Thursday, 13 March 2014

மருதநாயகமும் - கமலின் அதிரடி முடிவும்!



நம்ம கமல்ஹாசன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கைவிட்டஒரு படம் மருதநாயகம் அந்த படத்தை மீண்டும் அவர் இயக்க போவதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் கிளம்பியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற ஒரு போர் வீரரைப் பற்றிய சரித்திரப் படம் தான் இந்த மருதநாயகம்.


பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் கையால் தொடங்கி வைக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. கோடம்பாக்கத்தின் அணைத்து முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட பெரிய திரையுலக விழாவாக இருந்தது அன்றைய தேதிக்கு இந்திய ரூபாய் 50 கோடி தேவைப்படுவதாக கமல் அறிவித்திருந்தார்.. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த படப்பிடிப்பு நிதிச் சிக்கலில் விழ திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


படத்துக்கு முதலீடு செய்வதாகக் கூறிய வெளிநாட்டவர்கள், நம்பிக்கையின்றி கைவிரித்துவிட்டதாகவும், தானே அந்தப் படத்தை தயாரிக்கும் அளவு சூழல் உருவானதும் மீண்டும் படத்தைத் தொடங்குவேன் என்றும் கமல் அறிவிக்க அத்தோடு அந்த திரைப்படம் செய்திகளில் அடிபடுவது குறைந்தது, இருந்த போதிலும் சில பல சமயங்களில் கமல் ஏதாவது அந்த படத்தை பற்றி அங்கும் இங்குமாக சொல்லி கொண்டிருப்பது வழக்கமாக இருந்தது. தற்போது ‘விஸ்வரூபம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார்.


விஸ்வரூபம் வெற்றியும், வெளிநாடுகளில் அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பும் மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை அவருக்கு உருவாக்கியுள்ளது. அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்தப் படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்களாம். எனவே, லிங்குசாமி படம் முடிந்த பிறகு இந்த மருதநாயகத்தை மீண்டும் கையிலெடுப்பார் கமல் என்கிறார்கள்.


இந்த செய்தி உண்மையா என்பது போக போக தெரியும்…ஆனால் கமலஹாசன் இயக்கத்தில் அது போன்ற ஒரு சரித்திர படம் பார்க்க வேண்டும் என்பது உங்களை போல அனைத்து கோடம்பாக்க ரசிகர்களுக்கும் நிச்சயம் இருக்கும் 

காப்பி அடித்தேனா? உத்தம வில்லன் பற்றி கமல் பதில்!

பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வெளிவந்தவை என்ற சிறப்பு பெற்றவை கமல்ஹாசனின் படங்கள். ஆனால் சமீபகாலமாக ஒரே ஒரு போஸ்டர் வெளியிட்டதற்கே பலவித விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார் கமல்ஹாசன்.


’தெய்யம்’ எனப்படும் கேரளாவின் பாரம்பரிய நடனக் கலைஞரைப் போன்று முகத்தில் ஓவியம் வரைந்து கமல்ஹாசன் வெளியிட்டிருந்த போஸ்டர் பிரெஞ்சு ஃபோட்டோகிராஃபர் ஒருவரின் ஃபோட்டோவிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று எழுந்த விமர்சனங்களுக்கு, சமீபத்தில் மும்பையில் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் பதிலளித்திருக்கிறார் கமல்.



இதுகுறித்து பேசிய கமல் “தெய்யம் என்பது 1000 வருடங்கள் பழமை வாய்ந்த கலை. இந்த கலையில் இயங்கிவரும் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவரால் இந்த ஓவியம் என் முகத்தில் 4 மணிநேரமாக வரையப்பட்டது. இரு காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒரே திசையில் பார்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் ஏக் துஜே கே லியே’ திரைப்படத்தின் போஸ்டரைப் பார்த்து காப்பி அடித்தார்கள் என்று சொல்லிவிடமுடியுமா?



