Wednesday, 5 February 2014

கோச்சடையான் Vs தெனாலிராமன்

 ஏப்ரல் 11ம் தேதி ரஜினியின் 'கோச்சடையான்' படத்தோடு வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் வெளியாகவிருக்கிறது.

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ பல்வேறு மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகிறது. ரஜினியோடு தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செளந்தர்யா இயக்கியிருக்கிறார்.

ஏற்கனவே ஏப்ரல் 11ம் தேதி சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மான் கராத்தே' மற்றும் விஷால் நடித்துவரும் 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.

வடிவேலுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் "சித்திரை திங்கள் "ஜெகஜால புஜபல தெனாலிராமன்" பராக்... பராக்... பராக்...!" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்டநாட்கள் கழித்து வடிவேலு நடித்து வருவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது 'கோச்சடையான்' படத்துடன் 'தெனாலிராமன்' படமும் வெளிவருவதால் விநியோகஸ்தர்கள் கடும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

'தெனாலிராமன்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் மொத்த பணிகளும் முடிந்துவிடும். இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மூத்த, சினிமா சூப்பர் ஸ்டார் வேடத்தில் - கமல்!

 ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல் அடுத்து நடிக்கவிருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் நடந்து வரும் சமயத்தில், தனது அடுத்த படமான 'உத்தம வில்லன்' படத்திற்கான கதை, திரைக்கதை இரண்டையும் எழுதி முடித்துவிட்டார் கமல்.

கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், கிரேஸி மோகன் மூவருமே 'உத்தம வில்லன்' பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ரமேஷ் அரவிந்த் படத்தினை இயக்கவிருக்கிறார். கிரேஸி மோகன் படத்தின் வசனங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றி வருகிறார். இசைப்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'விஸ்வரூபம் 2' படத்தின் பின்னணி இசையையும் ஜிப்ரான் தான் செய்து வருகிறார்.

இப்படத்தில் கமலுடன் பாலசந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் கமலுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கமலுடன் நடிக்க அவரின் மகளான ஸ்ருதிஹாசனிடம் கேட்டு இருக்கிறார்கள், ஆனால் அவரோ தேதிகள் இல்லை என்று கூறிவிட்டாராம். இப்படத்தில் கமல் மூத்த, சினிமா சூப்பர் ஸ்டார் வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச்சில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை முடிந்தவுடன் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க இருக்கிறார். 

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்!

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவ் பால்மர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதனையடுத்து அப்பதவிக்கான நபரை தேர்வு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்தது.

இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியலில் சத்யா நாதெள்ளா,சுந்தர் பிச்சை, விக் குண்டோத்ரா ஆகிய இந்தியர்கள் உள்பட 9 பேர் இருந்தனர். இதில், அனுபவம் மிக்க அதிகாரியாக இருந்த 46 வயது சத்யாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்து நியமித்திருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கழுகுக்கு பிறகு சிவப்பு !

இயக்குனர் மற்றும் நடிகருமான ராஜ்கிரண், நீண்ட இடைவெளி பிறகு நடிக்கும் படம் சிவப்பு . வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர்.கோவிந்த் அவரின் முக்தா என்டர்டைன்மென்ட்(பி)லிட் - புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் பட நிறுவனங்கள் இணைந்து, கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் படம் “சிவப்பு”.

அழுத்தமான கோணார் என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். நவீன்சந்திரா நாயகனாகவும் ரூபா மஞ்சரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் தம்பி ராமய்யா,செல்வா,போஸ்வெங்கட்,ஏ.வெங்கடேஷ்,அல்வாவாசு, பூராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

'சிவப்பு' பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டதுக்கு.....
சிவப்பு என்பது நிறம் மட்டுமல்ல பல உணர்ச்சிகளின் உறைவிடம் தான் சிவப்பு. அதில் கோபம், காதல், வறுமை, தோழமை, புரட்சி என நிறைய உணர்வுகளின் உள்ளடக்கம் தான் சிவப்பு நிறம்.

அதே போல் இந்த திரைக்கதையில் இது அத்தனையும் இருக்கும். அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலமாக இருப்பவர் கோணார். இவரது கட்டுமான நிறுவனத்தில் வேலை கொடுத்து வாழ வைக்கிறார்.

