Thursday, 27 February 2014

விஷ‌த்தை மு‌றி‌க்கு‌ம் ‌பிரம‌த்த‌ண்டு!

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட, பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.


பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.


பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.


பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.


‌பிர‌ம த‌ண்டு பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும். 

உங்களுக்கு அதிகமா வியர்க்குதா?

பொதுவாக கோடையில் அதிக அளவில் வியர்வையானது வெளிப்படும். அதிகமாக வியர்ப்பது சங்கடம் கொடுக்க கூடியது. அதுவும், பயணத்தின் போதும், வெளியிடங்களில் தங்கும் போதும், ஒரு நாளுக்கு ஐந்து முறை உடை மாற்ற முடியாத போதும், அல்லது வியர்க்கும் பொழுது அடர்த்தியான மேலுறையை அணியும் போதும் தாங்க முடியாத வேதனை ஏற்படுகின்றது.

இத்தகைய வேதனையை தவிர்ப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுங்கள்...

வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்...

01. கையில்லா சட்டைகளை வாங்க வேண்டும். அதுவும் சட்டைகளின் ஓரப் பகுதிகள் அக்குளுக்கு மேலே போகாமல் கீழே இருத்தல் அவசியம். இதனால் வியர்வையின் ஈரம் துணிகளின் மேல் தங்கி நமக்கு அசெளகரியம் ஏற்படுத்தாமல் ஆவியாகி வெளியேறி விடும். இவ்வகைச் சட்டைகள் அளவில் சிரியதாய் இருப்பதால், பெட்டிகளிலும் நிறைய அடுக்கலாம். எனவே தேவையானவற்றை வாங்கி புத்துணர்வைப் பெறுங்கள். (ஆடைகளைத் தேர்வு செய்யும் போது காற்றோட்டமான பருத்தி ஆடைகள் போன்ற ஆடைகளை வாங்கவும்.)

02. தோல்பட்டையை மூடிக்கொள்வதற்கென சால்வை அல்லது தளர்வான ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம். இவ்வித ஆடைகளை குளிர் பருவத்தில் கழுத்தை சுற்றி கட்டி கொள்ளவும் பயன்படுத்தலாம். இது போன்று செய்வதால், உடலை மிகுதியான வெப்பமோ, குளிரோ தாக்காமலும் அதிகமாக வியர்க்காமலும் காத்துக் கொள்ளலாம்.

 அதிகமாக வியர்க்கும் இடங்களுக்கு செல்லும் பொழுது மாற்றுத் துணிகளை எடுத்து செல்லவும். அவை ஒரு சட்டை, ஒரு ஜோடி அரைக்கால் சட்டை, அல்லது தளர்வான காலணிகளாகவும் இருக்கலாம். இதில் அவசரத் தேவைக்கான பொருட்கள் அடங்கிய கைப்பை (emergency kit) ஒன்றையும் சேர்த்து கொள்ளலாம். அவற்றில், - டியோடரண்ட் (அலுமினியம் சேர்க்காதது) - முகம் துடைப்பதற்கு டிஸ்யூ பேப்பர் - ஒரு ஜோடி மாற்றுச் சட்டைகள் - வியர்வைப் பட்டைகள் - சிறிது சமையல் சோடா

03. துவைத்துப் பயன்படுத்தக் கூடிய அல்லது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வியர்வை அட்டைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக விற்கப்படுகின்றது. அதை இணையம் மூலமாக வாங்கலாம். வை விடுமுறை நாட்களுக்கு மிகவும் ஏற்ற பொருட்கள் என்பதோடு அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் புத்திசாலித்தனமானது. மேலும் இருக்கும் இடத்தில் நீச்சல் குளம் இருந்தால் தயங்காமல் நீந்தலாம். அது புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்க வல்லது.

04. என்ன சாப்பிடுகிறோம்? எப்போது வெளியே செல்கிறோம்? என்பதை கவனிக்கவும். பூண்டு மற்றும் காரமான மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதிகமாக வியர்க்க செய்யும் மது மற்றும் காபி போன்றவற்றை பருகுவதைத் தவிர்க்கவும். நட்பான மற்றும் மனதிற்கு அமைதி நிறைந்த சூழல்களை உருவாக்க வேண்டும். இவை மன அழுத்தம் அடைவதை தவிர்ப்பதோடு, உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் உதவும்.

ஜில்லுனு சில டிப்ஸ்..!

*வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர்தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதே பெஸ்ட்.

*இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.

*வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.

*டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.

*உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.

*இட்லி, அவியல், கூட்டு, ரெய்த்தா போன்று விரைவில் தயாரிக்கக்கூடிய உணவுகளை சமையுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்து, சூரியன் ‘ஹாய்’ சொல்வதற்குள் சமையலறை வெப்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள்.

*உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.

*இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

*உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!

தலைப்பை பார்த்ததும் ரைமிங்கா இருக்கேனு பார்க்கிறீங்களா? அது உங்களோட பார்வையை பொறுத்தது! சரி விஷயத்துக்கு போவோமா? மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா...

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.

ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.

இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.

அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.

இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.

மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.

ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும். இது சத்தியம்... சத்தியம். ஆமாங்க எல்லா நம்ம அனுபவந்தான். இது எல்லாமே எனக்கு நான் செஞ்சி பார்த்து முழு பலனையும் அனுபவிச்சது எ‌ன்‌கிறா‌ர் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர்.

ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்ற சந்தோஷத்திற்கு பின் உள்ள பயங்கள்!