தெய்யம் என்பது ஒவ்வொரு தலைமுறையினரிடமிருந்தும் அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்துவரப்படும் பழமை வாய்ந்த கலை” என்று கூறியுள்ளார். உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிகர் ஜெயராமும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

உத்தமவில்லனுக்கு 60 நாட்கள் பிறகு திரிஷ்யம்! கமலின் ரகசிய திட்டம்!

கடந்த இரண்டு வருடங்களாக விஷ்வரூபம் திரைப்படத்தின் பணிகளில் மூழ்கியிருந்த கமல்ஹாசன் தற்பொழுது விஷ்வரூபம் - 2 படத்தின் பணிகளையும் முற்றிலும் நிறைவு செய்துவிட்டு அடுத்த படமான உத்தமவில்லன் திரைப்படத்தின் நடித்துவருகிறார்.


கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கிவரும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார் கமல்ஹாசன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெங்களூருவில் துவங்கின.


கமலின் குருவான கே.பாலச்சந்தரின் அறிவுரையின் பேரில் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடித்துவிடவேண்டும் என்று உறுதியெடுத்திருக்கும் கமல்ஹாசன் உத்தமவில்லன் திரைப்படத்திற்கு 60 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளாராம்.



உத்தமவில்லன் திரைப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் மெஹா ஹிட்டான திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஜூன் மாதம் துவங்கவுள்ளன.



உத்தமவில்லன் திரைப்படத்தில் விஷ்வரூபம் நாயகிகளான ஆண்ட்ரியா, பூஜா குமார் மற்றும் மரியான் நாயகியான பார்வதி மேனன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

வாயை மூடி பேசவும் - லேட்டஸ்ட் அப்டேட்...!

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் இயக்குனர் பாலாஜி மோகனின் இரண்டாவது படம் வாயை மூடி பேசவும்.


இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டை மார்ச்14ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர்.


இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் மணிரத்னம் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உள்ளார்.


வாய் மூடி பேசவும் படத்தில் டல்கர் சல்மான் நாயகனாகவும், நசிரியா நசிம் நாயகியாகவும் நடித்துள்ளனர்.


நான் சிகப்பு மனிதன் ஆடியோ வெளியீடு மற்றும் வாயை மூடி பேசவும், என இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்த நாளில் வெளியாகவுள்ளது.


எனவே இந்த இரண்டு படங்களுக்கிடையே போட்டிகள் நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கைகோர்க்கும் மூன்று துருவங்கள்..!

டுவன்ட்டி20 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மோலிவுட்டில் இணைந்து நடிக்கவுள்ளனர் மம்முட்டி, மோகன்லால் மற்றும் கமல்ஹாசன்.


ஜோஷி இயக்கத்தில் வெளிவந்த டுவன்ட்டி20 பல நட்சத்திரங்களுக்கு பெயர் சொல்லும்படி அமைந்திருந்தது.



மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், பிரித்திவிராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை தயாரித்துள்ளார் திலீப்.



கமலஹாசன், மம்முட்டி, மோகன்லால் வைத்து டுவன்ட்டி20 படம் போல் மீண்டும் ஒரு படம் தயாரிக்க திட்டம் தீட்டி வருகிறார் திலீப்.



ஆனால் இன்னும் எதுவும் உறுதிசெய்யப்படவில்லை என மோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

நிருபரின் வாயடைத்த கவுண்டமணி! நிகழ்ந்தது என்ன?

சுமார் இரண்டு மூன்று வருடங்களாக வெளித்திரையிலிருந்து தள்ளி நின்ற கவுண்டமணி தற்போது 49ஒ நடித்து வருகிறார்.


சாதாரணமாகவே பேட்டி என்றாலே விரட்டி ஒட விடும் இந்த பஞ்ச் நாயகன், அண்மையில் தனியார் வார இதழில் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார்.


49ஒ ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளப்படம் இது ஒரு விவசாயம் பற்றிய படம் இதில் முழுக்க முழுக்க விவசாயத்தை மையப்படத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன் என்றுள்ளார்.


கடைசியாக எந்தப்படம் பார்த்தீர்கள் என நிருபர் கேட்ட கேள்விக்கு நான் படங்கள் பார்ப்பதில்லை.


தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என எந்த மொழியிலும் படம் பார்ப்பதில்லை ஹாலிவுட் படங்களை தவிர என கூறியிருக்கிறார்.


ஏன் என மீறி கேட்டதுக்கு ஏன் பார்க்கனும் என்பதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் பின் ஏன் பார்க்கவில்லை என்பதற்கு நான் பதில் சொல்கிறேன் என்று கேட்டுள்ளார்

மீண்டும் திரையுலகில் கலக்குவார் - நானி !

வெப்பம் படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான நானி, ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இந்த படங்களுக்கு பிறகு தெலுங்கில் பைசா என்ற படமும், தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படமும் நடித்திருந்தார். ஆனால் இவ்விரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது.


கடந்த ஆண்டு நானிக்கு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு திரைப்படமும் அவருக்கு சரியான வெற்றியை தரவில்லை.



எனவே இப்போது நானியின் மூன்றாவது படம் ஜென்டபை கபிராசு படம் வெளியிட பிரச்சனைகளை எதிர்க்கொண்டுள்ளது.



பைசா, ஆஹா கல்யாணம் படங்கள் தோல்வியை அடைந்துள்ளதால் இந்த படத்தினை வெளியிட தயங்குகின்றார் தயாரிப்பாளர்.


இதனை பார்க்கையில் நானி தனது படங்களுக்கு சரியான திட்டம் போடவில்லை என்று தான் தெரிகிறது.


நானி விரையில் ஒரு வெற்றி படத்துடன் மீண்டும் திரையுலகில் கலக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிங்கம் படத்தை வெறுக்கும் - சூர்யா! காரணம் என்ன..?

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் திரைப்படத்தின் நடித்துவரும் சூர்யா, இப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.


வெங்கட் பிரபு படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படத்திற்குக் கதை சொல்லும் இயக்குனர்கள் பெரும்பாலும் சிங்கம் படத்தின் பாணியிலேயே கதை சொல்வதாகவும், அப்படம் மாதிரியான கதைகளைத் தன்னிடம் கூற வேண்டாம் என்று சொல்லிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


சூர்யாவின் கேரியரில் சிங்கம் மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்கள் மிக முக்கியமான பங்களிப்பினைச் செய்துள்ள படங்களாகும்.


குறிப்பாக சிங்கம்-2 படம் ஆந்திராவில் சக்கைப்போடு போட்டு, தெலுங்கு ரசிகர்களையும் இவருக்குப் பெற்றுத்தந்தது.


ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்பதால் சூர்யா இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


தற்பொழுது சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ளன.


இதுவரை படம்பிடிக்கப்பட்டுள்ள காட்சிகளால் சூர்யா மிகவும் திருப்தியாக இருப்பதாக் கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட்டில் இப்படத்தினை வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.


அஞ்சான் திரைப்படத்தில் முதல் முறையாக சூர்யா- சமந்தா ஜோடி சேர்ந்துள்ளனர்.

ஓவர் கான்பிடென்ட் காட்டிவரும் நான் சிகப்பு மனிதன்!

விஷால் - லக்‌ஷ்மிமேனன் இணைந்து நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நிகழ்ந்தது.


அதிவேகமாகப் படப்பிடிப்புக்களை நிறைவு செய்துள்ள படக்குழு, அதே வேகத்தில் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி படத்தினை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.


இப்படத்தின் ஆரம்பம் முதலே இதன் மீதான எதிர்பார்ப்புக்கள் எகிறிவருகின்றன. இப்படத்தின் படுவேகமாக நிறைவடைந்துள்ள படப்பிடிப்புக்கள், அட்டகாசமான ட்ரெய்லர் மற்றும் இன்று வெளியாகியிருக்கும் நெக்ஸ்ட் ஜெனரேசன் இசை என்று கூறப்படும் இசை ஆகிய அனைத்துமே எதிர்பார்ப்பினைக் கூட்டிவருகின்றன.


அத்துடன் ஏப்ரலில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எங்களின் கதை மற்றும் திரைக்கதையின் மீது நம்பிக்கை இருப்பதால், கோச்சையானைப் பற்றிக் கவலையில்லை என்று கூறியிருக்கும் படக்குழுவின் நம்பிக்கையும் மக்களிடம் பரபரப்பினை
ஏற்படுத்தியுள்ளது.


