Saturday, 1 February 2014

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதில் உதடுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய உதடானது ஒருசில பருவக் காலத்தில் அதிகம் வறட்சி அடையும். குறிப்பாக குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு வறட்சி ஏற்படும் போது உதடுகளைச் சுற்றி வெள்ளையாக இருப்பதோடு, உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில சமயங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை மட்டுமின்றி, உதடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உதடுகள் அதன் இயற்கை அழகை இழந்து அசிங்கமாக காணப்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குளிர்காலத்தில் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்க எந்த பொருட்களைக் கொண்டு உதடுகளை பராமரித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கொடுத்துள்ளது.

அதைப் படித்து அவற்றைக் கொண்டு உதடுகளை பராமரித்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்யாக் எணணெயை தினமும் பலமுறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமல் இருப்பதோடு, உதடுகளின் இயற்கை அழகும் பாதுகாக்கப்படும்.

கற்றாழை

கற்றாழை ஜெல் கூட உதடு வறட்சியைத் தடுக்கும் அருமையான பொருள். எனவே தினமும் உதடுகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி வாருங்கள்.
உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

ரோஜாப்பூ

ரோஜாப்பூவில் சிறிது கிளிசரின் சேர்த்து அரைத்து, அதனை உதடுகளுக்கு தினமும் இரவில் தடவி வந்தால், உதடுகளின் நிறம் அதிகரிப்பதோடு, உதடுகளில் ஈரப்பதமும் தக்க வைக்கப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தாலும், உதடுகளின் வறட்சி தடுக்கப்படும்.
உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் ஈரப்பதை அதிகரிப்பதோடு, உதடுகளும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

தேன்

தேன் ஒரு அருமையான மாய்ஸ்சுரைசர். எனவே தினமும் தேனைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தால், உதடுகளில் உள்ள வறட்சியுடன், வெடிப்புகள் விரைவில் குணமடைந்து, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயும் அருமையான ஒரு பொருள். ஆகவே இதனையும் உதடுகளுக்கு தடவலாம்.

கிளிசரின்

1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டனை நீரில் நனைத்து உதடுகளை துடைத்து எடுக்க வேண்டும். இதுவும் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்று இருக்கும்.

க்ரீம் மில்க்

க்ரீம் மில்க்கை உதடுகளுக்கு தடவி வந்தாலும், உதடுகளில் பிரச்சனை ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.


வேஸ்லின் மற்றும் தேன்

வேஸ்லின் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை உதடுகளுக்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தாலும், நல்ல பலன் கிடைக்கும்.

எந்த உறவும் இல்லை! ஸ்ருதிஹாசன் பரபரப்பு!

தெலுங்கில் ராம்சரன்தேஜா, அல்லு அர்ஜூன் மற்றும் இந்தியில் ஜான் ஆபிரஹாம்,  அக்‌ஷய் குமார் என முன்னணி ஹீரோக்களுடன் 4 மிகப்பெரிய ஹீரோக்களுடன் கமிட் ஆகியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தெலுங்கு, இந்தி என இருமொழியிலும் வெளியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் D-Day திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் துணிவாக ஏற்று நடித்த கதாபாத்திரம் பாலிவுட்டில் அவரது மார்கெட்டை உயர்த்தியது.

சிகப்பு விளக்குப் பகுதியில் பணிபுரியும் பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றதுடன், திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான D-Day திரைப்படத்தை ‘தாவூத்’ என்கிற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட முயற்சி நடந்திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ருதிஹாசன் “உங்களது ஆதரவிற்கு நன் நன்றி.

 நான் நடித்த D-Day திரைப்படம் தமிழில் தாவூத் என்ற பெயரில் வெளியாவதற்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. என் அனுமதி இல்லாமல் இந்த முயற்சி நடந்திருக்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இதுபற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டதும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

 தனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படத்தின் மீதே ஸ்ருதிஹாசன் வழக்குத் தொடுக்கப்போவதாக கூறியுள்ளது இந்தி திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுட்த்தியுள்ளது.

அறிவை வளர்க்க சில வழிகள்...!

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர்.

அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.

உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.

அறிவை வளர்க்க சில டிப்ஸ்

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல.

ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர்.

ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.

மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும்.

ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக 'ஜாக்கிங்' செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர்.

மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும்.

மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும்.

உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.

இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

Facebook -ல் அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறியணுமா?

பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறியணுமா?

சமூக வலைதளங்களில் அனைவரும் பயன்படுத்தும் முதல் தளமாக அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்-ல் நாம் கொடுக்கும் வார்த்தைப்பற்றி என்ன பேச்சு நடைபெறுகிறது என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக் கூற ஒரு தளம் உள்ளது.

500 மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை நொடியில் அறிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது

இணையதள முகவரி :


இந்த்தளத்திற்கு சென்று நாம் என்ன வார்த்தையைப்பற்றிய தகவல்களை
தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தியதும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த

வார்த்தைப்பற்றி தற்போது பேஸ்புக்-ல் என்ன பேச்சு நடைபெறுகிறது என்பதை நொடியில் அறியலாம். இதைத்தவிர News , Music , Sports,Politics,Gossip,TV,Fashion,Movies,Deals,Travel,Brands,Games போன்ற எந்தத்துறை சார்ந்து தேட வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து எளிதாக தேடலாம்.

பேஸ்புக்-ல் நடக்கும் தகவல்களை நொடியில் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

பி.ஏ.பாஸ் - உல்லாச விருந்து - திரைவிமர்சனம்!

முகேஷ் பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். அவருக்கு இரு சகோதரிகள் உள்ளனர். அவன் படித்து கொண்டிருக்கும்போதே அவனது தாய் தந்தையர் சாலை விபத்தில் இறந்துவிடுகின்றனர். இதனால் அவனது தாத்தாவின் நிர்பந்தம் காரணமாக முகேஷ் தனது அத்தை வீட்டில் தங்கி அவர்களது வீட்டு வேலைகளை செய்து கல்லூரி படிப்பை தொடருகிறான்.  அவன் கல்லூரிக்கு சென்ற நேரம் போக மீதி நேரங்களில், அத்தை வீட்டிற்கு அருகே உள்ள கல்லறையில் வேலை செய்து வரும் ஜானியுடன் செஸ் விளையாடி பொழுதை கழிக்கிறான். அவனிடம் தனது தங்கைகளின் எதிர்காலம் பற்றியும் அடிக்கடி முகேஷ் புலம்பி வருகிறான்.