அங்கு நிகழும் சம்பவங்கலே இது என்றார்....

ஆச்சரியப்படும் உண்மைகள்..!

ஆச்சரியப்படும் உண்மைகள்

இன்று இணையதள உலகில் 1 பில்லியன் பயனர்களுடன் கூகுளுக்கு அடுத்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான்.

ஒரு நாளைக்கு கூகுள் கூட போகாமல் இருந்திடுவோம் ஆனால் பேஸ்புக் போகாமல் மட்டும் நம்மால் இருந்துவிட முடியாது.

அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மை அடிமைப்படுத்தி நமது முக்கிய தகவல்களை கொண்டுள்ளது எனலாம், அந்த பேஸ்புக் குறித்தும் நீங்கள் வியக்கும் வகையில் நிறைய தகவல்கள் உள்ளன.

இந்த தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

* இந்த உலகில் உள்ள 10ல் இருவருக்கு பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கிறது.

* இணையம் பயன்படுத்துவோரில் 80 சதவிகித மக்களுக்கு பேஸ்புக் அக்கவுன்ட் உள்ளது.

* ஒரு நிமிடத்தில் இதில் 10 லட்சம் லிங்குகள் ஷேர் செய்யப்படுகின்றன.

* ஒரு நிமிடத்தில் 3 மில்லியன் ஸ்டேட்டஸ் ஆப்டேப் இதில் பதியப்படுகின்றன.

* ஒரு நிமிடத்தில் 8 லட்சம் பேஜ் இன்வைட்ஸ் அனுப்பப்படுகின்றன.

* ஒரு நிமிடத்தில் 30 இலட்சம் போட்டோக்கள் TAG செய்யப்படுகின்றன.

* ஒரு நிமிடத்தில் 30 இலட்சம் பிரெண்ட் ரெக்வஸ்ட்கள் அனுப்பப்படுகின்றது.

* 9 கோடி போட்டோக்கள் கிறிஸ்மஸ் விடுமுறையில் மட்டும் பதியப்படுகின்றன.

* 80 சதவிகித இந்திய இளைஞர்கள் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.

* மேலும் 30 சதவிகிதம் பேர் பேஸ்புக்கில் இருப்பவர்களில் 35 வயதிற்கு மேல் இருப்பவர்கள்.

* 70 சதவிகித பேஸ்புக் யூஸர்ஸ் தினமும் லாக் இன் செய்கிறார்கள்.

* இதில் உள்ள மொத்த யூஸர்ஸின் சதவிகிதப்படி ஒவ்வொரு யூஸர்ஸூம் 220 பிரெண்ட்ஸ் வைத்துள்ளனர்.

* ஒரு மாதத்தில் சுமார் 900 பில்லியன் நிமிடங்கள் இதில் உள்ள மக்களால் பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறது.

* 50 பில்லியன் அளவுக்கு இதில் தினந்தோறும் போட்டக்கள் மற்றும் ஸ்டேட்டஸ் போடப்படுகின்றது.

* ஒரு யூஸர் ஒரு மாதத்தில் 90 ஸ்டேட்டஸ் அல்லது போட்டோக்களை ஷேர் செய்கிறார்.

* இதுவரை அதில் 70 வகையான மொழிகள் பேஸ்புக்கில் உள்ளது.

* ஒட்டுமொத்த பேஸ்புக் பயன்பாட்டில் 22 சதவிகிதம் அமெரிக்கர்கள் தான்.

* தினந்தோறும் 5 இலட்சம் யூஸர்கள் இதிலிருக்கும் TRANSLATION ஆப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர்.

* தினந்தோறும் இதில் 3 கோடி புதிய அப்ளிகேஷன்கள் ஏற்றப்படுகின்றது.

* இதை தினசரி மொபைல் மூலம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 250 மில்லியன் ஆகும்.

* ஒவ்வொரு மாதமும், 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளி வலைத்தளங்களில் பேஸ்புக்கை லிங்க் செய்கின்றனர்.

