Sunday, 2 February 2014

மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!

 Methods of Laptop Maintenance.! மடிக்கணினி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்பவர்கள் (Business mans), சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். லேப்டாப்பின் வளர்ச்சி அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது.

 லேப்டாப்பானது பல்வேறு அளவுகளில், சிறிதும் பெரிதுமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு கொண்டுள்ளன. பொதுவாக லேப்டாப்பை அனைவருமே விரும்பக் காரணம் எடை குறைவு, எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடிவது என காரணங்களை வரிசையாக அடுக்கலாம். இதனால்தான் மடிக்கணினியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் எத்தனைப் பேர் முறையாக மடிக்கணினியைப் பராமரிக்கின்றனர் என்பதுதான்.

மடிக்கணினியை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு எந்த ஒரு செலவும் செய்யாமல், எந்த பிரச்னையும் வராமல் வருடக்கணக்கில் புதிய மடிக்கணியின் (new laptop computer ) செயல்பாட்டை வேகத்தை உங்களால் பெற முடியும். இதற்கு குறிப்பிட்ட பராமரிப்பு வேலைகளை (Maintenance) தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக பரிமரித்தால் நிச்சயம் உங்களுடைய மடிக்கணினிக்கு ஆயுள் கூடும்.


மடிக்கணினியை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? 
Methods of Laptop Maintenance

    குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System த்தை புதுபிக்கவும்.
    மடிக் கணினிக்கு -ற்கு Battery மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும்.


    குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். (உ.ம் - வெளியூர் செல்லும் நாட்கள்) remove battery in the laptop if you have not work on laptop two or three days  மடிக்கணினிக்கான உறை பையை (Use Laptop Bag) பயன்படுத்துவது உங்கள் மடிக்கணினிக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.


    மடிக் கணினியில் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற, அதற்கு தகுந்தாற் போல் உள்ள சமமான இடத்தில் வைத்து பணியாற்ற வேண்டும்.
    மடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்துங்கள். (Use Laptop Stand)


    அதிக தூரப் பயணங்களின் போது பயணித்தவாறே லேப்டாப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
    லேப்டாப்பிற்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger)பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High power flow) காரணமாக உங்களுடைய லேப்டாப் செயலிழந்து போகலாம்.


    மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லேபேட்டரி சிக்னல் கிடைத்தப் பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும்.
    முடிந்தளவு மடிக்கணினி இயக்கவிட்டு, அதில் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். (do not charge laptop battery while working on laptop.)


    மடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்னை என்றாலும் கூட, அதை நாமாவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்னையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே தெரியாத ஒன்றை செய்ய லேப்டாப் பொறுத்தவரை முயற்சிக்க கூடாது.


    மடிக்கணினியின் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்த கூடாது.(Do not change the battery from a laptop to another laptop) ஒரு லேப்டாப்பிற்கான பேட்டரியை அதே லேப்டாப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு

'இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது.

பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.

10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.

வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து. விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும்!''

வெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன?

அந்தப் புதிய முயற்சியிலே, அவர் வெற்றி அடைவாரா அல்லது தோல்வி அடைவாரா என்பதை எப்படித் தீர்மானிப்பது?

‘நாம் வெற்றியே அடைவோம்’ என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வலுவாக இருக்க வேண்டும். இருந்தால் அவர் முழு வெற்றியை அடைவார், உறுதி.

நாம் வெற்றி அடைவோமோ, மாட்டோமோ என்ற அரைகுறையான நம்பிக்கையாக அது இருந்தால் அடையக் கூடிய வெற்றியும் அரைகுறையான வெற்றியாகத்தான் இருக்கும்.

முயற்சியில் குதித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும்போதே, தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது? தோல்வி அடைந்துவிட்டால் நிலைமை இப்போது இருப்பதைக் காட்டிலும் படுமோசமாகப் போய்விடுமே என்று சந்தேகப்பட்டால் - என்று பயந்தால் தோல்விதான். வெற்றி கிடைக்கவே கிடைக்காது.

சுருக்கமாகச் சொன்னால்…

ஒரு மனிதன் தனக்கு என்ன நடக்கும் - எது கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறானோ அதுவே அவனுக்கு நடக்கும். அதுவே அவனுக்குக் கிடைக்கும்.