இவ்வாறு அத்தை வீட்டில் அவன் வசித்து வரும் சூழலில் ஒருமுறை மகளிர் அணி குழுவை சேர்ந்தவர்கள் அவனது அத்தையை பார்க்க வருகிறார்கள். இக்குழுவினருக்கு முகேஷ்  டீ வழங்கும்போது தன்னை விட மூத்தவளும் திருமணமானவளுமான நாயகி சரிகாவை சந்திக்கிறான். அப்போது வீட்டு வேலை செய்வது குறித்து அவனை மகளிர் குழுவினர் கேலி கிண்டல் செய்கின்றனர்.

ஒரு நாள் அவனது அத்தை முகேஷிடம் சரிகாவின் வீட்டுக்கு சென்று அவளிடம் உள்ள ஆப்பிள் பையை வாங்கி வருமாறு  கூறுகிறார். முதலில் செல்ல மறுக்கும் முகேஷ் இரு நாட்கள் கழித்து சரிகாவின் வீட்டுக்கு செல்கிறான். அப்போது தன்னை விட மிக இளமையாகவும், கட்டான உடல் வாகும் கொண்டவனான முகேஷை அடையும் நோக்கில் சரிகா உடை மற்றும் உடல் ரீதியாக அவனை மயக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுகிறாள். ஒரு கட்டத்தில் அப்பாவியும், கூச்ச சுபாவமும் கொண்டவனான முகேஷ் அவளுடன் கலவியில் ஈடுபட்டுவிடுகிறான். பின்னர் சரிகா தனது வீட்டுக்கு தொடர்ந்து அவனை அழைத்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வருகிறார். அவ்வாறு உல்லாசத்தில் ஈடுபடுவதற்காக அவனுக்கு பணத்தையும் தருகிறாள். முதலில் பணத்தை வாங்க மறுக்கும் அவன் பின்னர் அதை வாங்கிக்கொள்கிறான்.

இந்நிலையில் அவனது தாத்தா இறந்துவிட்டதாக அவனுக்கு தகவல் வருகிறது. உடனே அவன் தனது தாத்தா வீட்டிற்கு சென்று அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த பின் தனது தங்கைகளை அழைத்து சென்று காப்பகத்தில் சேர்க்கிறான். தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் அவனுக்கு ஏற்படுகிறது. இதனால் அவனுக்கு பணம் அதிகமாக தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளும் சரிகா தன்னை போல் உல்லாசத்திற்கு ஏங்கும் பெண்களுக்கு அவனை அறிமுகப்படுத்தி ஆண் விபச்சாரியாகவே மாற்றி விடுகிறாள். அவனது கைக்கும் ஏராளமான பணம் கிடைக்கிறது. தனக்கு கிடைத்து வரும் பணத்தை அவன் சரிகாவிடமே கொடுத்து சேமித்து வருகிறான். அவ்வாறு அவனது பணத்தை சேமித்து வைக்க, தன்னுடன் கலவியில் ஈடுபடவேண்டும் என சரிகா கூறுகிறாள். அதை ஏற்று அவனும் அவளை திருப்திபடுத்துகிறான். இந்த நிலையில் ஒருநாள் இருவரும் கலவியில் ஈடுபடும்போது சரிகாவின் கணவர் அவர்களை பார்த்துவிடுகிறார். அவர் கோபமடைந்து இருவரையும் அடித்து துவைத்ததோடு மட்டுமல்லாமல் அவனது அத்தையிடமும் அவர்களது செயல்கள் பற்றி கூறிவிடுகிறார்.

இதனால் கோபமடைந்த அத்தை அவனை வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். வீட்டிலிருந்து துரத்தப்படும் அவனை ஜானி தன்னுடன் தங்கிகொள்ள அனுமதிக்கின்றான். ஆனால் மறுபடியும் பணத்தேவை அவனுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. சரிகாவை தேடிப்போகின்றான், ஆனால் அவள் தனது கணவருக்கு இருவரின் விஷயமும் தெரிந்துவிட்டதால் இனி தனது வீட்டிற்கு வரவேண்டாம் என கூறிவிடுகிறாள். மற்ற பெண்களை அவன் அணுகும்போது அவர்களும் அவனை தவிர்த்து விடுகின்றனர். கடுமையான பண நெருக்கடியில் சிக்கிய அவன் தான் ஏற்கனவே சரிகாவிடம் கொடுத்து வைத்துள்ள பணத்தை கேட்கும்போது அவள் அதைதர மறுத்து ஏமாற்றிவிடுகிறாள்.

அவனுக்கு அவனது பணம் கிடைத்ததா, தன்னை ஏமாற்றிய சரிகாவை பழிவாங்கினானா என்பதே மீதிக்கதை. இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள ஷதாப் கமல் அருமையாக நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள ஷில்பா சுக்லாவும் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து கதைக்கு தேவையான ஆபாசமான நடிப்பில் அசத்தியிருக்கிறார். எந்த வித சினிமாத்தனமுமின்றி யதார்த்தமான வாழ்க்கையை படமாக்கிய இயக்குனர் அஜய் பாஹ்லை வெகுவாக பாராட்டலாம்.

குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து..!

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான  வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன்  தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை  அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று  கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது,  நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி  தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள்  மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும்.  அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி  நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக்  காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும்  கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து  வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில்  மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி  இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று  இருக்கும்.

குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்...?

சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை  அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்தியம்.

இருமல்

குழந்தையின் பிஞ்சு உடல்களை எளிதில் தாக்கும் இருமல். இருமல், சளி வந்ததும் அலையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனையும் இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று.. குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து  விடுபட ஒமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு  முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஒய்வு எடுக்க செய்ய வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்சனை வராமல்  தடுக்கலாம்.

மேலும் இருமல் பிரச்சனைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு தரலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய  துணியில் ஈரமாக்கி குழந்தையின்  தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

டயாபர் ஒவ்வாமை

டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க  வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குழந்தைகளை குளிக்க வைக்கலாம். 

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு!

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள்  சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற  சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள்.

பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும்  சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில்  குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல  மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.

தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி  சூரணம் செய்து 1ஸ்பூன்  அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி  இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய  சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சளி தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும்  தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம்  மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின்  உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.

குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு  சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி  பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.

அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும்.  எனவே பாலூட்டும்  தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து  மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பற்களில் கரை படிந்துள்ளதா....? அறிந்துகொள்வோம்!


பற்களில் கரை படிந்துள்ளதா....?

இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.

முயற்சித்துப் பாருங்களேன்....... பற்களில் கரை படிந்துள்ளதா....?

இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.

முயற்சித்துப் பாருங்களேன்......

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு :

பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :

மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.கண்பார்வை திறன்
கூடும் .

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும்
போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை
சரி செய்கிறது.

