Sunday, 2 March 2014

எண்ணெய் வழியும் முகம் உங்கள் அழகை கெடுக்கின்றதா..?


எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? வெயில் உங்கள் எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க சில குறிப்புகள்.

* வெள்ளரிக்காயை தினம் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாகக் எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச் சாறுடன் பாற் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் கரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும்.

* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.

* சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து கத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

*எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச் சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

* பப்பாளிக் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும். 

எம்.ஜி.ஆர் வைத்தியம் பற்றி தங்களிடம் பேசவேண்டும்..!


இந்த நேரத்தில் இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரும், அவரது மனைவி மக்களும் தாங்கள் இதுவரைக்கும் எம்.ஜி.ஆரை பார்க்கவில்லை என்று சொல்லி பார்க்க வருகின்றார்கள். வீட்டு முதலாளி பெயர் ஆறுமுக நாடார். இவர் வயதானவர். அந்த ஊரிலேயே நல்லவர் என்று பெயர் உள்ளவர். இவருக்கு பல கள்ளுக்கடைகள் இருந்தன. சொந்தத்தில் தோப்புகளும் இருந்தன.

இவர் ஒரு நாட்டு வைத்தியர். இவர் எம். ஜி. ஆரை பார்த்துகொண்டே இருந்தவர் உடனே அவரே, அழைத்து கைபிடித்து நாடியை பார்த்தார். உடனே சத்தியதாயை பார்த்து உங்க மகன் ராமச்சந்திரனுக்கு வியாதி ஏதும் இல்லை. உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அதனாலே குடல்புண், குடல் பூச்சி ஏற்பட்டு உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். இதை குணப்படுத்தி விடலாம்.

நீங்கள் கவலைப்படாதீர்கள் இதற்கு மருந்துகொடுத்து சரி செய்யலாம் என்று சொல்லி விட்டு பிறகு சத்தியபாமா அம்மாவை தனியாக அழைத்து அம்மா நாளை முதல் வைத்தியம் ஆரம்பிக்க வேண்டும். எப்படியாவது கம்பெனி முதலாளியிடம் சொல்லி ஒரு மாதம் லீவு வாங்கனும், இது எல்லாம் ரெடி செய்துகொண்டு என்னிடம் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

இந்த விஷயத்தை சத்தியதாய் எம். ஜி. ஆரிடம் சொன்னார். எம். ஜி. ஆர். அதைக் கேட்டு நான் நல்லாத்தான் இருக்கேன். என்னை எதற்காக தொந்தரவு செய்கின்aர்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார். எனக்கு ஒரு மாதம் லீவு எல்லாம் கிடைக்காது வேண்டாம். விட்டுறும்மா என்று சொல்லி இவர்கள் இருவரும் கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள். சத்திய பாமா கம்பெனிக்கு சென்று நாராயணனை சந்தித்து அவர்களிடம் தன் மகன் எம். ஜி. ஆர். உடல் நிலையைப் பற்றி கூறினார்.

எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் நீங்கள் இருங்க முதலாளியை பார்த்து பேசலாம் என்று நாராயணன் கூறினார். அதன்படி கம்பெனி முதலாளியிடம் சென்று ராமச்சந்திரன், சக்கரபாணி தாயார் வந்து இருக்கிறார்.

ராமச்சந்திரனின் உடல் நிலையை பற்றி தங்களிடம் பேசவேண்டுமாம் என்று அதன்படி கம்பெனி முதலாளியிடம் சத்திய பாமாவை அழைத்துச் சென்று பேச வைத்தார். முதலாளியை பார்த்த சத்திய பாமா பயபக்தியோடு வணக்கத்துடன் தன்னுடைய இளைய மகனை பற்றி சுருக்கமாக, விவரமாக சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டு கம்பெனி முதலாளி சற்று யோசித்தார். பிறகு, சத்திய பாமாவை பார்த்து, அம்மா நீங்கள் சொல்கிறபடி ராமச்சந்திரனுக்கு உள்ள வேகமான செயலுக்கும், விவேகமான அறிவுக்கும் அழகுக்கும் அவனுக்கு தகுந்த உடம்பு இல்லையே என்பதை இப்போது தான் நான் யோசிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி இந்த ஒரு மாதத்தில் ராமச்சந்திரனுடைய உடல் ஆரோக்கியத்தை சரியாககொண்டு வரலாம் என்றால், உடனே ராமச்சந்திரனிடம் சொல்லி உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். பெற்ற தாய் நான் எப்படியும் என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து தான் செயல்களில் ஈடுபடுகிறேன்.

இதற்கு கடவுளுடைய கிருபையும் உங்களை போன்ற பெரிய மனிதர்களுடைய ஆசிர்வாதமும் உதவியும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உடனே கம்பெனி முதலாளி உள்ளே சென்று சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் அழைத்து வர சொல்லுகிறார். அழைத்து வரச் சொன்னதும், முதலாளி ஏன் அழைக்கின்றார் நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்துக்கொண்டு இருவரும் முதலாளியிடம் வருகின்றார்கள். அந்த இடத்தில் தன்னுடைய தாயை இருவரும் பார்க்கின்றார்கள். பார்த்து அம்மா எதற்கு கம்பெனிக்கு வந்து இருக்கிறார்கள்?

முதலாளியை பார்த்துக்கொண்டு அந்த நேரத்தில் பையன்கள் தாயாரை பார்க்காமல் கை கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். முதலாளி பிறகு இருவரையும் பார்த்து கொண்டு ராமசந்திரா உனக்கு உடல் மிகவும் மெலிந்து உள்ளது. இன்னும் கொஞ்சம் உடல் பெருத்தால் நல்லா இருக்கும். உன் அழகுக்கும் உன் திறமைக்கும் உன் புத்தி கூர்மைக்கும் உடல் பெருத்து இருப்பது நல்லது.

