில் தாளிக்காமலே கடுகு வெடித்தது. ப்ரியங்கா சோப்ரா இன்று ஜோடியாக நடித்து வரும் முன்னணி நடிகர்களுடன் எல்லாம் ஒருகாலத்தில் தபுவும் ஜோடி போட்டிருக்கிறார். அதுவுமில்லாமல் 31 வயது ப்ரியங்காவுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு ஐம்பது வயதெல்லாம் இல்லை தபுவுக்கு. ஜஸ்ட் 42 தான்.


இதுக்கு மேல் இப்படியொரு ஆஃபருடன் வந்தால் அவ்வளவுதான் என்று அடித்து விரட்டாத குறையாக ஸோயாவை துரத்தியிருக்கிறார் தபு.


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த தபு அதற்குள் அம்மாவா? ஸோயா மீது நமக்கே லேசா கோபம் வருதே

அரிமா நம்பி எக்ஸ்க்ளுசிவ் தகவல்....!


விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்து வரும் அரிமா நம்பியின் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.


துப்பாக்கி படத்தின் போது முருகதாஸின் உதவி இயக்குனர்கள் இருவருக்கு படம் செய்ய வாய்ப்பளிப்பதாக தயாரிப்பாளர் தாணு வாக்குத் தந்திருந்தார். படம் வெளிவந்ததும், தான் சொன்னபடி முருகதா‌ஸ் உதவி இயக்குனர் ஆனந்த் சங்கரை இயக்குனராக்கினார். அந்தப் படம்தான் அரிமா நம்பி.


விக்ரம் பிரபு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் நம்ம ட்ரம்ஸ் சிவமணி. எனர்ஜியின் இன்னொரு பெயரான சிவமணி உலகம் முழுக்க பிரபலம் என்றாலும் அவர் ஒரு திரைப்படத்துக்கு இசையமைப்பது என்பது இதுவே முதல்முறை. சிவமணியின் பாடல்களையும், இசையையும் கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்துவரும் நிலையில் அடுத்த மாதம் - ஏப்ரல் 13ஆம் தேதி பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.


படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ.. இங்கே... திரையுலகம் 'ஷாக்'

திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ வெளியாகி திரையுலகினரை பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.


பேஸ்புக்கில் காட்டு தீ போல் இந்த வீடியோவும் அதுகுறித்த செய்தியும் பரவியது. இதை திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏ ஆர் முருகதாஸ் உருவத்தில் உள்ள ஒருவர், ஒரு இளம் துணை நடிகையுடன் படுக்கையில் இருப்பது போன்ற படம் அது.


இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ.. திரையுலகம் 'ஷாக்'


இதுகுறித்து முருகதாஸ் தரப்பில் கூறுகையில், அந்த வீடியோவில் இருப்பது முருகதாஸ் இல்லை, அவரைப் போன்றே உள்ள நபரை வைத்து பெயரையும், வளர்ச்சியையும் தடுப்பதற்காக இந்த நாச வேலையை செய்துள்ளனர்.


மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு தொடர முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.


இதுபோல திரையுலக பிரபலங்களை வைத்து ஏகப்பட்ட ஆபாசப் படங்கள் இதற்கு முன்பும் வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையையும் நாடியுள்ளனர். ஆனாலும் இப்படிப்பட்ட செயல்கள் புற்றீசல் போல தொடர்ந்து புறப்பட்டு வந்தபடியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளை நினைத்து கவலையில் நட்சத்திர தம்பதி!

கோலிவுட்டைச் சேர்ந்த நட்சத்திர தம்பதி ஒன்று தங்கள் குழந்தைகளை நினைத்து கவலைப்படுகிறதாம்.


கோலிவுட்டைச் சேர்ந்த இயக்குனரும், நடிகருமான அவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தார். தற்போதும் தமிழ், மலையாளம் என்று பல மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.