மோதிரம் :

பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு
அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :

கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :

கையின் பூஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம்
குறைகிறது .மார்பக புற்று நோய்
வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி
பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில்
இருந்து முழங்கைக்கு மேல்
வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :

வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.முக்கியமான
ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட்
செய்யபடுகிறது.இதன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய்
எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :

ஒட்டியாணம் அணியும்
போது இடுப்பு பகுதியின்
சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம்
கூடும்.வயிற்று பகுதிகள்
வலு வடையும்.

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சில
புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான
தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள்
தூண்டப்படும் பொது அது சமந்தமான
நோய்கள்
குணமாகும் .மூக்குத்தி அணியும்
பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல்
சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :

கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக
முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க
பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம்
தீர்க்கலாம் .

மெட்டி :

மெட்டி அணிவது கர்ப்பப்பையை
பலப்படுத்தும் .செக்ஸுவல்
ஹார்மோன்கள் தூண்டும்.
பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில்
அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால்
சுரப்பை அதிகப்படுத்தும் 

ரம்மி - ஆட்டம் நல்லா ஆடியிருக்கலாம்... - விமர்சனம்!

 
காதல் செய்தால் ஆளையே வெட்டும் ஒரு கட்டுக்கோப்பான கிராமத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முளைக்கும் காதலை மையமாக வைத்துதான் ரம்மி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் படிக்க இனிகோ பிரபாகரும், விஜய் சேதுபதியும் வருகின்றனர். பின்னர் அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யாவை விஜய் சேதுபதியும், காயத்ரியை இனிகோவும் காதலிக்கிறார்கள். அங்கு படிக்கும் சூரியும் இவர்களுக்கு நண்பர்களாகிறார்.

ஒருநாள், காதலித்தாகக் கூறி ஒருவனை நடுரோட்டில் அந்த ஊர்க்காரர்கள் வெட்டிச் சாய்ப்பதை பார்க்கும் இனிகோவும், விஜய் சேதுபதியும் பதறிப்போகிறார்கள். இனிகோ காதலிக்கும் காயத்ரி அந்த ஊர் தலைவரின் தம்பி மகள் என்பதால் வயிற்றில் மேலும் புளியை கரைக்கிறது. இருந்தாலும் அவர்கள் ஊர்க்காரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் காதலித்து வருகிறார்கள்.

ஒருநாள் இனிகோ தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பி வருகிறார். வந்ததும் விஜய் சேதுபதியை காணவில்லை. அப்போது அங்கு ஒரு லெட்டர் இவரது கண்ணில் படுகிறது. அதில் விஜய்சேதுபதி தான் காதலித்த பெண்ணை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டதாகவும், ‘நீயும் தப்பித்துக்கொள்’ எனவும் எழுதி வைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி அழைத்துக் கொண்டு சென்றவர் ஊர் தலைவரின் மகள் என்பது அப்போதுதான் இனிகோவிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில், அந்த ஊர்க்காரர்கள் விஜய் சேதுபதியை கொலை செய்துவிட்டு ஐஸ்வர்யாவை இழுத்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் இனிகோ பதற்றத்தில் இருக்கிறார்.

இறுதியில் தனது காதலனை கொலை செய்த ஊர்க்காரர்களை ஐஸ்வர்யா பழிவாங்கினாரா? இனிகோ தனது காதலியுடன் கைகோர்த்தாரா? என்பதே மீதிக்கதை.

நிறைய படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்த இனிகோ பிரபாகருக்கு இந்த படத்தில் ஹீரோ அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த படத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதியை மையப்படுத்தியே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதனால், தியேட்டருக்கு விஜய் சேதுபதியை எதிர்பார்த்து சென்றதால் இவரை ரசிக்க முடியவில்லை. மற்றபடி, காதல், காமெடி, ஆக்க்ஷன் என எல்லாவற்றிலும் தூள் கிளப்புகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வர சான்ஸ் இருக்கிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் நட்பின் அடிப்படையிலேயே நடிக்க ஒத்துக்கொண்டதாக சொல்லியிருந்தார். ஆனால், இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருக்கு இல்லை என்பது வருத்தமே. ஹீரோயின் எதைச் சொன்னாலும் அப்படியே செய்யும் ஒரு மொக்கையான கதாபாத்திரம். இதை இவர் ஏற்று நடிக்காமலேயே இருந்திருக்கலாம். ரசிகர்களை ரொம்பவும் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

நாயகி காயத்ரி முன்பிருந்ததைவிட இந்த படத்தில் ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறார். பார்க்கவே பாவம்போல் இருக்கிறார். இவரை வைத்து டூயட் எல்லாம் ஆடவைச்சு நம்மை பயமுறுத்துகிறார்கள். துணை நடிகையாக நடித்துவந்த ஐஸ்வர்யா இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக வருகிறார். கதையை தாங்கி நிற்கிற வலுவான கதாபாத்திரம் இவருடையது. ஆனால், இவருக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் கொடுக்காமல், கடைசியில் விஸ்வரூபம் எடுப்பதுபோன்ற காட்சியை வைத்திருப்பதால் ரசிக்க முடியவில்லை.

சூரிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கல்லூரி காட்சிகளில் நன்றாக காமெடி பண்ணுகிறார். இடைவேளைக்கு பிறகு நல்ல குணசித்திர நடிகராகவும் மாறிவிடுகிறார். ‘கும்கி’யில் லட்சுமிமேனனின் அப்பாவாக நடித்திருப்பவர் இந்த படத்தில் ஊர் பெரியவராக வருகிறார். இவரைவிட இவருக்கு அடியாளாக வருபவர் மிரட்டுகிறார். அவருடைய வில்லத்தனமான கண்கள் பயமுறுத்துகின்றன.

இயக்குனர் ஒரு காதல் கதையை ஏன் திரில்லாக கொடுக்க நினைத்தார்? என்று அனைவர் மத்தியிலும் கேள்வி எழுகிறது. முக்கிய கதாபாத்திரங்களின் தன்மையை ரசிகர்களுக்கு சொல்லாமல் மறைத்து சஸ்பென்ஸ் வைப்பதாக கூறி, அதை காட்சிப்படுத்துவதில் கோட்டை விட்டுவிட்டார். ஆனால், விஜய் சேதுபதி படம் என நம்ப வைத்து ரசிகர்களை வரவழைப்பதில் வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பருத்திவீரனில் ‘முத்தழகு’ கதாபாத்திரம்போல் காட்டவேண்டிய ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்தை சொதப்பியிருக்கிறார். படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் ஏதும் சம்பந்தம் இல்லாததுபோல் இருக்கிறது.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ‘கூட மேல கூட வச்சு’ பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு படத்தில் சஸ்பென்ஸை கூட்ட உதவியிருக்கிறது.