அதனாலே நீ இப்போ உங்க அம்மா கூடபோய் இருந்து ஒரு மாதத்திற்கு நீ உன் உடல் நிலையை சரிபார்த்துக்கொண்டு வா, அதோடு காலையில் உன் வழிபடி எப்போதும் எடுக்கும் என் உடல் பயிற்சியை செய்யத் தவறிவிடாதே இடையிலே உனக்கு முடிந்தவரையில் கம்பெனிக்கு வந்து போகலாம் என்பதை கூறி தாயார் அவர்கள் வசம் அனுப்பி வைத்தார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சக்கரபாணி அவருக்கு மனதில் தம்பி எப்படியாவது நல்ல குணமாகி வரவேண்டும் என்று ஆண்டவனை நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டு வெளியே சென்று தாயாருடன் வழி அனுப்பி வைத்தார்.

போகின்ற வழியிலே தன் தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் நான் ஒரு மாதம் வீட்டில் வந்து என்னுடைய உடம்பை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தேவையா, நம் குடும்பம் இருக்கும் நிலவரம் என்ன வீட்டுக்குப் போய் சென்ற பிறகு மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆன ஆறுமுகம் நாடார் சத்திய பாமா வீட்டிற்கு வந்து ராமச்சந்திரனை அழைத்து நாடி பார்க்கின்றார்.

நாடி பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் நாளை காலையில் 7 மணிக்கு அம்மா நான் உங்களிடம் சொன்னபடி அந்த மருந்தை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி முடிந்தவரை 1/2 லீட்டருக்கு குறையாமல் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. நடக்கலாம், ஓடலாம், பசி எடுத்தால் நல்ல உணவுகளை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். 

மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்ய வேண்டுமா...?


இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள்.

உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை.

ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள்.

இப்படி மிகக் கவனமாகக் கம்ப்யூட்டரில் செயல்பட்டாலும், மிகத் தந்திரமான ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்று, ஏதோ ஓர் இடத்தில் உள்ள பிழையான இடம் மூலம், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, தன்னை அடையாளம் காட்டுகிறது.

சில சில்மிஷ மாற்றங்களை உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்துகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை, பயம் கலந்த அப்பாவி உரிமையாளராக ஆகிவிட்டீர்கள். இங்கு என்ன செய்யலாம்? அதனையே இங்கு பார்க்கப் போகிறோம்.

பொதுவாக, உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, அதில் உள்ள மால்வேர் புரோகிராமினை நீக்க வேண்டும். பிரச்னையை அறிந்து செயல்படத் தேவையான, படிப்படியான வழிமுறையைக் காணலாம்.


1. என்ன வைரஸ் என்று சோதனை செய்திடுக:

சம்பந்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர், நிஜமாகவே பாதிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால், ஒரு சிலர், சவுண்ட் கார்ட் சரியாக வேலை செய்திடவில்லை என்றால், உடனே கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள்.

எனவே, பிரச்னை, நாம் வந்துவிட்டதாக நினைக்கும் வைரஸினாலா, அல்லது ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அல்லது பயன்படுத்துபவரின் தவறான அணுகுமுறையா எனக் கண்டறிய வேண்டும்.

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர், வழக்கத்திற்கு மாறாக, மிக மிக மெதுவாக இயங்குகிறதா? அல்லது, நீங்கள் செய்யச் சொல்லாத செயல்பாடுகளைத் தானாகவே மேற்கொள்கிறதா? அப்படியானால், வைரஸ் வந்துவிட்டது என்று எண்ணுவதற்குச் சரியான முகாந்திரம் உள்ளது.

அவ்வாறு முடிவெடுப்பதற்கு முன்னர், Windows Task Manager ஐ இயக்கவும்.இதற்கு விண்டோஸ் டாஸ்க் பாரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Processes என்ற டேப்பினைத் திறக்கவும்.

இப்போது கிடைக்கும் விண்டோவில், சந்தேகப்படும் படியான, விநோத பெயரில் ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டுள்ளதா எனக் கவனிக்கவும். வைரஸ்கள் எல்லாம், விநோதமான பெயரிலேயே வரும் என நாம் அனுமானிக்கவும் முடியாது.


2. மால்வேர் தான் என் உறுதி செய்திடும் வழிகள்: 

மிக மோசமான மால்வேர் புரோகிராம்கள், நாம் அதனை நீக்க எடுக்கும் வழிகளை மிகச் சாதுர்யமாகத் தடுக்கும். இவற்றை நீக்க நாம் msconfig அல்லது regedit ஆகிய வழிகளில் முயற்சிகளை எடுத்தால், அவற்றை இயக்கவிடாமல், மால்வேர் தடுக்கும்.

அதே போல, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், லோட் ஆகிச் செயல்படாமல் தடுக்கப்பட்டால், மால்வேர் புரோகிராம் ஏதோ ஒன்று உள்ளே தங்கி வேலையைக் காட்டுகிறது என்று உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.

சில வேளைகளில், இந்த வைரஸ் புரோகிராமின் செயல்பாடுகள் மிக வெளிப்படையாகவே இருக்கும். நீங்கள் இதுவரை அவ்வளவாகப் பயன்படுத்தாத புரோகிராம் ஒன்று, திடீரென இயங்கத் தொடங்கி, நமக்கு எச்சரிக்கைகளை அளித்து, குறிப்பிட்ட ஒரு செயலாக்க (executable) பைல் ஒன்றை இயக்குமாறு தெரிவித்தால், நிச்சயம் அது ஒரு வைரஸின் வேலையாகத்தான் இருக்கும்.