விஷால் பிலிம் பேக்டரி மற்றும் யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தினை, விஷாலில் தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் சமர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கியுள்ளார்.


இவ்வளவு ஓவர் கான்பிடென்ஸ் காட்டிவரும் நான் சிகப்பு மனிதன் திரை

ஜெயிக்கப்போவது குருவா..? சிஷ்யனா..?

தமிழ் சினிமாவை கலக்கிய காமெடியன்களில் கவுண்டமணி, வடிவேலு ஆகிய இருவருக்கும் தனி இடம் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர்கள், தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.


கவுண்டமணி, வாய்மை, 49ஓ ஆகிய படங்களிலும், வடிவேலு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்திலும் தற்போது நடித்துள்ளனர்.


 இதில் கவுண்டமணி நடித்த 49ஓ, வடிவேலுவின் தெனாலிராமன் படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதனால், ஏப்ரல் மாதம் அப்படங்களை வெளியிடும் முயற்சிகள் நடக்கிறது.


இதே மாதத்தில் ரஜினியின் கோச்சடையான், விஷாலின் நான் சிகப்பு மனிதன், சிவகார்த்திகேயனின் மான்கராத்தே உள்பட பல படங்கள் திரைக்கு வர உள்ளன.


 என்றாலும், ஒரே நேரத்தில் இரண்டு மெகா காமெடியன்கள் நடித்த படங்கள் வெளியாவதால், இவர்களுக்கிடையேயும் ஒரு போட்டியை உருவாக்கி விட்டு பரபரப்பு கூட்ட முடிவு செய்துள்ளனர்.


அதனால் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தடபுடலாக நடைபெறும் கட்அவுட் கலாசாரம், மேற்படி காமெடியன்களின் படங்கள் வெளியாகும்போது உருவாகும் என்று தெரிகிறது.

குக்கூவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு! யூ சான்றிதழும் வரிவிலக்கும் கிடைத்தது..!


திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் குக்கூ. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராஜுமுருகன் இயக்கி உள்ளார். இவர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருந்தவர்.


அண்மையில் நடந்த இதன் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட பாடல்களும், டிரைலரும் படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


மேடையிலேயே நடிகர் சூர்யா, ராஜுமுருகனுக்கு தலைவணங்கி மரியாதை செய்தது படத்தின் மதிப்பை இன்னும் கூட்டியிருக்கிறது.


குக்கூவை பார்த்த தணிக்கை குழுவினரும் இயக்குனரை மனதார பாராட்டி உள்ளனர். யு சான்றிதழும் வழங்கி உள்ளனர். இன்னும் ஒருசில நாட்களில் வரிவிலக்கும் கிடைத்து விடும்.


 அட்டகத்தி தினேஷூடன் மாளவிகா என்ற புதுமுகம் நடித்துள்ளார். நெரிசலும், இரைச்சலும், நிறைந்த சென்னை நகரத்தில் வாழும் இரு பார்வையற்றவர்களின் காதல் கதை.


அந்த காதலோடு பார்வையற்றோர்கள் வாழும் உலகத்தை காட்டுகிற படம். வருகிற 21ந் தேதி ரிலீசாகிறது.

உத்தமவில்லனில் மெகா காமடி கூட்டணி... கலக்கும் கமல்!

ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்தால் அதற்கடுத்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்வதற்காக ஒரு காமெடி படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் கமல்.


விஸ்வரூபம் படத்தைப்பொறுத்தவரை அடுத்தடுத்து இரண்டு பாகங்களையும் இயக்கியதால் அடுத்து காமெடி படம் அமையவில்லை. ஆனால் இப்போது நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் காமெடியில செம கலக்கு கலக்கப்போகிறாராம் கமல்.


அதனால் தன்னுடன் தெனாலி, பஞ்சதந்திரம் படங்களில் நடித்த மலையாள நடிகர் ஜெயராமையும் இந்த படத்தில் தன்னுடன் கூட்டணி சேர்த்திருக்கும் கமல், அப்படத்தை இயக்கும் ரமேஷ் அரவிந்தையும் இப்போது இணைத்துள்ளார்.