பான் கார்டு வாங்க பழைய நடைமுறையே தொடரும்: நிதித்துறை அறிவிப்பு!

பான் கார்டு பெற பழைய நடைமுறையே தொடரும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பான் கார்டு வழியாக செய்யப்படும் வரி ஏய்ப்புகளை தடுக்கவும், போலி பான் கார்டுகளை ஒழிக்கவும் வரும் 3ஆம் தேதி முதல் புதிய நடைமுடை பின்பற்றப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

புதிய நடைமுறைப்படி, பான் கார்டு பெற விண்ணப்பிக்கும் தனி நபர்கள் தங்களது பிறந்த தேதி, இருப்பிட சான்று மற்றும் அடையாளச் சான்று போன்றவைகளுக்கு ஆவணத்தின் அசலை சரி பார்க்க ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், மத்திய நிதி அமைச்சகம் திடீரென பழைய நடைமுறையே தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், பான் கார்டு பெற ஆவணங்களின் நகல்கள் மட்டுமே போதுமானது.

இளையராஜாவின் புதிய இசை முன்னோட்டம் - சாதனைப் படைக்கும் இசை! வீடியோ!




பாலா, இளையராஜா மீண்டும் இணையும் படத்தின் இசை முன்னோட்டம்!

வீட்டிலேயே 'மெடிக்கல் ஷாப்'!


வீட்டிலேயே 'மெடிக்கல் ஷாப்'!

சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ் பழுத்துவிடும் அளவுக்கு செலவாகிறது. மூலிகை, கைவைத்தியம் என நம் முன்னோர்கள் பின்பற்றிய மருத்துவ முறைகளை மறந்துவிட்டதால்தான் சின்னச் சின்ன வியாதிகளுக்குகூட பெரிய அளவில் செலவுக்கு ஆளாகிறோம். மூலிகைகள் அரிதாகிவிட்ட காலத்தில் அவற்றை எங்கே தேடுவது என நீங்கள் கேட்கலாம். வீட்டிலேயே அவற்றை வளர்க்க வழி இருக்கிறது.

'மூலிகைச் செடிகளைத் தொட்டியில்தான் வைத்து வளர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உடைந்த பிளாஸ்டிக் வாளி, பழைய தகர டப்பா, மரப் பெட்டி, சாக்கு, பிளாஸ்டிக் பை என்று பலவற்றையும் பயன்படுத்தி வளர்க்கலாம். இப்போது செடி வளர்ப்பதற்கு என்றே பிரத்யேகமான பிளாஸ்டிக் பைகள் கிடைக்கின்றன.

இரண்டு பங்கு செம்மண் (அ) வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு எரு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, செடியை நட இருக்கும் கலனில் நிரப்ப வேண்டும். இம்முறையில், ஐந்து கிலோ கலவையைத் தயார் செய்ய சுமார் 100 மட்டுமே செலவாகும். துளசிச்செடி 5, இன்சுலின் செடி 15 என செடியைப் பொறுத்து விலை மாறுபடும்.

சூரிய ஒளி படும் இடத்தில் செடியை வளர்க்க வேண்டும். ஈரப்பதம் குறையும்போது மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். கோடைகாலத்தைப் பொறுத்தவரை ஒருநாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீரே ஒரு செடிக்குப் போதுமானது. தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றினால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். செடி வளர்க்கும் கலனில், தேவையற்ற தண்ணீர் வடிவதற்கு வசதியாக துவாரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

செடி நட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு உரமிட வேண்டும். அதன்பிறகு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் செடியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 20 முதல் 40 கிராம் வரை கலப்பு உரம் போடலாம். கலப்பு உரம் போட்ட ஒரு மாதத்துக்குப் பின்னர் 100 கிராம் மண்புழு உரம் போட வேண்டும். உரம் போட்டபின் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். மழைக் காலங்களில் உரமிடத் தேவையில்லை.

செடிகளில், பூச்சிகளின் பாதிப்பு இருப்பதாகத் தெரிந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு மில்லி வேப்ப எண்ணெய், இரண்டு மில்லி ஒட்டும் திரவம் (ஜிமீமீ றிணீறீ) கலந்து செடியின் மீது தெளிக்க வேண்டும். ஒட்டும் திரவம் கிடைக்காவிட்டால் காதிபவன்களில் கிடைக்கும் காதி சோப்பை புளிய விதை அளவுக்குப் பயன்படுத்தலாம்.

செடி ஓரளவு வளர்ச்சி அடைந்தபிறகு அதில் உள்ள இலைகளைப் பறித்துப் பயன்படுத்தலாம்!'' என்கிறார்கள் இருவரும்.

வீட்டிலேயே மூலிகைகளை வளர்க்கும்போது ஆஸ்பத்திரி செலவு, காத்திருப்பு என அல்லாட வேண்டியது இருக்காது. மூலிகைகளின் பயன்பாடு குறித்து சித்த மருத்துவர் அருண் சின்னையாவிடம் பேசினோம். 'சளி, இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து துளசி. இதன் இலையை நன்றாகக் கழுவி அப்படியே சாப்பிடலாம் அல்லது சாறெடுத்தோ, கஷாயம் வைத்தோ குடிக்கலாம்.

ரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை நீக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வல்லமை வாய்ந்தது மணத்தக்காளி. இதன் இலை, பழங்கள் குடல்புண் மற்றும் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வல்லாரை நினைவாற்றலை மேம்படுத்தும். இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும். இந்த இலையை பச்சையாகவும் சாப்பிடலாம்; துவையல், கூட்டு, பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

கற்றாழை உடலை இளமையாக வைத்திருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

புதினாக் கீரை ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். புதினா ஜூஸ் குடித்தால், கொழுப்பு கரையும்.

திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத்தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரை இரும்புச்சத்து நிறைந்தது. கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு இது சிறந்த மருந்து. நினைவுத்திறனை அதிகப் படுத்தும். இதை துவையல் செய்தோ அல்லது கஷாயம் வைத்தோ சாப்பிடலாம்.

பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பலமாகும். எலும்பு மற்றும் மூல நோய்களுக்கு நல்ல நிவாரணி பிரண்டை. இதை சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணி கீரை தேகத்தைப் பொலிவாக்கும். கண்பார்வையை அதிகப்படுத்தும். பொடுதலைக் கீரை மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து!'' என்றவர், ''துவையல், குளம்பு, சட்னி என மூலிகைகளை உணவாக்கி சாப்பிடுவதன் மூலம் வியாதிகளை முன்கூட்டியே தவிர்க்கலாம். செலவையும் குறைக்கலாம்!''

மருத்துவக் காப்பீடு - மெடிக்ளைம்: சந்தேகமும் தீர்வும்...