உங்கள் கம்ப்யூட்டர் முடக்கப்படப் போகிறது எனத் தொடங்கி, குறிப்பிட்ட தளத்தில், பிரச்னையைத் தீர்ப்பதற்கான உடனடி தீர்வு புரோகிராம் இருப்பதாகச் சொல்லி, உங்களை தடுமாற வைத்து, வழி நடத்தி, இடையே, உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு எண்களை கேட்டால், உடனே சுதாரித்துக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே ஒதுக்கி வைத்து, வைரஸ் நீக்கும் முயற்சிகளைத் தொடங்குங்கள். இப்படி பயமுறுத்திச் சாதிக்கும் பல மால்வேர் புரோகிராம்கள், இணையம் எங்கும் நிறைந்துள்ளது.


3. இணையத்தில் தீர்வினைத் தேடவும்: 

வைரஸ் புரோகிராம் உங்களுக்கு அளித்திடும் எச்சரிக்கை செய்தியிலிருந்து சில சொற்களைக் காப்பி செய்து, வேறு ஒரு கம்ப்யூட்டரில், உங்களுக்கு பழக்கமான தேடல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்ளவும்.

இதே வைரஸால் இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அனுபவத்தினையும், தாங்கள் பயன்படுத்திய தீர்வுகளையும் இணையத்தில் பதிந்து வைத்திருந்தால், அவை உங்களுக்குக் கிடைக்கும். இதில் கவனமாக இருந்து, சரியான தீர்வுகளை மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்படுத்திய பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் முழுவதையும், ஸ்கேன் செய்து மாற்றங்களை உணரவும்.


4. பழைய வைரஸ் ஸ்கேனரால் பயனில்லை: 

நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, கம்ப்யூட்டரில் வந்துள்ள வைரஸ் மடக்கிப் போட்டிருந்தால், நீங்கள் என்ன முயன்றும் தீர்வு கிடைக்காது. எனவே புதிய இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, யு.எஸ்.பி. ட்ரைவில் அல்லது சிடியில் வைத்து இயக்கிப் பார்க்கலாம். இயக்கிப் பார்க்கும் முன், உங்கள் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.


6. சிறிய அளவிலான ஸ்கேனர் பயன்படுத்துக: 

சேப் மோட் இயக்கத்தில், கம்ப்யூட்டரில் அதன் அடிப்படை இயக்கத்திற்குத் தேவையான புரோகிராம்கள் மட்டுமே இயக்கப்படும். ஸ்டார்ட் அப் புரோகிராமில் உள்ள அனைத்து புரோகிராம்களும் இயக்கப்பட மாட்டாது. முக்கியமானவை மட்டுமே இயங்கும். குறிப்பாக, வைரஸ் புரோகிராம் இயக்கத்திற்கு வராது.

இந்த நிலையில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்கேனர் புரோகிராம் சிறிய அளவில் லோட் ஆகி இயங்கும் வகையில் இருந்தால் நல்லது. சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டுவர, கம்ப்யூட்டரை இயக்க ஸ்விட்ச் போட்டவுடன், எப்8 கீயை அழுத்த வேண்டும்.

அப்போது, கம்ப்யூட்டரில் சேப் மோட் நிலைக்கான பூட் ஆப்ஷன்ஸ் (boot options) மெனு கிடைத்தவுடன், அதில் இணைய இணைப்பிற்கு வழி தரும் Safe Mode with Networking என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஏனென்றால், வைரஸ் நீக்க இணையத்திலிருந்தும் சில வழிகளைப் பெற வேண்டியதிருக்கும்.

சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கி நிலைக்கு வந்தவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறக்கவும். (சேப் மோட் நிலையில், மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்தினால், சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

 பின்னர், பிட் டிபண்டர்
 (Bitdefender http://www.bitdefender.com/scanner/online/free.html) போன்ற,நம்பகத் தன்மை பெற்ற ஆன்லைன் வைரஸ் ஸ்கேனரை இயக்கவும்.

மிகச் சிறப்பான முறையில் தீர்வு கிடைக்க இசெட் ஆன்லைன் ஸ்கேனரைப் (http://www.eset.com/us/onlinescanner) பயன்படுத்தலாம். இணையத்தில் கிடைக்கும் ஆன்லைன் ஸ்கேனரில் இது மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. அண்மைக் காலங்களில் வெளியாகும் மால்வேர் புரோகிராம்களுக்கேற்ப அடிக்கடி அப்டேட் செய்யப்படும் ஸ்கேனர் இது.

ஸ்கேன் தொடங்கும் முன்னர், பிரவுசரில் Advanced settings சென்று, அதிகபட்ச பாதுகாப்பு நிலைகளில் ஸ்கேனிங் இயக்கம் நடைபெற செட்டிங்ஸ் அமைக்கவும். file archives and browser data போன்றவற்றையும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கவும்.

இந்த வகையில் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஹவுஸ்கால் (http://housecall.trendmicro.com/us/)என்ற புரோகிராமினையும் இயக்கலாம். இது இணையத்திலிருந்தே செயல்படும் புரோகிராம் அல்ல. இதனை இன்னொரு கம்ப்யூட்டர் வழியாகத் தரவிறக்கம் செய்து, ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கிப் பயன்படுத்தலாம்.

இதில் Scan Now பட்டனை அழுத்தும் முன், Settings மற்றும் Full system scan பட்டன்களை அழுத்தி அந்த செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும். இந்த செயல்பாடுகள் அனைத்திலும், மெதுவாகச் செயல்படும் ஸ்கேன் முறையையே தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் தொடங்கிய பின்னர், கம்ப்யூட்டரிலிருந்து விலகி, அதனை வேடிக்கை பார்க்கவும். ஏதேனும் ஒரு கதையை வாசிக்கவும். ஸ்கேன் நிச்சயம் அதிக நேரம் எடுக்கும்.