நன்மைகளை நாம் அடைந்தே தீருவோம். வெற்றிகளை நாம் குவித்தே தீருவோம் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் உறுதியாக இருக்க வேண்டும். வேரூன்றி விளங்க வேண்டும்.

‘நமக்கு எங்கே நன்மைகள் வரப்போகின்றன. நமக்கு மேலும் மேலும் சிரமங்கள்தாம் வந்து கொண்டிருக்கும்,’ என்று மனத் தளர்ச்சியோடு நாம் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தால் நாம் எதிர்பார்க்கிற துன்பங்களும், துயரங்களுமே நம்மைச் சூழும்; மேலும் மேலும் சூழும், சூழ்ந்து சூழ்ந்து நம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

நம்மிடத்திலே நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நாம் நன்மைகளையோ உயர்வுகளையோ ஒருநாளும் பெறமுடியாது.

இதே கருத்தைத்தான், மனம்போல வாழ்வு என்ற பழமொழி பேசுகிறது.

தீயசக்திகள் படுவீழ்ச்சி அடைந்துவிடும். இது உறுதி. தீயசக்தியின் அந்த வீழ்ச்சி நாளை எதிர் நோக்கி அமைதியாகக் காத்திருந்தால் நம்முடைய தன்னம்பிக்கை நம்மைவிட்டுப் போகாது!

வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழந்தவர்களின் மனம் தூய வழிகளில் செல்லாது. தீய வழிகளில்தான் அவர்களுடைய புத்தி போய்க் கொண்டிருக்கும். அவர்கள் தீய செயல்களிலேயே ஈடுபடத் தொடங்குவார்கள். தீய செயல்கள் மனிதனை மேலும் மேலும் கோழையாக்கி, அவனை உருத்தெரியாமல் அழித்துவிடுகின்றன

ANDROID APPS ஐ நம் கணிப்பொறியில் இயங்க வைக்கும் வழிமுறைகள்!

 இன்று மிகவும் பிரபலமான மொபைல் இயங்குதளம் "ANDROID" ஆகும் .இதன் முக்கிய சிறப்பு அம்சம் தொடு திரையில் இதனை இயக்குவது மேலும் எண்ணற்ற மென்பொருள்கள் இலவசமாக கிடைப்பது இதன் பலத்தை மேலும் அதிகப்படுத்துகிறது

அப்படி பட்ட "ANDROID" இயங்குதளத்தை மொபைல் போனில் மட்டும் தான் இயக்கமுடியுமா ? நமது கணிப்பொறியில் இயக்கமுடியாத என குழப்பத்தில் இருப்பவருக்காக இப்பதிவை சமர்பிக்கிறேன்
முதலில் இங்கு சென்று" DOWNLOAD" கிளிக் செய்ததும்  விண்டோஸ் தோன்றும்

அதில் எந்த இயங்குதளத்தை நாம் பயன் படுத்துகிறோம் உதராணமாக விண்டோஸ் இயங்குதளம் என்றால் விண்டோஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும் மேக் இயங்குதளம் என்றால் மேக் என்பதனை தேர்வு செய்து கொள்ளவேண்டும் இங்கு நாம் பெரும்பாலம் பயன்படுத்தப்படும் இயங்குதளம் விண்டோஸ் என்பதால் விண்டோஸ் ஐ தேர்வு செய்துள்ளேன்

அடுத்தபடியாக இந்த மென்பொருள் ஆனது பகுதி பகுதியாக நிறுவ வேண்டும் முதல் பகுதி நிறுவப்பட்டதும் அடுத்தது தானாக நிறுவிக்கொள்ளும் .

இவ்வாறு நிறுவப்படுவதிற்கு காரணம் நமது கணிப்பொறி யானது இந்த மென்பொருளை இயக்க வல்லதா என்று சோதனை செய்த பிறகே நிறுவப்படும்

சோதனைக்கு பிறகு மேலே உள்ளது போன்று விண்டோ வானது தோன்றும்
அதில் நமக்கு பிடித்த மென்பொருளை எப்படி மொபைல் யில் இயக்குகின்றோமோ அதே போன்றே விண்டோஸ் இல் இயக்கமுடியும்

ஒரு வழிய இன்ஸ்டால் பண்ணியாச்சி இப்போ கொஞ்ச விளையாடி தான் பாக்கலாமே !!!

ANDROID GAMES லேயே மிகவும் பிரபலமானது "TEMPLE RUN" இதை விளையாடதவர்களே இருக்க முடியாது அதை நம் கணிப்பொறியில் விளையாடுவோம்

நிங்களும் இனி கணினியில் உங்களுக்கு புடிச்ச ANDROID APPS நிறுவி விளையாடுங்க !!!