மருத்துவக் காப்பீடு - மெடிக்ளைம்: சந்தேகமும் தீர்வும்...

'நான் ஏன் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கணும்? தேவை இல்லாமல் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரனுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கணும்?' என்ற நண்பர் ஒருவர், அலுவலகத்தின் கட்டாயம் காரணமாக மெடிக்ளைம் பாலிசியை எடுத்தார். இன்சூரன்ஸ் எடுத்த ஒன்றரை மாதத்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிருக்கு ஆபத்து இல்லை. இருப்பினும், மிகப் பெரிய காயங்கள் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவக் காப்பீடு இருந்ததால், மருத்துவச் செலவின்றி அவர் வீடு திரும்பினார்.

'ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும், அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவும் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில், மருத்துவக் காப்பீடு என்பது தவிர்க்க முடியாதது. மருத்துவச் செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால்தான் மக்களும் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.' என்கிறார் ஃபார்ச்சூன் பிளானர் நிறுவனரும், நிதி ஆலோசகருமான பி.பத்மநாபன்.

ஏன் எடுக்க வேண்டும் காப்பீடு?

எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். ஒருவேளை, எதிர்பாராத நேரத்தில் திடீர் விபத்துகள் ஏற்பட்டால், நோய்கள் தாக்கினால், அதை எப்படி எதிர்கொள்வது? அதற்குத் தீர்வாக இருப்பதுதான் மருத்துவக் காப்பீடு. எளிதாகச் சொல்லப்போனால், நமக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நோய்கள் வரலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்று நினைத்தால், குறைந்த அளவு பிரீமியத்தைக் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி, அதனால் ஏற்படும் செலவுகளை, காப்பீட்டு நிறுவனம் மூலம் பெறக்கூடிய திட்டமே மருத்துவக் காப்பீடு.

தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசி!

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், 'நான் ஏன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று நினைக்கலாம். ஆனால், ஃபேமிலி ஃப்ளோட்டர் என்ற பாலிசித் திட்டம் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பீட்டுப் பயன்பாட்டுக்குள் கொண்டுவரலாம். தனிநபர் பாலிசியும் உள்ளது. இது அவ்வளவு பிரபலம் இல்லை. ஒருவர் திருமணம் ஆவதற்கு முன்பு, தனிநபர் பாலிசி எடுக்கலாம். பின்பு திருமணம் ஆன பின்பு மனைவி மற்றும் குழந்தைகளையும் அதில் இணைத்துக்கொள்ள முடியும். தனித்தனியாக எடுப்பதைவிட, ஃப்ளோட்டர் பாலிசி பிரீமியம் குறைவு.

நம்மைப் பற்றிய விவரங்கள்!

க்ளைம் எளிதாக இருக்க வேண்டுமானால், நாம் நம்முடைய உடல் சம்பந்தப்பட்டவற்றை ஒன்றும் மறைக்காமல் சொல்ல வேண்டும். முகவரிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, ஏதாவது வியாதி இருக்கிறதா, இல்லையா என்று முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்து, அதனை விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவுசெய்திருக்க வேண்டியது அவசியம்

காப்பீட்டைக் கண்டறிவோம்!

மிகப் பெரிய சவால்... 'எந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு எடுப்பது, மேலும் எந்த நிறுவனத்தில் எடுப்பது, நமக்கு எது தேவை’ என்பதை நாம் அறிய வேண்டும், பிறகு சில கேள்விகளை இரண்டு, மூன்று நிறுவனங்களில் கேட்பதன் மூலம் நமக்கு ஓரளவு தெளிவு கிடைக்கும். இன்று இணையதளங்களில் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு விடைகிடைக்கும். அதிலும் ஒருமுறை நாம் தேர்வுசெய்தது சரியாக உள்ளதா என்று பார்க்க முடியும். 'காசுக்கேத்த தோசை’ என்பார்கள், அதுபோல பிரீமியத்தை மட்டும் பார்க்காமல், அதில் என்னென்ன கவர் செய்கிறார்கள்... அதில் ஏதாவது கண்டிஷன் இருக்கிறதா... என்று பார்த்தால், நம்மால் நல்ல ஒரு காப்பீட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

பொதுவான தவறு!

இன்று நிறையப் பேர், 'எனக்கு அலுவலகத்தில் காப்பீடு உள்ளது... அதனால் எனக்கு தனியாகத் தேவைப்படாது’ என எண்ணுகிறார்கள். அது மிகவும் தவறு. இன்று எல்லோரும் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் சூழல். மேலும் வெகு காலம் யாரும் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்வதில்லை, அப்படி இருக்கும்போது, ஒரு வேலையைவிட்டு மறு வேலையில் சேரும்போதுகூட, நமக்கு ஏதாவது நோய் வரலாம். மேலும், பாலிசி எடுத்துச் சில ஆண்டுகள் கழித்துதான் சிலவகையான நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும். அதனால் தனியாக எடுத்துக்கொள்வது நல்லது. இன்று புதிய வகையான பாலிசிகள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று நம்முடைய வரம்பு போக, உயிர்க்கொல்லி நோய்கள் எதுவும் கண்டெடுக்கப்பட்டால், நம்முடைய பாலிசி தொகைபோல இருமடங்கு கொடுக்கிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பும் பின்பும்!

சில நோய்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு சில டெஸ்ட் எடுக்க நேரிடும், சில மாத்திரைகள் சாப்பிடவும் செய்யலாம். இவை வழக்கமான மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் முடிவுசெய்யப்படும். 30 முதல் 60 நாட்களுக்கு முன்பு வரை ஆகும் செலவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையே இதன் வரம்புக்குள் கொண்டுவரப்படும். அதேமாதிரி நாம் மருத்துவமனையைவிட்டு வந்தவுடன் நோய் உடனடியாகக் குணமாகாது. அதன்பிறகும் ஆகும் செலவுகளையும் இதில் சேர்க்க முடியும். சிகிச்சைத் திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோய்கள், அதிக மருத்துவச் செலவை ஏற்படுத்தும் நோய்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

நிதிப் பற்றாக்குறை!

மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, நாம் உடல்ரீதியாக மட்டும் பாதிப்புக்குள்ளாவது இல்லை. மாறாக நம்மால் வேலைக்குச் செல்ல முடியாது. அதனால் நம்முடைய சம்பளத்தில் துண்டு விழும். நிதிச் சுமைகளை யார் கவனிப்பது என்பதுபோன்ற கேள்விகள் மனதைப் பிசையும். நாம் எடுக்கும் பாலிசிக்கு ஏற்ப நமக்கும், நம்மைப் பார்த்துக்கொள்பவருக்கும், சில பாலிசிகளில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை தருகிறார்கள்.