7. இன்னொரு ஸ்கேனிங்: 

முதல் ஸ்கேனிங் முடிந்து முடிவுகள் வந்த பின்னர், ஸ்கேன் முடிவுகள் அறிவிப்பை காப்பி செய்து, பதிவு செய்து கொண்டு, இன்னொரு நல்ல ஸ்கேனரைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஸ்கேன் செய்திடவும். பல மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை.


8. பிரச்னை தீர்ந்த கம்ப்யூட்டரை பாதுகாத்திடுங்கள்: 

கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் புரோகிராம்கள் அனைத்தும் நீங்கிய பின்னர், மறுபடியும் வழக்கம் போல விண்டோஸ் சிஸ்டத்தில் மீண்டும் பூட் செய்திடவும். உங்களுடைய பழைய ஆண்ட்டி வைரஸ் புரோகிரா மினைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கவும். அன் இன்ஸ்டால் செய்திடவும்.

அடுத்து, அதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின், அண்மைக் கால மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்ஸ்டால் செய்திடலாம். உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றால், வேறு ஒரு நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பதிவு செய்திடலாம்.

எதனைப் பதிவு செய்தாலும், தொடர்ந்து அதனை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். பிரச்னைகள் எங்குதான் இல்லை. திடமான மனதுடன், தெளிவாகச் சிந்தித்து செயல்பட்டால், அனைத்திற்கும் தீர்வு உண்டு.

மகப்பேறு விடுமுறை முடிந்து வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைகள்..!


ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும்.

ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம்.

அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு முடிந்து வேலைக்கு உடனே திரும்பும் போது, பெண்களை திணறடிக்கும் விஷயம் பல உண்டு. ஆனால் அந்த சவால்களை வெற்றிக் கொள்ள உங்களுக்காக சில குறிப்புகளை அளிக்கிறோம்.

• வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை தங்களின் பச்சிளங் குழந்தையின் நினைப்பாகவே இருப்பார்கள். அது அவர்களுக்குள் ஒரு குற்ற உணர்வை கூட ஏற்படுத்தும். இதனால் அவர்கள் ஒரு நல்ல தாய்க்கு உதாரணம் இல்லை என்று சொல்ல முடியாது. குழந்தையை பிரிதலான சவாலை வெற்றிக் கொள்ள பொறுப்புகளை நன்கு அறிந்து, அதை சரிவர வழி நடத்திச் செல்லுங்கள்.

• வீட்டில் தாய்ப்பால் கொடுப்பதையும், அலுவலகம் சென்ற பின் மார்பிலிருந்து பாலை எக்கி எடுக்கவும் ஒரு பெண் படாத பாடுபடுகிறாள். ஆனால் இதை சரிவர செய்ய பழகி விட்டால், இந்த சவாலையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும்.

அதிலும் அலுவலகம் வந்த பின்னரும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க விரும்பினால், அலுவலக மேலாளரிடம் சின்ன இடைவேளைக்கு அனுமதி வாங்கிக் கொண்டு பாலை எக்கி எடுக்கவும். சில அலுவலகம் இதற்காக சுத்தமான ஒரு தனிப்பட்ட அறையை ஏற்பாடு செய்து கொடுக்கிறது. சில அலுவலகம் பெண்களின் பரிந்துரையின் பேரில், இதற்காக தற்காலிகமாக அறைகளை ஏற்பாடு செய்து கொடுக்கும்.

• பெண்களின் அட்டவணையானது கண்டிப்பாக குழந்தை பெற்றப் பின், குழந்தைக்கு ஏற்றாற்போல் மாறிவிடும். வேலைக்குச் செல்லும் முன் போதிய கால அவகாசம் இருப்பதால், அதை பயன்படுத்திக் கொண்டு குழந்தையின் அட்டவணையை மெதுவாக, அலுவலக தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

• குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஒரு நல்ல உள்ளூர் குழந்தைப் பாதுகாவலரை ஏற்பாடு செய்துக் கொள்ளவும் அல்லது குழந்தையை பாதுகாக்க வேறு ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் வீட்டு பெரியவர்களை, வீட்டிற்க்கு வரச் சொல்லி குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லலாம்.

ஏனென்றால் அவர்கள் குழந்தையை தங்கள் குழந்தையை போலவே பாசம் காட்டி பார்த்துக் கொள்வர். குழந்தையை பார்த்துக் கொள்ள சரியான ஆட்கள் கிடைக்காவிட்டால், நம்பகத்தன்மையுள்ள ஒரு குழந்தை பாதுகாவலரை நியமித்து கொள்ளலாம்.

• அலுவலக மேலாளரிடம் முன் கூட்டியே தாய்மைப் பணியின் அட்டவணையை தெரிவித்து வளையுந்தன்மையுடைய வேலை நேரத்தை கேட்டு வாங்கிக் கொள்ளவும். அதிலும் குழந்தை வளரும் வரை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் குழந்தையையும் கவனித்து, வேலையையும் நிம்மதியாக பார்க்கலாம். 

ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்..! - உங்களுக்காக...


கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம்.

இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன.

1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:

எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

2. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:

டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

3. திரைக் காட்சி அதிர்கிறது:

மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

4. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:

கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

5. Non System Disk Error:

சி.டி. டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

6. Missing Operating System:

சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் - குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.

7. Missing Command Interpretor:

Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.

8. IO Error:

சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

9. Divide Over Flow எர்ரர் மெசேஜ்:

சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

10. கம்ப்யூட்டர் செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது:

சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் Y கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

11. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது:

CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதø செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

12. Hard Disk Not Detected:

பவர் கனெக்டர் களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

13. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை:

ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

14. MMX/DLL FILE MISSING:

இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.