அவரது மனைவி பல ஆண்டுகள் கழித்து அண்மையில் தான் கோலிவுட்டில் ரீ என்ட்ரி ஆனார். ஒரு காலத்தில் அவரும் பெரிய ஹீரோயினாக இருந்தவர் தான்.

அவர்களின் மகளும், மகனும் பெற்றோரை போன்று ஜொலிக்கவில்லை. மகள் தான் அப்படி ஆயிற்று மகனாவது பெரிய ஆளாக வருவான் என்று எதிர்பார்த்தனர்.


ஆனால் மகனுக்கு கோலிவுட்டில் மவுசு இல்லை. இதனால் நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளை நினைத்து வருத்தப்படுகிறார்களாம்.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

கோச்சடையான் படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள ஆன்ட்ராய்ட் கிங்டம் ரன் கேமுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார். நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாராகும் முதல் படமான கோச்சடையானுக்கு ஆன்ட்ராய்ட் கேம் செயலியை உருவாக்கியுள்ளது ஹங்காமா நிறுவனம்.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

இந்த ஆண்டில் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள முதல் செயலி இது. காடு, துறைமுகம், பெரிய கோட்டைகளில் நடக்கும் சண்டையைப் போல இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

கோச்சடையான் ரஜினி தனி வீரனாக ஒரு படையையே எதிர்த்து ஜெயிப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது.

அதுவும் ரஜினியை முதல் முறையாக இந்த மாதிரி கேமில் பார்ப்பது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

வ்ரூவி மூலம் கோச்சடையான் Reign of Arrows என்ற இன்னொரு விளையாட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கேம் அறிமுகமான சில மணி நேரங்களிலேயே ஏராளமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

கூகுள் ப்ளே தளத்தில் இந்த விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ் நடிகர் ஒருவருக்கு இதுபோல விளையாட்டு உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

மதுஷாலினி நடிக்கும் பேய்ப் படம் கல்பனா ஹவுஸ்!

கல்பனா ஹவுஸ்.. கன்னடம், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இது. அடுத்து தமிழிலும் இதே பெயரில் வெளியாகிறது. அவன் இவன் மதுஷாலினிதான் படத்தின் நாயகி.


மைசூர் காட்டுக்குள் நடந்த திகிலூட்டும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. வேணு கார்த்திக், த்ரில்லர் மஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர். குமார் டைரக்டு செய்திருக்கிறார்.


மதுஷாலினி நடிக்கும் பேய்ப் படம் கல்பனா ஹவுஸ்


‘கல்பனா ஹவுஸ்' படத்தின் கதை பற்றி இயக்குநர் குமார் கூறுகையில், "பிரபல என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் விருந்தினர் மாளிகையில் வந்து தங்குகிறார்.


அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவர்களை பயமுறுத்துகின்றன. போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.


இதற்கு காரணம் அந்த பங்களாவில் இறந்துபோன ஒரு பெண்ணின் ஆவிதான் என்கிறார்கள். அதைக்கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உயிர் பிழைத்தார்களா? அல்லது ஆவியினால் பழிவாங்கப்பட்டார்களா? என்பதே கதை.


தரண் மூவிஸ் சார்பில் ஆர்.நாகராஜன் தயாரித்து வருகிறார். படத்தில் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக, பாடல்களே இல்லாத படமாக இது தயாராகிறது,'' என்றார்.

உத்தம வில்லன் கமலின் ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா!

கமல் நடிக்கும் உத்தம வில்லனில் அவருக்கு ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா நடிக்கின்றனர்.

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞராக கமல் நடிக்க அவரின் நெருங்கிய நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க ‘உத்தம வில்லன்' படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்தவரும் கமல்ஹாசன் தான்

உத்தம வில்லன் கமலின் ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா!

கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள். கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் கே.விஸ்வநாத் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார்.

மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குனராக கே.பாலச்சந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக திரு.கே.விஸ்வநாத்தும் நடிக்கின்றனர். 8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார். 21ஆம் நூற்றாண்டுக் கமலின் காதலியாக ஆண்ட்ரியா ஜெர்மையாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கொல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் பாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் கொக்கு செட்டியார் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க கமல்ஹாசன் மற்றும் விவேகா பாடல்களை எழுதுகின்றனர். ஒளிப்பதிவு ஷாம்தத், படத்தொகுப்பு விஜய் சங்கர். திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் படத்தை தயாரிக்கிறார்.

-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்கரையில் அனுஷ்காவுடன் கும்மாளம் போட்ட விராத் கோலி!! படங்கள் !

இந்தியாவின் முன்னணி வீரரான விராத் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராத் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் இணைந்து ஷம்பூ விளம்பரம் ஒன்றில் நடித்த போது தான் நெருக்கம் ஏற்பட்டதாம்.


இதனை தொடர்ந்து ஒன்றாகவே பல இடங்களுக்கும் சுற்றி வருகின்றனர். சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா சுற்றுப் பயணத்திற்கு முன்பாக அனுஷ்காவை சந்தித்து விட்டு தான் கோலி புறப்பட்டார்.


இந்நிலையில் இருவரும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.


அனுஷ்கா சர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார், ஆசிய கிண்ணப் போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோலி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றுள்ளதாக தெரிகிறது.


சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனராம்.


ஆசிய கிண்ணப் போட்டியில் இறுதி போட்டிக்கு கூட இந்தியா தகுதி பெறவில்லை, தோல்வி பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அனுஷ்கா சர்மாவுடன் இலங்கை கடற்கரையில் கும்மாளம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

கமல்ஹாசன் படத்தில் இருந்து காஜல் அகர்வாலை விரட்டியடித்த ஆண்ட்ரியா.

கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தை பற்றிய சில புதிய விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.


இந்த படத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார். ஒரு வேடத்தின் பெயர் உத்தமன். 8ஆம் நூற்றாண்டின் நாடககலைஞராக நடிக்கும் இவருக்கு ஜோடியாக ஊர்வசி நடிக்கிறார். மேலும் நாடகக்கலைஞரான உத்தமனை விரட்டி விரட்டி காதலிக்கும் அரசி வேடத்தில் பூஜா குமாரும், பூஜா குமாரின் தந்தையாக நாசரும் நடிக்கின்றனர்.


இன்னொரு கமல் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மனோரஞ்சன். இவருக்கு குருவாக கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் மனோரஞ்சனையும் ஒரு பெண் ஒருதலையாக விரட்டி விரட்டி காதலிக்கிறார். அவர்தான் பூ பார்வதி.


இரண்டு வேடங்களுக்கும் உள்ள ஒற்றுமையை அற்புதமான கிளைமாக்ஸில் விளக்க உள்ளார்களாம்.


முதலில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டதால், தயாரிப்பு தரப்பு அவரை நீக்கிவிட்டு, ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆண்ட்ரியா ஏற்கனவே விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களிலும் கமல்ஹாசனுடன் நடித்ததால், சம்பளம் குறித்து பேரம் பேசவில்லை. எனவே ஆண்ட்ரியாவையே இந்த படத்திலும் ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

நமீதா ஏன் அரசியலுக்கு வருகிறார் தெரியுமா?

நமீதா தேர்தலில் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


நமீதா அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.


இது குறித்து நமீதா கூறியதாவது:–


நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். 3 கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.


பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிட எனக்கு விருப்பம் உள்ளது. எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை இப்போது சொல்ல முடியாது.


அரசியல் கட்சியில் இணைந்த பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அதை விரைவில் எதிர் பார்க்கலாம். நான் அரசியலில் ஈடுபடுவதால் சினிமா வாழ்க்கை பாதிக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை. காரணம் இப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கவில்லை. நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் நடிப்பேன்.


தமிழக மக்கள் என் மீது நிறைய அன்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதேனும் திருப்பி செய்யும் நோக்கில் தான் அரசியலுக்கு வருகிறேன். தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். மக்களிடம் நிறைய அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தேர்தலில் நிறைய வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.