மருத்துவப் பரிசோதனை செய்பவர்கள், காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும்தான். எனவே, உங்கள் தரப்பு வாதம்தான் வெற்றிபெறும்.

இந்தியக் கார்களின் தரம்....!


இந்தியக் கார்களின் தரம்....! 

உலகில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பு குறித்த சோதனை ஜெர்மனியில் நடத்தப்பட்டது. லண்டனைச் சேர்ந்த கார் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய இந்தச் சோதனைக்கு, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா நானோ, மாருதி ஸூசுகி ஆல்டோ 800, ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு பிகோ மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ ஆகிய 5 இந்திய பிராண்டட் சிறிய ரக கார்கள் தோ்வு செய்யப்பட்டன.

ஒவ்வொரு பிராண்டிலும் தலா இரண்டு கார்களை கப்பல் மூலம் ஜொ்மனிக்கு அனுப்பினார்கள். இந்தக் கார்களை வேகமாக ஓட்டிச் சென்று மோத விட்டு சோதனை நடத்தப்பட்டது. ஒரு சோதனை 56 கி.மீ வேகத்திலும் மற்றொரு சோதனை 64 கி.மீ வேகத்திலும் நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக நடந்த இந்த சோதனையில் அனைத்து கார்களும் தோல்வியை தழுவின.

குறிப்பாக உலக அளவில் பாதுகாப்பு சோதனையில் இன்றியமையாததாக கருதப்படும் ஏர்பேக்குகள் எனப்படும் காற்றுப் பைகள் மேற்கண்ட எந்த காரிலும் இல்லை. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடக்கும் ஐந்து லட்சம் சாலை விபத்துக்களில் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். கார்களின் பாதுகாப்பு குறித்த எந்தச் சோதனையும் இந்தியாவில் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெந்தயப் பொரியல் - சமையல்!


தேவையானவை:

வெந்தயம் - ஒரு கப்,

துவரம்பருப்பு - அரை கப்,

 தேங்காய்த் துருவல் - கால் கப்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை,

மஞ்சள் தூள் - சிறிதளவு.


காய்ந்த மிளகாய்,

பச்சைமிளகாய் - தலா 2.

தாளிக்க: கடுகு,

 உளுத்தம்பருப்பு.


செய்முறை:


வெந்தயத்தை முந்தைய நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை, கிள்ளு பதத்தில் வேகவைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதில் வேகவைத்த வெந்தயத்தைப் போட்டு வதக்கி, வெந்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும்.

சுவையான ஆரோக்கியமான வெந்தயப் பொரியல் ரெடி...


(தேவைப்பட்டால், கடைசியில் சிறிது உப்பு சேர்க்கலாம்.)

கற்பனையின் பலம்...?

கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். "சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே" என்று சலித்துக் கொள்ளவேண்டாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ்ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த்தனர். மனக்கற்பனைக்கும் செயல் திறமைக்கும் ஏதாவது சிறிதளவாவது சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார்.

கம்ப்யூட்டர் திரையில் நிறைய எழுத்துக்களுக்கிடையே மறைந்திருக்கும் சில எழுத்துக்களை மட்டும் காட்டச் சொன்னார்கள். அதற்கு முன் அவர்களை கம்ப்யூட்டர் திரையை இரு கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளச் சொன்னார்கள். அடுத்து அதையே முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொன்னார்கள். இதை அவர்கள் நிஜமாக செய்ய வேண்டியதில்லை சும்மா மனத்தில் நினைத்துக்கொண்டாலே போதும்.

விளைவு, திரையை பின்னால் பிடித்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்தபோது மட்டும் மாணவர்கள் அதிக அளவில் எழுத்துக்களை அடையாளம் காட்டினார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! உளவியல்படி நமக்கு கையருகே இருக்கும் பொருளைப் பற்றித்தான் நாம் அதிக நேரம் கவனிக்கிறோம். அப்பால் (மனத்தளவில்கூட) இருப்பதை குறைந்த அளவே நினைக்கிறோம். ஒரு வகையில் கையருகே இருக்கும் பொருள்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதால், முடிவெடுப்பதில் இடைஞ்சலாகவே உள்ளன. அவை மறைவாக இருப்பதாக நினைக்கும்போது அது பற்றிய சிந்தனை சிதைவில்லாமல் நடப்பதாக சொல்கிறார்கள்.

மனக்கற்பனை நமது செயலை சிறிதளவாவது பாதிக்கும் என்பது இந்தச் சோதனையிலிருந்து உறுதியாகிறது.

மாலை நேரப் பூக்கள் - சொதப்பல். - விமர்சனம்!

நாயகி நிஷா தன் தோழி ஷோபியாவுடன் வெளியூரில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு நாள் நிஷா, நாயகன் ரவியின் நண்பன் செல்போன் கடைக்குச் சென்று ரீசார்ஜ் செய்கிறார்.

ரவி தன் நண்பன் கடையில் ரீசார்ஜ் செய்யும் பெண்களின் எண்களை எடுத்து ராங் கால் மாதிரி பேசி பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர். அந்த வகையில், நிஷாவின் செல்போன் எண்ணை எடுத்து அவருக்கு ராங் கால் மாதிரி பேசி கடலை போடுகிறார். நிஷாவும் அவர் யார் என்று தெரியாமலே பேசுகிறார்.

இந்த ராங் கால் நட்பு வலுவாக... தினமும் ரவியுடன் 24 மணி நேரமும் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார் நிஷா. இதனால் தோழி ஷோபியா கடுப்பாகி நிஷாவை திட்டுகிறார். ஒருநாள் ரவியும் நிஷாவும் முதன்முதலாக சந்திக்கிறார்கள். அங்கு நிஷா நாம் பேசுவதை நிறுத்திக் கொள்ளலாம். என் தோழிக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார். அதற்கு ரவி, ‘எனக்கும் இந்த காதல் எல்லாம் பிடிக்காது. எனவே, என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி ஒரு குட்டிக் கதையை கூறுகிறார். அந்த கதையை கேட்ட நிஷா அவன் மீது காதல் வயப்படுகிறார்.

இருவரும் காதலித்து வருகிறார்கள். ஒருநாள் நிஷா, ரவியை வீட்டிற்கு வரவழைக்கிறார். அங்கு தன் தோழி ஷோபியாவை அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது திடீரென்று கரண்ட் கட்டாகிறது. மெழுகுவர்த்தி எடுக்கப்போன சிறிது இடைவெளியில் ரவியும் நிஷாவும் படுக்கையறைக்கு சென்று தவறு செய்கிறார்கள். இதை ஷோபியா பார்த்து விடுகிறார்.

