Friday, 7 March 2014

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி!

தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்..தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும்.                                                                                                  

பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வைக்கவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும். ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது.


திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது.


அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம்.


இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்......


இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும்.


இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.

பெண்களே உங்கள் அக்குள் கருமையாக இருக்கின்றதா? கவலை வேண்டாம்!

அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

01. எலுமிச்சை

அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

02. மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

03. தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

04. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து 1/2 கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல வித்தியாசம் தெரியும்.

05. சந்தனப்பவுடர், பால்

சந்தனப் பவுடரை பால் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.

06. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

07. கடலைமா, பால், மஞ்சள்

கடலைமா, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.

08. உருளைக்கிழங்கு

இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம். 

சிவப்பு விளக்கு நல்லதாம் !

இரவுப் பணிகளின்போது அலுவலகத்தில் சிவப்பு விளக்கு எரிவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


வெள்ளை எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீல வெளிச்சம் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்றும், அதற்கு அடுத்தபடியாக தீங்கு விளைவிக்கக் கூடியது வெள்ளை நிற வெளிச்சம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


 அதே நேரம், சிவப்பு விளக்கு வெளிச்சத்திலிருந்த வெள்ளை எலிகளுக்கு, மிகக் குறைந்த அளவே மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகள் தோன்றின.


அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ராண்டி நெல்சன் கூறும்போது, “”இரவு நேரங்களில் பணியாற்றுபவர்களுக்கு மனச் சோர்வு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


வெள்ளை நிற வெளிச்சத்தைப் போல் சிவப்பு நிற வெளிச்சம் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில்லை என்ற எங்கள் ஆய்வு முடிவுகள் அவர்களுக்கு நல்ல தீர்வைத் தரும்” என்று தெரிவித்தார்.

எப்டித்தான் திருடுறாங்களோ? - இணையத்தில் வெளியான வாலு பாடல்கள்!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் மிக நீண்டகாலமாக உருவாகிவரும் வாலு திரைப்படத்தின் ஆடியோ திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகியுள்ளதால் வாலு படக்குழு கடும் வருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.


அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துவரும் வாலு திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துவருகிறது.


இப்படத்தின் படப்பிடிப்புக்கள் இடையில் சிலகாலம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. தற்பொழுது பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.


இப்படத்தின் இசை வெளியீடு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இசைத்தட்டுக்களை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் மேலும் கால அவகாசம் கேட்டதால் இப்படத்தின் இசை வெளியீடு மறுதேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.


அடுத்தவாரத்தில் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டுவந்த இப்படத்தின் ஆடியோ திடீரென இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியிருப்பதால் படக்குழுவும், சிம்பு ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை வெளியீடு எப்பொழுது நிகழும் என்று குழப்பம் நிலவிவருகிறது.

இளையதளபதியும் ஆஸ்கர் நாயகனும்!

இளையதளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கவுள்ள படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகக் கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் -சமந்தா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புக்கள் மின்னல் வேகத்தில் நடைபெற்றுவருகின்றன. இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்திற்கு தீரன் அல்லது வாள் எனத் தலைப்பிடப்படலாம் என்றும் கூறப்பட்டுவருகிறது.


இப்படத்தினை வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழு மிகவும் தீவிரமாகப் பணியாற்றிவருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பினை நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார்.


ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்குப் பிறகு விஜய் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் பர்சனல் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் தயாரிக்கவுள்ள இப்படம் விஜயின் 58 ஆவது படமாகும்.


 இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கலாம் என்று கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இச்செய்தி உண்மைதானா என்று ரசிகர்கள் பரபரத்துவருகின்றனர். விரைவில் இச்செய்தியின் நம்பகத்தன்மை குறித்துப் படக்குழு விளக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விஜய் - ஸ்ரேயா நடிப்பில் கடந்த 2007 ல் வெளியான அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லால் ஏட்டனுடன் நடிக்கணும் - அஜித்!

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்புக்கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த வேளையில் அவர் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன் நடிக்க விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழில் எப்படி ரஜினியும் கமலும் டாப் நடிகர்களோ அதைப் போல மலையாளத்தில் மம்முட்டியும், மோகன்லாலும் மிக முக்கிய நடிகர்கள்.


இளையதளபதி - காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ஜில்லா திரைப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து விஜய் நடித்திருந்தார். ஜில்லா திரைப்படத்தில் மோகன்லாலின் அட்டகாசமான நடிப்பினைப் பார்த்தபிறகு தல அஜித்திற்கும் அவருடன் இணைந்து நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


தல அஜித் தற்பொழுது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காகத் தயாராகிவருகிறார். எய்ட் பேக்ஸ் உடற்கட்டுடன் கட்டுமஸ்தான போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்காக சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலிலிருந்து மற்றொரு அழகான ஹேர் ஸ்டைலுக்கு மாறவிருக்கிறார்.


தன்னுடன் நடிக்கவிரும்பு இளம் நடிகர்களின் ஆசையைத் தானே நிறைவேற்றி வைக்கும் தலயின் ஆசையும் விரைவில் நிறைவேற ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.