இவ்வாறு நமீதா கூறினார்.

”எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி” மன்சூர் அலிகான் பேச்சு!

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளியாக இருக்க முடியும் என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.


பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ''இந்த பாராளுமன்ற தேர்தலில், மக்களுக்கு அதிக ஆர்வம் இல்லை. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


”எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி” மன்சூர் அலிகான் பேச்சு


கோடி கோடியாக பணம் உள்ளவர்கள் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்கிற நிலை உள்ளது. சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் அரசியலுக்கு வருகிறார்கள்.


இந்த மண்ணின் மைந்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாரும் வரவில்லை. தமிழ்நாட்டில் இருந்து 40 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி போவார்கள். அவர்களில், 5 பேர் மந்திரிகளாகி விடுவார்கள். அந்த ஐந்து பேரும் இதற்கு முன்னால் மந்திரிகளாக இருந்தவர்கள் என்ன செய்தார்களோ, அதையே தான் இவர்களும் செய்வார்கள். தமிழர்களின் நலனுக்காக யாரும் உழைக்கப் போவதில்லை.


இந்த தேர்தலில், சில நடிகர்-நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு போகிறார்கள். சில நடிகர்-நடிகைகள் அரசியல் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பதை வரவேற்கிறேன். நக்மா, நமீதா, சோனா மூன்று பேருக்கும் வாழ்த்துகள்.


நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். முதலில் மிகுந்த கட்டுப்பாட்டோடு கட்சி ஆரம்பிக்கிறார்கள். போகப்போக அந்த கட்சிக்குள்ளும் குடும்ப அரசியல் நுழைந்து விடுகிறது. அப்புறம் ஊழல் என்கிறார்கள். ஊழலை ஒழிப்போம் என்கிறார்கள். அந்த ஊழல் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து சிறந்த இயக்கத்தில் இருந்து அழைப்பு வந்தால், நான் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்''என்று கூறியுள்ளார்.

நான் கர்ப்பமா இருக்கேன்னு வதந்தி பரப்புறாங்களே! - ப்ரியாமணி வருத்தம்!

தான் கர்ப்பமாக இருப்பதாக சிலர் வதந்தி பரப்புவதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார்.


பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் 'பருத்தி வீரன்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் பிரியாமணி.


நான் கர்ப்பமா இருக்கேன்னு வதந்தி பரப்புறாங்களே! - ப்ரியாமணி வருத்தம்


தமிழில் வந்த வாய்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு, தெலுங்கு -இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டினார். கடைசியில் சில கன்னடப் படங்களில்தான் நடிக்க முடிந்தது. இப்போது வாய்ப்புகள் இல்லாமல், மலையாளப் பக்கம் ஒதுங்கியுள்ளார்.


இந்த நிலையில் பிரியாமணி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு உலா வர ஆரம்பித்துவிட்டது.


இது உண்மைதானா என்று ப்ரியாமணியிடம் கேட்டபோது, "என்னைப் பற்றி மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.


நான் கர்ப்பமா இருக்கேன்னு வதந்தி பரப்புறாங்களே! - ப்ரியாமணி வருத்தம்


இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை. தமிழில் எனக்கு வாய்ப்புகள் இல்லை. முன்பு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான்தான் புறக்கணித்துவிட்டேன்.


இனி வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். படங்கள் இயக்கும் ஐடியாவும் இருக்கிறது," என்றார்.

பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட வெப் டிவி! மவுசு கூடுகிறது...!

பெண்களுக்காக பெண்கள் ஒரு தனி வெப் டிவியை ஆரம்பித்துள்ளனர்.


உலக மகளிர் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப் டிவிக்கு ஸ்த்ரீ என்று பெயர் சூட்டியுள்ளனர்.


இந்த வெப் டிவியில் முழுக்க முழுக்க பெண்களுக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகின்றன.


பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை வழி வகுக்கின்றன.


பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட வெப் டிவி!


அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சுய முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொள்கிறார்கள்.


ஒவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடம் என்ற அளவில் ஒரு நாளைக்கு மொத்தம் 24 பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் இந்த ஸ்திரீ டிவியில் ஒளிபரப்பாகின்றன. ஆரம்பத்தில் தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை தர உள்ள இந்த ஸ்த்ரீ டிவி வெகு விரைவில் பல மொழிகளிலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தர உள்ளது.


இந்த ஸ்த்ரீ டிவி இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒளிபரப்பாகும். அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்த்ரீ டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்தவித இணைய வேக தடங்களும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.

ரஜினிக்கு வில்லனா? அழைப்பு வரவில்லை

ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வரவில்லை என்றார் சுதீப். ‘நான் ஈ‘ படத்தில் நடித்தவர் சுதீப். தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.


இதுகுறித்து சுதீப் கூறியதாவது: டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் புதிய ஸ்கிரிப்டுடன் என்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகியது உண்மைதான்.


நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்பே ரஜினியை வைத்து படம் இயக்க ரவிகுமார் முடிவு செய்துள்ளார்.


ரஜினியின் உடல்நலன் கருதி நான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே ரஜினி படத்தை தொடங்க உள்ளதாக கூறினார். ஓ.கே சொல்லிவிட்டேன். இப்படத்தில் நான் ரஜினியின் வில்லனாக நடிக்க உள்ளதாக என்னுடைய பெயர் இணைய தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது.


ஆனால் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் என்னிடம் கேட்கவில்லை.


ரவிகுமாருடன் எனது பட ஷூட்டிங் மே அல்லது ஜூனில் தொடங்கும். முன்னதாக ரஜினி படத்தை தொடங்குகிறார் ரவிகுமார். இவ்வாறு சுதீப் கூறினார் 

இந்தின்னா உதட்டு முத்தமும் ஓகே

இந்தியில் நடிக்க ஆரம்பித்த பிறகு தென்னிந்திய படங்களை திரும்பிப் பார்ப்பதில்லை இலியானா. இந்தியில் பிடித்து நிற்க எந்த எல்லைக்குச் செல்லவும் அவர் தயார்.


தற்போது டேவிட் தவான் இயக்கத்தில் மெய்ன் தேரே ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பது வருண் தவான். அவருக்கு இரு ஜோடிகள் இலியானா மற்றும் நர்கிஸ் பக்ரி.


இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டில் நடிக்கையில் உடன் நடிக்கும் நடிகையிடம் கவனமாக இருக்க வேண்டும். கவர்ச்சியைக் காட்டி சட்டென்று நம்மை பின்னுக்கு தள்ள வாய்ப்புள்ளது. அதுவும் எதற்கும் துணிந்தவர் நர்கீஸ் பக்ரி.


கதைப்படி வருண் தவான் இலியானாவுக்கு உதட்டில் முத்தம் தரும் காட்சி படத்தில் வருகிறது. குறிப்பிட்டக் காட்சியில் நடிக்க இலியானாவுக்கு தயக்கம் இருந்தாலும் நர்கீஸ் படத்தில் இருப்பதால் இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும் பாய்ந்து வருண் தவானுடன் பசைபோல் ஒட்டிக் கொண்டாராம்.


படத்தைப் பார்த்தாலே அவர் எவ்வளவு இன்வால்வ்மெண்டுடன் சொன்ன வேலையை செய்கிறார் என்பது புரியும். இந்தியில் காட்டுகிற இன்வால்வ்மெண்ட்டில் கொஞ்சம் இங்கேயும் காமிக்கலாம்.

முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல...?