தனுஷ் கை விட்டாலும் விஜய் சேதுபதி கை விடமாட்டார்..!


தனுஷ் படம் கைவிட்டுப்போனதால் விஜய் சேதுபதியுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் மனிஷா. கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்து மலைஜாதி இன மக்களின் பிரச்னைகளை மையமாக வைத்து புதிய படம் இயக்குகிறார்.

இதில் விஜய் சேதுபதி ஹீரோ. மலைஜாதி இன பெண்ணாக நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தார். புதுமுகங்களுக்கு அவர் நடிப்பு பயிற்சி வைத்து தேர்வு செய்ய முடிவு செய்தார். பல்வேறு பெண்கள் பங்கேற்றனர். ஆனால் யாரும் மனதுக்கு திருப்தியாக இல்லை.

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனிஷா யாதவும் தேர்வுக்கு வந்திருந்தார். அவருக்கும் சில சீன்களை சொல்லி நடிக்க கேட்டார். அவரது நடிப்பு பிடிக்கவே தேர்வு செய்தார். இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடக்க உள்ளது. இதற்காக கொடைக்கானல் உட்பகுதியில் உள்ள மலைஜாதி கிராமம் ஒன்றை இயக்குனர் தேர்வு செய்துள்ளார்.

 அங்குள்ளவர்களின் நடவடிக்கைகளை கவனித்து அதை பின்பற்றி நடிக்கும்படி மனிஷாவுக்கு அட்வைஸ் கூறி உள்ளார் இயக்குனர். விரைவில் அந்த மலைஜாதி இன மக்கள் வாழும் பகுதியில் தங்கி அவர்களின் பழக்கவழக்கங்கள்பற்றி மனிஷா அறிய உள்ளாராம்.

வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க மனிஷாவிடம் பேசி இருந்தனர். ஆனால் திடீரென மனிஷா வேண்டாம் என தனுஷ் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வேடம் அமலா பாலுக்கு கைமாறும் என தெரிகிறது. தனுஷ் படத்துக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த கால்ஷீட் தேதிகளை விஜய் சேதுபதி படத்துக்கு மனிஷா கொடுத்துள்ளார். 

விண்டோஸ் 7ல் கிராஷை தவிர்க்க...!


இன்று பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.

இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், இமெஜ் கிரியேட்டிங் டூல் என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.

விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும்.

இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.

 Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும்.

இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்;

சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும்.

இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது. நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும்.

எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.

பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும்.

பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும். எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

 இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது. இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான 25 வழிகள்..!


இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.



  • தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.
  • உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-
சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.
  • அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.
  • அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-
ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.
  • சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். 


  • அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-
 உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.


  • பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-
பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.
  • சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-
சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
  • நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-
குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

  • மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.
  • க்ரீன் டீ பருகுங்கள்:-
தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.
  • யோகாவை தேர்ந்தெடுங்கள்:-
யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
  • வீட்டில் உண்ணுங்கள்:-
வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

  • உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-
சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.
  • வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-
நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.
  • உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-
உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.
  • உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-
வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.
  • உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.
  • உணவிற்கு முன் பழங்கள்:-
உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

  • தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-
கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.
  • மாமிசத்தை குறைக்கவும்:
அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
  • 100 கலோரிகளை எரிக்கவும்:-
தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.
  • இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-
இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.
  • உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-
தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.
  • கொண்டாட்டம்:-

சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

இன்றைய நடிகைகள் வருத்தபடவேண்டிய விஷயம்...!


மீனாவுக்கு 2009–ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு 2011–ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயர் வைத்தனர். குழந்தை தற்போது வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ‘திரிஷ்யம்’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. தற்போது மம்முட்டியுடன் நடிக்கவும் புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் நடிப்பது குறித்து மீனா அளித்த பேட்டி வருமாறு:–

நான் நான்கு வயதில் இருந்து சினிமாவில் நடிக்கிறேன். என் வாழ்க்கை படப்பிடிப்புகளில் மட்டுமே இருந்தது. குழந்தை பெற்று தாயான பிறகும் அதில்தான் இருக்கிறேன். சினிமாவை விட்டு வேறு எதையும் பார்க்க முடியவில்லை. என் வெற்றிகளுக்கு பெற்றோரும், ரசிகர்களும் என்னை படங்களில் நடித்தவர்களும் காரணமாக உள்ளனர்.

சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி என பெரிய நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். என்னை ஒரே டேக்கில் நடிக்கும் நடிகை என அழைப்பது உண்டு. ஒரு டேக் மேல் வாங்கினால் வருத்தப்படுவேன். தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த வேடமும், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கேரக்டரும் முதலில் எனக்குதான் வந்தன. நான் மறுத்துவிட்டேன்.

நான் யதார்த்தமாக இருப்பேன். பலர் என்னை தவறாக வழிநடத்தியுள்ளனர். அதுபற்றி வருத்தம் இல்லை. இன்னும் சினிமாவில் நான் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளேன். இந்த தாய்மை சந்தோஷத்தை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.

சமீபத்தில் மோகன்லாலுடன் நடித்த ‘திரிஷ்யம்’ மலையாள படம் ஹிட்டானது. ரசிகர்கள் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். ‘சூதுகவ்வும்’, ‘பீட்சா’ படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்காவிட்டாலும் நல்ல கதை என்பதற்காக அப்படங்கள் ஓடின.