குறிப்பு :இதை நிறுவ உங்கள் கணினியில் கிராபிக்ஸ் கார்டு 512 MB ஆவது இருக்க வேண்டும் 

Gmailலில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை... Cc & Bcc அவசியம் படிக்கவும்!

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.

இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி.
இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Bcc: Blind Carbon Copy

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.
இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.


Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை....!

காமெடி நடிகைக்கு கிடைத்த அதிஷ்டம் ஹீரோயின் ஆனார்..!

காமெடி நடிகர்கள் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? காமெடி நடிகையும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். பல சிறு பட்ஜெட் படங்களில் காமெடியாகவும் கவர்ச்சியாகவும் நடித்து வந்தவர் ஜோதிஷா.


இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தாதாக்களின் ஆசை நாயகியாக வந்து கடைசியில் மச்சினன் சூரியையும் மடக்கி போட்ட கேரக்டரில் நடித்து பாப்புலர் ஆனார்.


இப்போது ஜோதிஷா சமுதாயம் செய் என்ற படத்தில் ஹீரோயின் ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராவணன் என்ற நியூபேஸ் நடிக்கிறார். எஸ்.பி.என்பவர் டைரக்ட் செய்கிறார். "ஓடுற வரைக்கும்தான் வாழ்க்கை, சுத்துற வரைக்கும்தான் உலகம். நல்லது கெட்டது எதுவும் இல்லை.


 வாழ்க்கை ஒரு முறைதான் அதில் நமக்கு பிடித்தமானதை செய்து கொண்டே இருக்க வேண்டும். நமக்கு பிடித்ததை கையில் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அதைத்தான் இந்தப் படத்துல சொல்றோம்" என்று படத்துக்கு இண்ட்ரோ கொடுக்கிறார் டைரக்டர் எஸ்.பி.

கமல் பாணியில் புது டைரக்டர்....!

துபாயில் பொறியாளராக இருக்கும் மனுகண்ணன் என்பவர் அங்குசம் என்ற படத்தை தயாரித்து, டைரக்ட் செய்திருக்கிறார். இந்தப் படம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றியது. அதாவது படத்தின் ஹீரோ தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அநியாயத்தை தட்டிக் கேட்பார். இதனால் அவருக்கு அதிகார மையங்களில் இருந்து பல பிரச்சனைகள் வரும். இப்படியான கதை.

இந்த படத்துக்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் கொடுத்தது. உடனே வரிவிலக்கு கமிட்டிக்கு மனுப்போட்டார், மனு கண்ணன். வரிவிலக்கு கமிட்டியும் படத்தை பார்த்துவிட்டு. இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் வரிவிலக்கு தரலாம் என்று கூறியது. ஆனால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரின் உதவியாளர் வரிவிலக்கு தகுதி பெற லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்சப் பணம் முதல்வர் வரை செல்வதாகவும் பரபரப்பு பேட்டி அளித்துவிட்டார், மனுகண்ணன். இதனால் முதல்வர், வணிகவரித்துறை அமைச்சர் ஆகியோர் மனு கண்ணன் மீது மானநஷ்ட வழக்கு போட்டனர். வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மனுகண்ணன் இந்த மாதம் அங்குசம் படத்தை ரிலீஸ் பண்ணுவதில் தீவிரமாக இறங்கி விட்டார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நல்ல சினிமாவை மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காகத்தான் எனது வேலையை விட்டுவிட்டு இந்தப் படத்தை எடுத்தேன். தகவல் அறியும் உரிமைச் சட்டம் நம் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பயன்படுத்தாமல் இருக்கிறார்களே என்கிற ஆதங்கத்தில் எடுத்தேன். முதல்வரை பற்றியோ, தமிழக அரசைப் பற்றியோ ஒரு காட்சிகூட படத்தில் கிடையாது.

மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர் பெயரைச் சொல்லி அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகத் தான் பேட்டி கொடுத்தேன். அதை தவறாக புரிந்து கொண்டு என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். அதனை நான் சட்டப்படி சந்திப்பேன். இந்த மாதம் படத்தை ரிலீஸ் பண்ணுகிறேன். அதை ரிலீஸ் பண்ண விடாமல் தடுத்தாலோ அல்லது படம் தோற்கடிக்கப்பட்டாலோ நான் விட்டு வந்த வேலை அப்படியே இருக்கிறது. லண்டன், துபாய் அல்லது அமெரிக்கா சென்று செட்டிலாகிவிடுவேன். இன்னும் சம்பாதித்து இதேபோன்ற விழிப்புணர்வு படத்தை திரும்ப எடுப்பேன். என்றார்.

