Monday, 10 February 2014

அஜீரண தொல்லையிலிருந்து விடுபட ஓமம்!

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமி நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும்.


முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி ந“ங்கும். வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும். சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அஜீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்.


குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும். வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும். சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி நீங்கும்.


 இஞ்சிச்சாறுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, கல் உப்பைப் பொடித்துச் சேர்த்துக் குடித்தால், செரிமானக் கோளாறு சட்டென சரியாகும். கால் ஆணி சரியாக ஒரு எளிய வைத்தியம்: தக்காளியை இரண்டாக வெட்டி, அதன் சதைப் பகுதியை ஆணியின் மேல் வைத்து, மீதி அரை தக்காளியால் அதை மூடி, ஒரு துணியால் கட்டிக் கொண்டு தூங்கவும். கூடவே ஓமத்தை பொடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து, 1 டீஸ்பூன் அளவு இரவில் சாப்பிடவும். 1 வாரம் இரண்டையும் செய்து வர, கால் ஆணி குணமாகும்.


மணத்தக்காளி வாய் புண்ணுக்கு நல்லது எனத் தெரியும். மணத்தக்காளிக் கீரையை காரமில்லாமல் பச்சைப் பருப்புடன் சேர்த்து சமைத்தோ, கீரையை லேசாக வதக்கி, வதக்கிய மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தோ சாப்பிட, நீண்ட நாள் இருமலால் உண்டான தொண்டைப் புண்ணும், ரணமும் ஆறும். இஞ்சியைக் கழுவி, தோல் நீக்கி சின்னத் துண்டுகளாக வெட்டவும்.


சுத்தமான தேனில் அதை நான்கைந்து நாட்கள் ஊற வைக்கவும். தினம் இதில் ஒரு துண்டு சாப்பிட்டு வர, சருமச் சுருக்கங்கள் நீங்கி, இளமை ஊஞ்சலாடும். முட்டைக்கோஸை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் பொடியாகும்படி சுற்றவும். அத்துடன் கொஞ்சம் உப்பும் மிளகுத்தூளும் கலந்து, கொஞ்சம், கொஞ்சமாகச் சாப்பிட, எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும்.


முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பதும் பலன் தரும். திடீரென காது வலிக்கிறதா? பூண்டை உரித்து, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, வலிக்கிற காதுக்குள் 1 மணி நேரம் வைத்திருக்கவும். 2-3 நாட்களுக்கு அப்படிச் செய்தால், காது வலி சரியாகும். சீழ் வடிவதும் நிற்கும். 

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க…

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க…

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நிறைய உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த உணவுகளைப் பார்த்தாலும், சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இது கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய உணர்வுகள் தான். சிலருக்கு உணவுகளை சாப்பிடவே தோன்றாது. ஆனால் ஒருசில உணவுகளைப் பார்த்தால், அதன் மீது ஆசை அதிகரிக்கும். அப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுவார்கள். உதாரணமாக, நிறைய கர்ப்பிணிகள் இனிப்புகள், காரமான உணவுகள் அல்லது ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட விரும்புவார்கள்.

அதிலும் குறிப்பாக ஜங்க் உணவுகளை தான் பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவர். ஆனால் அவற்றை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடுவதை தவிர்கக வேண்டும். ஏனெனில் அவை உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். அவை சாதாரணமாகவே ஆரோக்கியமற்றது, கர்ப்பிணிகளுக்கு சொல்லவா வேண்டும்.

எனவே கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்று சிலவற்றை பட்டிலிட்டுள்ளோம். அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, கவனமாக இருங்கள்

சோடா

கர்ப்பமாக இருக்கும் போது கார்போனேட்டட் பானங்களான சோடா அல்லது கூல்டிரிங்ஸ் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் வாயுத் தொல்லையை அதிகரிப்பதோடு, அதில் கலோரிகள் அதிகம் உள்ளன.

தயிர்

பால் பொருட்களில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கும். எனவே கர்ப்பிணிகள் பால் பொருட்கள், குறிப்பான தயிரை அதிகம் சாப்பிட்டால், எலும்புகள் வலுவடையும்.

ஜூஸ்

ஜூஸ் வகைகளில் கேரட், பீட்ரூட் மற்றும் இதர பழச்சாறுகள் மிகவும் ஆரோக்கியமானவை. முக்கியமாக கர்ப்பிணிகளுக்கு சிறந்தது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி


பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பாக்டீரியா அதிகம் இருக்கும். ஜங்க் உணவுகளில் உள்ள இறைச்சிகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்டவையே. எனவே நிச்சயம் இதனை தவிர்க்க வேண்டும்.

முழு தானியங்கள்


தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும். மேலும் தானியங்களில் கலோரிகள் மிகவும் குறைவு.

நூடுல்ஸ்

இந்த உணவுகளை மிகவும் வேகமாக சமைத்துவிடலாம். ஆனால் அந்த உணவுகளை கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் உப்பு, கலோரிகள் அதிகம் இருப்பதோடு, செரிமானமடைவது கடினமாகிவிடும்

சீஸ்

கொழுப்பு குறைவான சீஸில் கலோரிகள் குறைவாகவும், கால்சியம் அதிகமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி இதில் பாக்டீரியா இருக்காது. எனவே இது கர்ப்பிணிகளுக்கான சிறந்த உணவாகும்.

உறைந்த உணவுகள்

உறைந்திருக்கும் உணவுகளில் உப்புகள் அதிகம் இருக்கும். அத்தகைய உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமற்றவை.

கேரட்

கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் சிறந்தது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதும்ட பொலிவோடு அழகாக இருக்க கேரட்டை அதிகம் சாப்பிடலாம்.

சாலட்

மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்றால் சாலட் என்று சொல்லலாம். ஏனெனில் சாலட்டானது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றால் செய்யப்படுவதால், இதில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிடுவதால், வயிறு நிறைவதோடு, கலோரிகளும் குறைவாக இருக்கும்.

பழங்கள்

பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பேரிக்கய் மற்றும் மற்ற பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அதிலும் அவற்றை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், கருவில் இருக்கும் சிசுவிற்கும் நல்லது. எனவே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆனால் பப்பாளி மற்றும் அன்னாசியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.