இப்போதைய நடிகைகள் திறமைசாலிகளாக உள்ளனர். நன்றாக நடிக்கிறார்கள். ஆனாலும் பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி போன்றவர்கள் நடித்த வேடங்கள் இன்றைய நடிகைகளுக்கு வருத்தமான விஷயம். நான் சில வலுவான கேரக்டர்களில் நடித்துள்ளேன். தமிழ்படங்களில் சில காலமாக நடிக்கவில்லை. நல்ல வேடம் அமைந்தால் நடிப்பேன். 

இதான்பா பிரசாந்தோட சாஹசம் படத்தோட கதை!


சூப்பர் ஸ்டாருக்கு முன்பாகவே உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த பெருமைக்குச் சொந்தக்காரரான பிரசாந்த் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டிற்குத் திரும்பியுள்ளார்.

தனது சொந்தப் பட நிறுவனமான ஸ்டார் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான அருண் ராஜ் இயக்கத்தில் சாஹசம் திரைப்படத்தில் நடித்துவருகிறார் பிரசாந்த்.

பொதுவாக ஒரு திரைப்படம் உருவாகி, அப்படம் வெளியாகும் வரையிலும் அப்படத்தின் கதை வெளியில் கசிந்துவிடாமல் இருக்க படக்குழு மிகவும்
கவனத்துடன் இருக்கும்.

ஆனால் பிரசாந்த் நடித்துவரும் சாஹசம் திரைப்படத்தின் கதை வெளியாகியிருப்பதாக இணையத்தில் செய்திகள்
உலவிவருகின்றன.

படித்த இளைஞன் ஒருவன் வேலை தேடி அலைவதும், வேலை தேடும் இடங்களில் அவன் அவமானப்படுத்தப்படுவதாகவும், அதன் பின்னர் அந்த இளைஞனே சொந்தமாகத் தொழில் துவங்கி, அவனை அவமானப்படுத்தியவர்களை இவனது நிறுவனத்திலேயே வேலைக்காரர்களாக மாற்றுவதாகவும் விரிகிறதாம் இப்படத்தின் கதை.

இது இப்படத்தின் உண்மைக் கதையா அல்லது வதந்திகளா என்பது விரைவில் தெரியவரும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடித்துவரும் இப்படத்தின் ஹீரோயினுக்கான தேடல் நடைபெற்றுவருவதாகவும், முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அடுத்த 5 வருஷத்துக்கு உங்கள் ஆயுள் கெட்டியா..? - வாங்க தெரிஞ்சிக்கலாம்..!


உயிரினங்களின் வாழ்வில் மரணம் எப்போது வரும்? என்பது இப்போதுவரை மர்மமாக உள்ளது. ஆனால், அதையும் ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அதாவது மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் முனைகளில் ‘டெலோ மர்ஸ்’ என்ற மூலப்பொருள் உள்ளது.

செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது ‘டெலோ மர்ஸ்’சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும். அந்த அடிப்படையில், செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 பாடும் பறவைகளிடம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டது.

இதையடுத்து இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளதாக கிழக்கு ஆங்லியா பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்து இருந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் நவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பேராசியர் தெரிவித்துள்ளார்..

பின்லாந்தின் யுலு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் புது வகையான ரத்த பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து அவர் ”ரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும்.

அந்த வகையில், பின்லாந்தில் 17,000 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் ஆகியோரின் ரத்த மாதிரிகளில், அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த ரத்தப் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.

இதேபோல் பிற நோயால் தாக்கப் பட்டவர்களின் உடல்நிலையையும் இதன் மூலம் அறியலாம். நன்றாக இருப்பவர்களின் ரத்தத்துக்கும், நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன. இதை கண்டறியும் நவீன சோதனைக்கு, நியூக்ளியர் மேக்னடிக் ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியும்:. என்று மைகா தெரிவித்துள்ளார்

இதெல்லாம் இங்கு சகஜம் தான் - வாய்ப்பு கிடைத்தா விடுவாங்களா...!


பொது இடத்தில் டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்துள்ளார் ஹீரோ அமித் சத். தமிழில் ஆரம்பம் படத்தினைத் முனி 3 கங்கா படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி.

மேலும் இந்தியிலும் அமித் ராய் இயக்கத்தில் ‘ரன்னிங் ஷாதி.காம்’ படத்தில் நடித்துள்ளார்.

 இதன் ஹீரோவாக அமித் சத் தான் நடித்திருக்கிறார்.

ரொமான்டிக் கொமடி என்டர்டெயினர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் புரொமோஷன் மும்பையில் நடந்தது. இதில் அமித் சத், டாப்ஸி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக டாப்ஸியின் கன்னத்தில் திடீரென்று முத்தமிட்டுள்ளார் அமித் சத். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

அடுத்ததாக தெலுங்கில் களமிறங்கும் சூர்யா...!


பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சியில் சமூக பிரச்சனைகள் குறித்து நட்சத்திர நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி சத்தியமேவே ஜெயதே.

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது பருவம் மார்ச்-2ல் தொடங்க உள்ளது.

இந்நிகழ்ச்சி பிரபலமானதையடுத்து மராத்தி, பெங்காலி, தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தொலைக்காட்சிகளுக்கு திரைப்பட பிரபலங்கள் உள்ளே அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்யை மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் சூர்யாவும் நடத்த உள்ளனர்.

நம் நாட்டின் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடித்து வெளிப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் வெளிபடுத்த மக்கள் ஒன்றாக சத்தியமேவே குழு விசாரணை நடத்த பிராண்ட் அம்பேசிடர்களோடு பாடுபடுகிறது. 

''ஓடு ஓடு ஓடு...'' என்று. இதை ஓப்பனிங் சாங்காப் போட்டிருந்தா அப்பவே ஓடியிருப்போமே...!