இதற்கிடையில் ரவி வேறொரு பெண்ணான பிரியாவை தன் வலையில் விழ வைக்க, அதே குட்டிக்கதையை சொல்லி ஏமாற்றுகிறார். இந்த விஷயம் நிஷாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் ரவியுடன் பேசுவதை தவிர்க்கிறார். நிஷாவை சமாதானம் செய்ய ரவி, நிஷாவிற்கு அடிக்கடி போன் செய்கிறார். அதை ஷோபியா எடுத்து பேசுகிறார். இதனால் ஷோபியாவிற்கும் ரவிக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

இப்படி பெண்களை அடுத்தடுத்து ஏமாற்றும் ரவி இறுதியில் யாருடன் சேர்ந்தார்? என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சுதாகருக்கு, பெண்களை வசியம் செய்து ஏமாற்றுவதற்கு ஏற்ற முகபாவனை உள்ளது. மற்றபடி இப்படத்தில் நடித்திருப்பவர்கள் நடிப்பு என்னும் பெயரில் ஏதோ செய்கிறார்கள். நாயகிகளுக்கு நடிப்பே வரவில்லை. கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பெற்றோர்களின் வளர்ப்பு இல்லாமல் இளைஞர்கள் வாழ்ந்தால் எப்படி வாழ்வார்கள் என்ற கதையை ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்காக, கவர்ச்சி, காமம் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறார் இயக்குனர். சிறு பட்ஜெட் படங்கள் வெற்றியடைந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்ற படங்கள் வெளிவந்து இளைஞர்களையும் சினிமா உலகத்தினரையும் சீரழிக்கிறார்கள். படத்தில் இசை என்னும் பெயரில் எல்லாப்படத்தின் பிண்ணனி இசையையும் போட்டு பார்ப்பவர்களை கடுப்பேத்துகிறார். நீண்ட காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகளை வைத்து இயக்குனர் ஏமாற்றி இருக்கிறார்.

இங்க என்ன சொல்லுது - சொல்ற மாதிரி எதுவும் இல்ல. - விமர்சனம்!

கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் டிரைவரான சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது. சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள் இரவில் இருவரும் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மீரா ஜாஸ்மினிடம் ரகளை செய்யும் சிலபேரிடமிருந்து அவரை மீட்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது.

ஒருநாள் மீரா ஜாஸ்மின் தன்னுடைய பிறந்த நாளுக்கு கணேசையும், சிம்புவையும் அழைக்கிறார். அங்கு போகும் சிம்பு, மீரா ஜாஸ்மினுக்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதை இன்முகத்துடன் வாங்கிக் கொள்ளும் மீரா ஜாஸ்மினுக்கு சிம்புவின் மீது காதல் வருகிறது. அதை அவரிடமே தெரிவிக்கிறார் மீரா ஜாஸ்மின்.

ஆனால், சிம்புவுக்கோ ஏற்கெனவே ஆண்ட்ரியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தன்னிடம் காதல் கூறியதும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கணேஷிடம் சொல்லி, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அவளிடம் கூறச் சொல்கிறார். ஒருநாள் தன்னை எப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறாய் என்று சிம்புவுக்கு மீரா ஜாஸ்மின் மெசேஜ் அனுப்புகிறார். அதை, சிம்புவின் வீட்டிற்கு வந்திருக்கும் ஆண்ட்ரியா பார்த்துவிடுகிறார். உடனே பதிலுக்கு மீரா ஜாஸ்மினுக்கு போன் செய்து அவரை திட்டிவிடுகிறார்.

ஏதும் அறியாத மீரா ஜாஸ்மின் கணேஷிடம் அவள் யார் என்று கேட்க, அவள்தான் சிம்புவை திருமணம் செய்துகொள்ளப் போகிறவள் என்பதை மீரா ஜாஸ்மினிடம் விளக்கிவிட்டு போனைத் துண்டித்துவிட்டுகிறார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கணேஷுக்கு போன் வருகிறது. தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறிவிட்டு, தற்போது மறுப்பதாக மீரா ஜாஸ்மின் கணேஷ் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூறியுள்ளார். போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் கணேஷ், அவளை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அங்கிருந்து அழைத்து வருகிறார்.

இதற்கிடையில் கணேஷின் நெருங்கிய உறவினரான மயில்சாமி அவரை பார்க்க வருகிறார். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாப் படம் எடுக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக மீரா ஜாஸ்மினின் வீட்டை அடமானம் வைக்கின்றனர். ஆனால், படம் எடுக்க காலதாமதம் ஆவதால், அந்த பணம் எல்லாம் கரைந்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல், மீரா ஜாஸ்மினின் நகையெல்லாம் அடகு வைத்து ரேஸில் போட்டு பணத்தையெல்லாம் கரைக்கிறார். இதனால் மீரா ஜாஸ்மின் அவர்மீது கோபத்துடன் இருக்கிறார்.

இறுதியில் கணேஷ், திருந்தி மீரா ஜாஸ்மினுடன் சந்தோஷமாக வாழ்ந்தாரா? அவரது வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

படத்தின் கதாநாயகன் விடிவி கணேஷ். தான் கதாநாயகன் ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். தன்னுடைய குரலையே பலமாக நம்பி, கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில் தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

சிம்பு படத்தில் கால் மணி நேரம்தான் வருகிறார். இவரும் ஆண்ட்ரியாவும் காட்டும் நெருக்கும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இருந்தாலும் ஓகே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டியிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு வெயிட்டான கதாபாத்திரம். ஆனால், கணேஷுக்கு ஜோடியாக நடிக்க எப்படித்தான் முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. இருவரும் கணவன்-மனைவியாக இருந்தாலும் படத்தில் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இவரே கணேஷிடம் அவ்வாறெல்லாம் நடிக்க முடியாது என்று கூறியிருப்பார் போலும்.

சந்தானம் இந்த படத்தில் கடவுளின் அவதாரம் போல் வருகிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். வழக்கம்போல் விடிவி கணேஷை கலாய்க்கும் காட்சிகள் அருமை. தரண் இசையில் ஒரு பாடல் கூட கேட்கும்படியாக இல்லை என்றே சொல்லலாம். ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தவர் இவரா என்று கேட்க தோன்றுகிறது. பின்னணி இசையும் படம் முழுக்க ஒரே மாதிரி உள்ளது.

திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போது அபரிதமான ஒன்று. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை என கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள். பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும். திரையில் நடப்பதைதான் விமர்சனமாக சொல்லப்படும். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை தியேட்டருக்கு உள்ளே நடப்பதையே விமர்சனமாக சொல்லலாம். 

4வது அழகி ஐஸ்வர்யா ராய்!

உலகின் மிக அழகான பெண்களில் 4வது இடம் பிடித்தார் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய்.