கோலிவுட்டில் லேட்டஸ் டாக்.... ஆயா வடை சுட்ட கதை....

பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா கரகாட்ட கலையை மையமாக வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யப்போகிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார்.

 செழியன் கேமரா. இளையராஜா இசை. மற்ற டெக்னீஷியன்களும், டைட்டிலும் இன்னும் முடிவாவவில்லை. பரமன் படம் முடிந்ததும் சசிகுமார் பாலா படத்தில் நடிக்க இருக்கிறார்.


இதற்கிடையில் தனது அடுத்த படத்துக்கான 6 பாடலையும் இளையராஜாவிடம் கொடுத்து இசை அமைத்து வாங்கிவிட்டார். இந்த பாடல்கள் தயாரான விதத்தை 90 விநாடி வீடியோ காட்சியாக பாலா வெளியிட்டுள்ளார்.

அதில் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இளையராஜா காரில் வந்து இறங்கி பாடலுக்கு இசை அமைப்பது, பாலாவுடன் ஆலோசனை நடத்துவது, பாலா பாடல்களை திருத்தி தருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 12 நாட்களில் தயாரானது 6 பாடல்கள் என்றும், படப்பிடிப்புகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்குகிறது என்றும் அந்த வீடியோ காடசிகள் தெரிவிக்கிறது.

‘இது நம்ம ஆளு ‘ ஆகுமா ? தலைப்பு மாறப்போகிறது...?

சிம்பு – நயன் – சூரி கூட்டணியில் உருவாகி வரும் தனது புதிய படத்தை காதலை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படமாக்கி வருகிறார், இயக்குநர் பாண்டிராஜ். படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. சூட்டிங் முடிந்ததும் அதன் எடிட்டிங் வேலைகளை உடனுக்குடன் முடித்து பம்பரமாய்ச் சுற்றிவரும் இயக்குநர் பாண்டிராஜிடம் பேசினோம்.

‘‘சிம்பு, நயன் கூட்டணியை மையமாக வைத்துள்ள காட்சிகள் கலர்ஃபுல்லாக வந்திருக்கிறது. மூன்று செட்யூல் ஷூட்டிங் முடிந்தது. அடுத்த செட்யூல் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் படமாக்கப்பட உள்ளது. படத்தின் தலைப்பை இன்னும் இறுதி செய்யவில்லை. ‘இது நம்ம ஆளு’ என்பதை ஒரு யோசனையாகத்தான் வைத்திருக்கிறோம். அதேபோல படத்தில் சிம்புக்கு இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் யார் என்கிற தேர்வில்தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்.

படத்தில் சிம்புக்கு அப்பாவாக ஜெயப்பிரகாஷ் நடிக்கிறார். நயன்தாரா சேலை சுடிதார் என்று முழுக்க முழுக்க குடும்பப் பாங்கான பெண்ணாக வலம் வருவார். சூரிக்கும் நயனுக்கும் இடையிலான காமெடி டிராக்கை தனியே 2 நாட்கள் ஷூட் செய்தோம். எல்லோரும் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்த நாட்களாகவே அவை மாறிப்போனது. இந்தப் படம் கமர்ஷியல் படமாக இருந்தாலும் கண்ணியமாக படம் எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதனாலேயே படத்தில் குத்துப்பாடல், கவர்ச்சி ஆட்டத்திற்கு வேலையே வைக்கவில்லை. படத்தின் பாடலின் அமைப்புக்கும் சூழலுக்கும் அவசியம் என்றால் வெளிநாட்டில் ஷூட் செய்யலாம்.

இதுவரைக்கும் அப்படி ஒரு யோசனை தோன்றவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் இப்படத்தில் சிம்புவும்

நயனும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அது படத்திற்கு பலமாக இருக்கும்!’’ என்றார், பாண்டிராஜ்.

கார்த்திகா புகழ்ந்து தள்ளும் ஹீரோ யார்...?