 ஏற்கனவே பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் ஜெயராம், ரமேஷ் அரவிந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பவர்கள் என்பதால், இந்த படத்தில் அவர்களின் காமெடி கூட்டணி சூப்பராக ஒர்க் அவுட்டாகியுள்ளதாம்.


தற்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கலகலப்பான காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுக்கொண்டிருப்பதால், அக்கம் பக்கம் கவனத்தை சிதற விடாமல் நடித்து வருகிறார் கமல்.


 அதனால் தெனாலி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம் படங்களை மிஞ்சும் வகையில் நூறு சதவிகிதம் காமெடியை கொடுத்து ரசிகர்களின் வயிற்றை உத்தமவில்லன் பதம் பார்ப்பார் என்று இப்போதே கியாரண்டி கொடுக்கிறார்கள்.

லட்சுமி மேனனுக்காக விஷால் - விஷ்ணுக்குயிடையே பெருஞ்சண்டை!

பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷால் - லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள படம் ''நான் சிகப்பு மனிதன்''. திரு இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி மேனன் முதன்முறையாக முத்தக்காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார்.


இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(மார்ச் 13ம் தேதி) சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் விஷ்ணு, விக்ரகாந்த் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


அப்போது விழாவில் பேசிய விஷ்ணு, விஷாலிடம், 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் ஷூட்டிங்கை காண, நான் வருகிறேன் என்று கூறினேன். விஷால் பலமுறை தட்டி கழித்தார். பின்னர் அவரே ஒருநாள் என்னை வர சொன்னார்.


அங்கு விஷால், லட்சுமி மேனனுக்கு தடபுடலாக விருந்து வைத்து கொண்டிருந்தார். நான் லட்சுமி மேனனை பார்க்க எண்ணினேன், ஆனால் கடைசிவரை என்னை, லட்சுமி மேனனை பார்க்கவே விஷால் விடவில்லை. விஷால் என்ன லட்சுமி மேனனுக்கு பாதுகாவலரா என்று நகைச்சுவையாக கேட்டார்.


விஷ்ணுவுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால், விஷ்ணு தானாக இப்படி பேசவில்லை. யாரோ பேசச்சொல்லி கேட்பது போன்று தோன்றுகிறது. நான் ஹீரோயின்களை ரொம்பவே மதிக்கிறேன். பாலா சாரின் அவன் இவன் படத்தில் நடித்தபோது பெண்கள் மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது.


அந்தப்படத்தில் பெண் வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்பதற்காக பாலா சார் எனக்கு 10 நாட்களுக்கு மேல் பயிற்சி கொடுத்தார். பெண்களின் நடை, உடை, பாவனை எப்படி என்று கற்றுக்கொள்ள அவர்களிடம் நேரடியாக பழகவிட்டு எனக்கு பயிற்சி கொடுத்தார். பெண் போன்று நடிப்பதற்கு நான் கிட்டத்தட்ட ஒருவாரம் ஆனது. அப்போது முதல் பெண்களின் மீதான மதிப்பு எனக்கு கூடிவிட்டது.


லட்சுமி மேனன் மிகவும் சின்னப்பொண்ணு, அவர் பயந்த சுபாவம் உடையவர். விஷ்ணுவின் அப்பாவோ ஐ.ஜி.யாக இருப்பவர். விஷ்ணு சும்மா எதேச்சையாக லட்சுமியிடம் பேசப்போக அவர் ஈவ்டீசிங் என பயந்து போலீஸை கூப்பிட்டுவிட்டால், பிறகு விஷ்ணுவின் அப்பாவான ஐ.ஜி.யே தன் மகனை கைது செய்து அழைத்து போக நேரிடும். அப்படி ஒரு விபரீதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் விஷ்ணுவை, லட்சுமி மேனனை பார்க்க நான் அனுமதிக்கவில்லை என்று நகைச்சுவையாக கூறினார்.