* social plugins ஏப்ரல் 2010 இல் தொடங்கப்பட்டது முதல் 10,000 புதிய வலைத்தளங்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் பேஸ்புக் ஒருங்கிணைக்கப்படுகின்றது.

* மேலும் 2.5 மில்லியன் வலைத்தளங்கள் காம்ஸ்கோர் இன் அமெரிக்க டாப் 100 வலைத்தளங்களில் மற்றும் காம்ஸ்கோர் உலகளாவிய முதல் 100 வலைத்தளங்களில் பாதிக்கும் மேற்பட்டது பேஸ்புக்கிற்கு உட்பட்டது.

* இதுவரை உலகில் 200 மொபைல் ஆப்ரேட்டர்ஸ் நிறுவனங்கள் பேஸ்புக்குடன் கூட்டு வைத்துள்ளது.

* அல் பசினோவின் முகம் தான் அசல் பேஸ்புக் முகப்பாக இருந்தது.

* பேஸ்புக்கில உள்ள POKE என்ற வார்த்தைக்கு இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

* உலகிலேயே அதிகம் பேஸ்புக் பயன்படுத்துவோர் அவுஸ்திரேலிய மக்கள் தான்.

* ஒரு பேஸ்புக் ஊழியர் வேலை விட்டு வெளியே வந்தால் அவருக்கு eBay 2 இலட்சம் ரூபாய் மாத சம்பளத்தில் வேலை தர தயாராக இருக்கின்றது.

சாமையின் மகத்துவம்...!

சாமையின் மகத்துவம்

சாமை என்பது சிறுவகை தானியங்களில் ஒன்றாகும், இது ஒரு புல் இனத்தை சார்ந்த பயிராகும், மலை கிராமங்களில் உள்ள மலை கிராம மக்கள் சாமையினை உணவு பொருளாக பயன்படுத்தி வந்தனர். அனைத்து மக்களும் சாமையின் உணவாக சாப்பிட்டு வருகின்றனர். பொதுவாக மக்கள் உணவு பொருளாக பயன்படுத்தி வரும் தானிய வகைகளை பெருவகை தானியம், சிறுவகைதானியம் என இரண்டாக பிரிக்கலாம்.

பெருவகை தானியம் அதாவது கம்பு சோளம், மக்காசோளம், நெல் உள்ளிட்டவைகளாகும். சிறுவகை தானியங்கள் அதாவது சாமை, பனிவரகு, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். குறிப்பாக தானிய வகைகள் அனைத்தும் சிறிய விதை கொண்ட புல் வகை இனத்தை சார்ந்தது.

உற்பத்தி செய்யப்பட்ட சாமையினை அரிசியாக்க கைகுத்தல், அரவை மிஷின் மூலம் அரைத்து அரிசியாக்கலாம். கை குத்தல், அரவை மிஷின் மூலம் தயாரிக்கப்படும் சாமை அரிசியில் சத்துக்கள் அதிகம் இருக்கும். பொதுவாக அரிசிகள் கரும்பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த சாமை அரிசியை பாலீஸ் போட்டும் அரிசியாக்கி சமைத்து உணவாக பயன்படுத்தலாம் அப்படி பாலீஸ் செய்யப்படும் சாமையில் குறைந்த அளவுள்ள சத்துக்கள் தான் இருக்கும்.

சாமையில் அதிக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இதனால் இதனை பலர் உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மலை கிராம மக்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய உணவாகும், சாமை உணவு விரைவில் பசிக்காது. இதனை சோறு போன்றும் கஞ்சி, களி போன்றும் உணவாக உட்கொள்ளலாம். பொதுவாக கொழுப்பு சத்து குறைந்த உணவாகும். ட்ரைகிளசைரஸ் குறைவான அளவில் உள்ளது. ஆன்பு ஆக்கிடன்ட் என்ற ஒரு வகை சாமை உணவாக சாப்பிடும் போது கிடக்கிறது இதனால் செல் சிதைவில் இருந்து மனிதர்களை கட்டுப்படுத்தும். விட்டமின் பி3 அதிகம் கொண்ட உணவாகும். புரோட்டின் அதிகம், நார் சத்து உள்ளிட்டவைகள் கிடைக்கிறது.