அருண் விஜய்யுடன்  டீல் படத்தில் நடித்த கையோடு கார்த்திகா புறம்போக்கு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதில் நீங்கள் யாருக்கு ஜோடி விஜய் சேதுபதிக்கா அல்லது ஆர்யாவுக்கா என்று கேட்டால் “தெரியலயேபா” என்று நாயகன் ஸ்டைலில் சொன்னார் கார்த்திகா.

இதுவரைக்கும் என்ன கதை என்று திட்டவட்டமாக எனக்கு தெரியவில்லை என்றும் இப்போது வரை எனக்கும் ஆர்யாவுக்கும் உள்ள காம்பினேஷன் சீன்ஸ் மட்டுமே  எடுத்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் கூறினார்.

இந்த படம் கமிட் பண்றதுக்கு முன்னாடி ஆர்யாவுடன் நடிக்க போகிற பார்த்து மா என பல பேர் அட்வைஸ் செய்தார்கள். ஏற்கனவே இவருக்கு காதல் மன்னன் என்ற  பட்டம் கொடுத்து விட்டார்கள் அதனால் உஷார் ரா இரு என்று பல பேர் பட்டும் படாத மாதிரி சொன்னார்கள்.

ஆனால் நேரில் சென்று பார்த்து போது  ச்சே ஹி இஸ் ஜெம் ஆஃப் பெர்சன் என்று தெரிந்தது.

அவர் கதாநாயகி கிட்ட காட்டும் அக்கறை ஒரு நல்ல மனசோடு  தான் தவிர வேறு ஏதும் இல்லை என்றும் செட்டில் நான் இப்போ பார்க்கும் போது கூட எவ்வளோ பெரிய கஷ்டமான டான்ஸ் ஸ்டெப்பாக இருந்தாலும் சரி பொழந்து கட்டுகிறார் எனவும் கூறினார்.

எஸ்.ஜே சூர்யாவின் இசை மிக பிரமாதமாக வந்துள்ளது...!

எஸ்.ஜே சூர்யா நடித்து இயக்கி கொண்டு இருக்கும் ஒரு மியூசிக்கல் படம் தான் இசை.

பொதுவாக எஸ்.ஜே சூர்யா படம் என்றால் கிளுகிளுப்புக்கும், குதுகலத்துக்கும் பஞ்சம் இருக்காது. இடையில் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று ஒரே காலில் நின்று சில படங்களை நடித்தார். ஆனால் அவர் இயக்கத்துக்கு கிடைத்த வரவேற்பு நடிப்புக்கு கிடைக்கவில்லை.

சரி என்று தன்னுடைய பழைய இயக்குனர் பாணியில் பயணிக்க ஆரம்பித்தார். இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட எஸ்.ஜ சூர்யா இசையை மையப் படுத்தி இசை என்ற பெயரிலே கடந்த ஒரு வருட காலமாக ஒரு படத்தை  எடுத்து கொண்டு இருக்கிறார்.

தற்போது இப்படம் முடியும் தருவாயில் உள்ளதால் படத்தை பற்றி சில தகவல்கள் எடிட்டர் ஆண்டனி தெரவித்தார்.

கண்டிப்பாக இப்படம் எஸ்.ஜே சூர்யாவின் முந்தைய படங்களை விட மிக பிரமாதமாக வந்துள்ளது என்றும் நீங்கள் எஸ்.ஜே சூர்யாவிடம் எதிர்பார்க்கும் கிளுகிளுப்பு போன்ற சமாச்சாரங்களுக்கும் பஞ்சம் இருக்காது எனவும் தெரிவித்தார். இப்படத்தை தல பிறந்த நாளான மே 1ம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளார்.

ஆகமொத்ததில் நம்ம பழைய எஸ்.ஜேசூர்யாவை பார்க்கபோறோம் டோய்!!

அஜீத்துடன் புதிய ஜோடி சேருவது யார்....?

அஜீத் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து வெற்றியடைந்த படம் ‘வீரம்’ இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். படம் முழுவதும் வெள்ளைச் சட்டை, வேஷ்டி, நரைத்த முடி என கலக்கியிருந்தார் அஜீத். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படம் அமைந்திருந்தால், படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து அஜீத்தும்-சிவாவும் மீண்டும் புதுப்படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இந்த படத்திலும் தமன்னாவே கதாநாயகியாக நடிக்கிறாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்கள்.

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கவுதம்மேனன் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, அஜீத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இப்படம் முடிந்த பிறகு சிவாவும், அஜீத்தும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று தெரிகிறது.