அஜீத்துக்கு தல என்று அடைமொழி உருவாக காரணமாக இருந்தவர் முருகதாஸ். அவரின் முதல் படம் தீனாவில் அஜீத்தை அவரது அல்லக்கைகள் தல என்றுதான் அழைப்பார்கள். வத்திக்குச்சி பாடலில் மகாநதி சங்கர், தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது என்று ஒரு வசனமும் பேசுவார்.


சரி, அதுக்கென்ன இப்போ? காரணம் உள்ளது. இதே பெயரில், அதாவது தல என்ற பெயரில் அஜீத் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்கப் போவதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலவுகிறது.


வாலி படத்தில் அஜீத் நடித்த போது முருகதாஸ் அப்படத்தின் உதவி இயக்குனர். அப்படிதான் தீனா படத்தில் அஜீத்தை இயக்கும் வாய்ப்பு முருகதாஸுக்கு கிடைத்தது. அப்போது மிகவும் சின்னப் பையனாக இருந்ததால் ஷாட் வைப்பதற்கு முருகதாஸ் திணறியதாகவும் முதல் சில தினங்கள் அவரின் குருநாதர் எஸ்.ஜே.சூர்யாதான் ஷாட் வைத்தார் எனவும் சிலர் மலரும் நினைவுகளில் நினைவுகூர்கிறார்கள்.


படத்தின் ரிசல்ட் எப்படியிருக்குமோ என்று முருகதாஸ் படம் வெளியான போது தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்றுவிட்டார். படம் பிக்கப்பான செய்தி அறிந்த பிறகே அவர் சென்னை திரும்பினார்.


இப்படி முதல் படத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால்தான் முருகதாஸும், அஜீத்தும் மீண்டும் இணையவில்லை என கூறப்பட்டது.


அதெல்லாம் பழைய கதை. இன்று முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க இந்தியாவின் டாப்மோஸ்ட் நடிகர்கள் காத்திருக்கின்றனர். அஜீத்துடன் பணிபுரிய முருகதாஸும் தயார். அதனால், முருகதாஸ் அஜீத்துக்காக தல என்ற ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார் என்பதில் உண்மை இருக்க அதிக சாத்தியமுள்ளது. இன்னும் சில தினங்களில் தல யின் உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வரும்.

ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி - உறுதி செய்த சுதீப்..!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதனால் என்ன. சம்பந்தமில்லாத நடிகர் சுதீப் அவர்கள் இணைந்து படம் செய்வதை உறுதி செய்துள்ளார்.


இந்தியில் சஞ்சய் தத்தை வைத்து இயக்கிய படம் அட்டர் பிளாப்பான பிறகு சுதீப்பை ஹீரோவாக்கி புதிய படத்தை ஆரம்பிக்கும் வேலையில் இறங்கினார் ரவிக்குமார். இந்த நேரத்தில்தான் ரஜினியை ரவிக்குமார் இயக்குகிறார் என செய்தி வெளியானது. அதனை ரவிக்குமார் மறுத்தார்.


இது நடந்த சில வாரங்களில் நிலைமை மாறியது. ரஜினியே அழைத்து ரவிக்குமாரிடம் புதிய படம் குறித்துப் பேசினார். ரவிக்குமாரும் ரஜினியை இயக்க சம்மதித்தார். ரஜினியின் தற்போதைய உடல்நிலையை சுதீப்பிடம் எடுத்துக் கூறிய ரவிக்குமார், ரஜினி படத்தை முடித்துவிட்டு சுதீப் நடிக்கும் படத்தை தொடங்கலாம் என கூறியுள்ளார். சுதீப்பும் அதனை ஒத்துக் கொண்டார்.


இந்தத் தகவலை மீடியாவிடம் பகிர்ந்து கொண்ட சுதீப், ரஜினி படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக இணையத்தில் செய்தி பார்த்தேன். ஆனால் ரஜினி படத்தில் நடிக்கக் கேட்டு இன்னும் யாரும் என்னை அணுகவில்லை என கூறினார்.


சுதீப் கூறியிருப்பதிலிருந்து ரவிக்குமார் ரஜினியை இயக்கவிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.