நீங்க, உங்களோடு சில நண்பர்கள், நட்புக்காகத் தியாகங்கள் பண்றீங்க...'' - இப்படிக் கதை சொன்னாலே சசிகுமார் ஓகே சொல்லிவிடுவார். அவருக்கு ஓகே. நமக்கு? 'பிரம்மன்’ படத்துக் கதையைச் சொல்றேன். கவனமாக் கேளுங்க!

 கோவையில் 'மாடர்ன் தியேட்டர்’னு ஒரு பாடாவதி தியேட்டரை லீஸுக்கு எடுத்துப் படம் ஓட்டுகிறார் சசிகுமார். அவருக்கு ஒரு நண்பன் இருக்கணுமே. 'நண்பேன்டா’ சந்தானம். ஓட்டுவது எல்லாம் செகண்ட் ரிலீஸ் படங்கள் என்பதால் கூட்டமே வருவது இல்லை. எல்லாப் படங்களையும் போல அப்பா ஞானசம்பந்தன் 'உதாவக்கரை’ என்று மகனைத் திட்டுகிறார்.

 தியேட்டருக்கு கமர்ஷியல் டாக்ஸ் கட்டாததால் கெடு விதித்து, நோட்டீஸும் ஒட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் காதலியை மணக்க வேண்டும் என்றால், இந்தப் பாடாவதி தியேட்டரைத் தலைமுழுகிவிட்டு வேறு ஏதாவது உருப்படியான வேலை பார்க்க வேண்டும் என்ற நிர்பந்தம்.

ஆனாலும் தியேட்டரைக் கைவிட மறுக்கிறார் சசிகுமார். உருப்படவே மாட்டேன் என்று அவர் தலைகீழாய்த் தண்ணி குடிக்கிறார். ஏன்? இங்கே தொடங்குது ட்விஸ்ட். அதுக்கப்புறம் படத்தோட இரண்டாம் பாதி முழுக்க ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்டுகள்.

முதல் ட்விஸ்ட் சந்தானத்தைப் போலவே சின்ன வயதில் சசிகுமாருக்கு இன்னொரு நண்பன் இருக்கிறார். இரண்டு பேருக்கும் அப்படி ஒரு சினிமா தாகம். கீழே கிடக்கும் ஃபிலிம் துண்டுகளை எடுத்து, அவர்களே படம் ஓட்டிப் பார்க்கிறார்கள். ஸ்கூலை கட் அடித்துவிட்டுப் படம் பார்த்து வீட்டில் மாட்டுகிறார்கள்.

 சசிகுமாரின் நண்பன் மதன்குமாரின் கலை தாகத்தைப் புரிந்துகொண்ட அவரது அப்பா, ''சசிகுமாரிடம் பேசக் கூடாது'' என்று சத்தியம் வாங்கிவிட்டுச் சொல்கிறார், ''நீ இந்த ஊரில் இருந்தா டைரக்டர் ஆக முடியாது. டவுன் ஸ்கூலில் படிச்சாதான் டைரக்டர் ஆக முடியும்'' என்று. (அதுக்குள்ளே முறைச்சா எப்படி?). அதேபோல் வளர்ந்து தெலுங்கில் மூணு ஹிட் கொடுத்து பெரிய டைரக்டர் ஆகிவிடுகிறார் நண்பன் மதன்குமார்.

 ஐந்து லட்சம் கமர்ஷியல் டாக்ஸ் கட்டினால்தான் தியேட்டரை மீட்க முடியும் என்ற நிலையில் சின்ன வயசு ஃப்ளாஷ்பேக் கொசுவத்தியை சந்தானத்திடம் பற்றவைக்கும் சசிகுமார், அதே கொசுவத்தியை நண்பன் மதன்குமாரிடம் பற்றவைத்து ஐந்து லட்சம் வாங்கி வர, சென்னைக்கு பஸ் ஏறுகிறார்.

சென்னையில் டைரக்டர் மதன்குமாரின் அட்ரஸை சூரியிடம் விசாரித்துத் தப்பாக தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷைச் சந்திக்கிறார். அங்கே புதிய இயக்குநர்களிடம் கதை கேட்கும் ஜெயப்பிரகாஷ், சசிகுமார், மதன்குமாரின் அசிஸ்டென்ட் என்று அவராகவே நினைத்து, சசி சொன்ன நட்புக் கதையையும் சினிமாக் கதை என்று நினைத்து ஐந்து லட்சம் அட்வான்ஸ் கொடுத்து (அதே ஐந்து லட்சம்) ''இந்தக் கதையைப் படமாப் பண்ணிடுங்க'' என்கிறார்.

உள்ளே உண்மையைச் சொல்லாமல், வெளியே வந்து ஃபீல் ஆகும் சசிகுமாரிடம், ''கவலைப்படாதே''னு சொல்லி, சினிமாவைக் கற்றுக்கொள்ள சில படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராகச் சேர்த்துவிடுகிறார் சூரி. ஒரே நேரத்தில் டைரக்டர், அசிஸ்டென்ட் டைரக்டர் என்று சவாரி செய்யும் சசிகுமாரைச் சந்தித்தேவிடுகிறார் நண்பன் டைரக்டர்.

''ஏன் என் அசிஸ்டென்ட்னு பொய் சொன்னே?'' என்று கேட்பவரிடம், ''நான் உங்க ரசிகன்'' என்று சமாளிக்கிறார் சசிகுமார். ''உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே?'' என்று சூரி கேட்க, ''நண்பனாத் தேடி வரும்போதுதான் உண்மை சொல்லணும்'' என்று தத்துவம் நம்பர் 2001-ஐ உதிர்க்கிறார் சசி. ஆனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருக்கே உண்மை தெரிய, ''உங்க கதையைப் படமா எடுத்தா கண்டிப்பா 100 நாள் ஓடும். (நோ, நோ அப்படில்லாம் முறைக்கக் கூடாது). ஆனா சினிமா அனுபவம் இல்லாததால் கதையை என்கிட்ட வித்துக் காசு வாங்கிக்குங்க'' என்று ஜெயப்பிரகாஷ் சொல்ல மறுக்கிறார் சசிகுமார்.