ஹாலிவுட் ஆன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஆன் லைனிலேயே இதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் இத்தாலிய நடிகை மோனிசாயெல்லுசி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார்.
அமெரிக்க நடிகை கேத் ஆப்டன் இரண்டாவது இடத்தையும், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 3வது இடத்தையும் பிடித்தனர்.

முன்னாள் உலக அழகியும், இந்திய நடிகையுமான ஐஸ்வர்யாராய் 4வது இடம் பிடித்தார். இந்தி நடிகை தீபிகா படுகோனே உலகின் மிக அழகான பெண்கள் போட்டியில் 29வது இடத்தை பிடித்துள்ளார். 4வது இடத்தில் தேர்வு செய்ததற்காக ரசிகர்களுக்கு ஐஸ்வர்யாராய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அழகும் திறமையும் உள்ள பெண்களைப் பற்றிய கருத்து கணிப்பை உலகம் முழுவதும் நான்கு மில்லியன் பேர் ஓட்டளித்து எனக்கு பெரிய கவுரவத்தை அளித்துள்ளனர் என்றும் இதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்

சிம்புவுக்கு ஒரே படத்தில் 2 ஜோடிகள் நயன்தாரா & ஹன்சிகா! Hot news..

சிம்பு ஹீரோவாக நடிக்க, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்க, தம்பி குறளரசன் இசை அமைக்க, மாஜி காதலி நயன்தாரா நடிக்க, பசங்க பாண்டிராஜ் இயக்க தயாராகிவருகிறது இது நம்ம ஆளு. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்த கட்டமாக பாடல் காட்சிகள் எடுக்க வேண்டும். வெளிநாட்டில் எடுக்கலாம் என்பது சிம்புவின் ஆசை. நயன்தாரா அதற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கவில்லை.

கடைசி கட்ட ஷூட்டிங்கில்தான் அடுத்த பரபரப்பு இருக்கிறது. படத்தில் திடீரென்று நயன்தாரா கமிட்டாகி படத்துக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்ததைபோல அடுத்த அதிரடி இருக்கிறது. கதைப்படி சிம்புவின் முதல் காதல் தோற்றுவிடும், காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று திரியும் சிம்புவுக்கு பெற்றவர்கள் நயன்தாராவை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விடுவார்கள். 6 மாதத்துக்கு பிறகுதான் கல்யாணம். அதுக்குள்ள லவ் பண்ணிக்குங்க என்பதுதான் பெற்றவர்களின் கண்டிஷன்.

அவர்களுக்கு லவ் வந்துச்சா வரலியா? லவ் வந்து கல்யாண நேரத்தில் பழைய காதலி திரும்பி வந்தாரா? சிம்புவுக்கு இருந்த மாதிரியே நயன்தாராவுக்கும் ஒரு முதல் காதல் இருந்ததா? இந்த விபரத்தையெல்லாம் சொன்னால் பாண்டிராஜ் சார் கோவிச்சுக்குவார்.

இப்போ விஷயத்துக்கு வருவோம். கடைசி ஷெட்யூல் பரபரப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? சிம்புவின் முதல் காதலி யார்? என்பதுதான். அதாவது முதல் காதலியாக நடிப்பவர் யார் என்பது? அந்த கேரக்டரை நயன்தாரா அளவுக்கு பவர்புல்லான ஒரு ஹீரோயின் செய்தால்தான் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் கருதுகிறார். இதனால் தீவிரமாக ஹீரோயின் வேட்டை நடக்கிறது. "அவரை அந்த கேரக்டர்ல நடிக்க வச்சிட்டீங்கன்னா கோடியை கொட்டிக் கொடுத்து படத்தை வாங்கிக்கிறோம்"னு டிஸ்ட்ரிபியூட்டர்களும், தியேட்டர்காரர்களும் சொல்லியிருக்காங்களாம். அவர்கள் சொல்லும் அந்த ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி.

சூரிய சக்தியில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாணவி சாதனை!

மின்சாரப் பிரச்னை எங்கும் உள்ளது. வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், இனிமேல்தான் வளரப்போகும் நாடுகள் என எவையும் இதற்கு விதிவிலக்கில்லை.இந்தப் பிரச்னைக்கான தீர்வு, நம் கண்ணெதிரே இருக்கிறது:

 சூரிய ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாலே போதும்!இதைக் கவனத்தில் கொண்டு அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார்.

எந்தவொரு அசுத்த நீரையும் குடிநீராக மாற்றும் இப்பொறிமுறையைக் கண்டுபிடித்த தீபிகா குரூப் என்ற இந்த மாணவிக்கு “அமெரிக்காவின் முதல் தர இளம் விஞ்ஞானி” பட்டம் வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை இம் மாணவிக்கு அமெரிக்காவின் Discovery Education மற்றும் 3M ஆகிய நிறுவனங்கள் 25,000 அமெரிக்க டாலர்களை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செயற்கை விழித்திரை பொருத்தி பார்வை! அரிய சாதனை!

உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே செயற்கையான முறையில் விழித்திரையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித்திரை பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.இதன் மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து விளையாட ஆரம்பித்தது.

எனவே இதே தொழில்நுட்பத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அமெரிக்க மருத்துவர்கள் கண்பார்வையற்ற இரண்டு நோயாளிகளுக்கு செயற்கை விழித்திரைகளைப் பொருத்தி அவர்கள் முன்னால் இருப்பவர்கள், பொருட்கள் மற்றும் வெளிச்சம் போன்றவற்றை அவர்கள் அறிந்து கொள்ளுமாறு உதவி புரிந்து சாதனைப் புரிந்துள்ளனர்.

மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரன் ஜெயசுந்தரா மற்றும் டேவிட் என் ஸாக்ஸ் என்ற மருத்துவர்கள் விழித்திரை நோய் இருந்த இரண்டு நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள்.தங்களின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெயசுந்தரா நோயாளிகளின் முன்னேற்றமும் தங்களுக்குத் திருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சிகிச்சை மூலம் அவர்கள் தங்கள் வீட்டில் சுதந்திரமாக நடமாடவும், மற்றவர்களைப் போல் பிற விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சியடையவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்கஸ் II ரெடினல் புரோஸ்தசிஸ் என்று அழைக்கப்படும் இந்த செயற்கை விழித்திரையானது சென்ற வருடம்தான் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றது. நோயாளி அறுவை சிகிச்சையிலிருந்து பூரணமாகக் குணமடைந்த பின்னரே இந்த விழித்திரையின் செயல்பாடு தொடங்கும். அதன்பின்னரே சுமார் ஒன்றிலிருந்து மூன்று மாத காலத்திற்கு புதிய பார்வைத் திறனுக்கான பயிற்சி அந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக மருத்துவத்துறை நிர்வாகம் தெரிவிக்கின்றது.