அதுக்கப்புறம் நண்பன் டைரக்டரே சசிகுமாரைச் சந்தித்து, ''தமிழில் முதல் படம் பண்ணப்போறேன். என்கிட்ட கதை இல்லை'' என்று கேட்கிறார். (எங்க 'ஜெயம்’ ராஜாவெல்லாம் கைவசம் கதையே இல்லைன்னாலும் தெலுங்குப் படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுப்பாப்ல.

 தெலுங்குல மூணு ஹிட் கொடுத்த மதன்குமாருக்கு கதைப் பஞ்சம். ஹூம்) ''நீங்க கேட்டாக் கட்டை விரலையே காணிக்கையாத் தருவேன். கதையைத் தர மாட்டேனா?'' என்று தத்துவம் நம்பர் 3001-ஐ உதிர்த்துவிட்டு, தயாரிப்பாளரிடம் காசும் வாங்க மறுத்து, மீண்டும் கோயம்புத்தூருக்கே வருகிறார் சசிகுமார்.

அங்கே வந்து பார்த்தால், சசிகுமார் கோயிலா நினைச்சுக்கிட்டிருந்த தியேட்டரில் வளைச்சு வளைச்சு பிட்டுப் படங்கள் ஓட்டுகிறார் சந்தானம். ஏற்கெனவே தயாரிப்பாளரிடம் வாங்கிய ஐந்து லட்சத்தை ஊருக்கு அனுப்பியும் ஏன் சந்தானம் கஜகஜா படம் ஓட்டுகிறார்?

அதுக்கும் ஒரு காரணம் இருக்குல்ல? சசிகுமார் டைரக்டர் ஆகிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டு ஞானசம்பந்தனுக்கு சந்தோஷத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாம். (இவ்வளவு ட்விஸ்ட் வெச்சா, வராம என்னங்க பண்ணும்?) ஞானசம்பந்தனுக்கு சிகிச்சை பார்த்ததில் ஐந்து லட்சம் அவுட் ஆக, அப்புறம் என்ன, ஷகிலாதான், சல்சா படம்தான். டயர்ட் ஆகாதீங்க பாஸ், இன்னொரு முக்கியமான ட்விஸ்ட். சசிகுமாரின் காதல் பெண்ணுக்கும் நண்பன் டைரக்டருக்கும் திருமணம் வேறு நிச்சயமாகிவிடுகிறது.

தியாகி பென்ஷன் வாங்காமலே நட்புக்காகப் பல தியாகங்களைச் செய்யும் சசிகுமார் இதையும் ஏற்றுக்கொள்கிறார். திடீரென்று கமர்ஷியல் டாக்ஸ் அலுவலகத்தில் இருந்து சசிகுமாருக்கு அழைப்பு. ''நீங்க மக்களுக்குச் செஞ்ச சேவையைப் பாராட்டி அரசாங்கமே டாக்ஸைத் தள்ளுபடி செஞ்சுடுச்சு'' என்கிறார் அதிகாரி. (நல்லாக் கவனிங்க மக்களே! தியேட்டரை மூடுறதுக்கு முன்னால ஓடினது எல்லாமே பிட்டுப் படங்கள்...சேவை!)

அப்புறம் என்ன, தியேட்டரின் நூலாம்படையை எல்லாம் நீக்கிவிட்டு, யாருமே வராத தியேட்டரில் தனியாகப் படம் ஓட்டி ஃபீல் ஆகிறார் சசிகுமார். அதே நேரம் நண்பன் டைரக்டருக்கும் காதலிக்கும் திருமண ரிசப்ஷன். அப்புறம் உண்மை தெரிஞ்ச டைரக்டர் சசிகுமாரைப் பார்க்க வந்து...

ஹலோ பாஸ், ஏன் படிச்சிட்டிருக்கும்போதே பாதியில் எந்திரிச்சு தம் அடிக்கப் போயிட்டீங்க? நாங்கல்லாம் பாவம் இல்லையா? 'அப்போ படத்தில் வித்தியாசமே இல்லையா?’ங்கிறீங்களா? ஏங்க இல்லை? இதுநாள் வரைக்கும் கரட்டுமேட்டில் கைலியோட சுத்திட்டிருந்த சசிகுமார் முதன்முறையா ஃபாரீன் டூயட்டெல்லாம் ஆடறாரே! மறுபடி மறுபடி முறைக்காதீங்க பாஸ். ஏற்கெனவே நொந்துபோயிருக்கோம்.

ஆனா ஒண்ணுங்க, எனக்கெல்லாம் இந்தப் படத்தில் ரெண்டே ரெண்டு கோரிக்கைதாங்க.

கோரிக்கை நம்பர் ஒன் : படத்துக்கு 'பிரம்மன்’னு டைட்டில் வெச்சதுக்குப் பதிலா 'எமன்’னு வெச்சிருக்கலாம். மரண பயத்தைக் காட்டிட்டீங்களேய்யா?

கோரிக்கை நம்பர் டூ : படம் ஒரு வழியாக முடிந்து அப்பாடா என்று எழும் நேரத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் ஒரு பாடல் ஒலிக்கிறது, ''ஓடு ஓடு ஓடு...'' என்று. இதை ஓப்பனிங் சாங்காப் போட்டிருந்தா அப்பவே அப்படியே ஓடியிருப்போமே டி.எஸ்.பி. சார்!