ஒரு ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்றால் அதை விட சந்தோஷம் வேறு எதுவாக இருக்க போகிறது? அவனுடைய குழந்தையை கையை பிடித்து கொண்டு, இந்த உலகத்தை சுற்றி வருவது என்றால் அதில் உள்ள இன்பம் வேறு எதில் உள்ளது? பகல் என்றால் இரவு ஒன்று இருப்பதை போல, இந்த சந்தோஷத்திற்கு பின்னால் பல பயங்களும் ஒளிந்திருக்கிறது. ஆனால் அவைகளை பொதுவாக ஆண்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

தந்தையாக போகிற ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கு தகப்பன் என்று புதிதாக வர போகிற ஸ்தானம் மற்றும் அதிலுள்ள பொறுப்புகளை எண்ணும் போது, ஒரு பயம் இருக்கத் தான் செய்யும். இந்த புதிய மாற்றத்துடன் அவர்கள் ஒன்றி விட முதலில் கஷ்டப்படுவது இயல்பாக ஏற்படுவது தான். உண்மையை சொல்ல வேண்டுமானால், கருவை சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாய் தான் இந்த கதாநாயகனாக விளங்குகிறாள். இருப்பினும் தந்தையாக போகிறவர்கள் தகப்பன் என்ற ஸ்தானத்தில் பயணிக்கும் போது, வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு பல பொறுப்புகள் காத்துக் கொண்டு இருக்கிறது.

பயத்தை எல்லாம் கடந்து வருவது தான் தந்தையாக போகிறவர்களின் கடமையாகும். இருப்பினும் தான் அப்பா ஆக போகிறோம் என்ற நினைப்பை ஏற்றுக் கொள்ளவே பலருக்கு பயம் வந்துவிடும். அவர்களின் மனதில் குழப்பும், துயரமும் உலா வந்தாலும் கூட, அவர்கள் அதனை வெளியில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை.

புதிதாக தந்தையாக போகிறவர்களுக்கு, தங்கள் குழந்தையை சரியான முறையில் கையில் தூக்குவோமா என்ற பயம் அவர்களை சூழும். அதனுடன் சேர்த்து குழந்தைக்கு சரியாக டையப்பர் மாற்றுவது, அதனை பாதுகாப்பது, வீட்டை குழந்தைக்காக பாதுகாப்பாக மாற்றுவது போன்றவைகளும் பயத்திற்கான சில உதாரணங்கள். இவ்வகை பயன்கள் எல்லாம் இயல்பாக வருவது தான். ஆனால் அவைகளையெல்லாம் மிகைப்படுத்த தேவையில்லை.

அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒரு தந்தையும் சந்திக்கும் முக்கிய சவாலாகும். உங்கள் குடும்பத்திற்கென நீங்கள் ஒதுக்கும் பொன்னான நேரத்திற்கு ஈடு இணை வேறு கிடையாது. தந்தையாக போகும் ஆண்களுக்கு, தங்கள் வீட்டில் குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைக்குமா என்பதில் பயம் ஏற்படும். மேலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கவன சிதறலால் தங்களால் வேலையில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியுமா என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும். மேலும் வேலைப்பளு காரணமாக தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் நடக்கும் விசேஷமான தருணங்களில் கலந்து கொள்ள முடியாது போன்ற எண்ணங்களால் இவ்வகை கவன சிதறல் உண்டாகும்.

குழந்தை வந்தாலே தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதனை உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் காலம் முதலே நீங்கள் கவனிக்க தொடங்கலாம். குழந்தை பிறந்த நேரத்தில், அதற்கென அதிக நேரம் மற்றும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் உங்கள் மனைவி உங்களிடம் அன்யோநியமாக இல்லாமல் போகலாம். அதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் களைப்பும் உளைச்சலும். ஆனால் இது நிரந்தரம் அல்ல. குழந்தை வளர வளர இது மெதுவாக மாறும். அதற்கு உங்களிடம் பொறுமை இருக்க வேண்டும்.

பெற்றோராக மாறிய பின் பொறுப்புகள் கூடுவதால், அதற்கென செலவிடும் நேரமும் அதிகமாகும். அதனால் தங்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயமும் ஆண்களிடம் இருக்கும். தன் நண்பர்களுடன் வெளியில் செல்வது அல்லது பார்ட்டிக்கு செல்வது போன்றவைகள் எல்லாம் தடைபட்டு விடுமோ என்ற பயமும் இருக்கும். இதனால் தங்களின் அனைத்து நண்பர்களையும், அந்த வாழ்க்கையையும் தொலைத்து விடுவோமோ என்ற பயமும் சேர்ந்து கொள்ளும்.

தங்கள் குடும்பத்தில் பார்த்த நிகழ்வுகள் சில ஆண்களுக்கு பயத்தை உருவாக்கும். அதாவது காதல் மழையில் நனைந்து, தன்னுடனேயே இருக்கும் தன் ஆசை மனைவி அடியோடு மாறிவிட்டால்? ஆம், தந்தையாக போகிறவர்களுக்கு வரும் மற்றொரு பயம் - தன் மனைவி தன்னை விட தன் குழந்தையின் மீது தான் அன்பை செலுத்துவாளா? என்ற எண்ணத்தால், அவர்கள் அனுபவித்து வந்த அன்யோநியமான உறவு பாதிக்கப்படும். இப்படி அன்பு இடம் மாறும் போது, இது நியாயமான பயமாகத் தான் விளங்கும்.

தன் மனைவியின் பிரசவத்தின் போது தன்னால் அவளுக்கு துணையாக இருக்க முடியாது என்ற பயம் பல ஆண்களிடம் இருக்கும். பிரசவ வலியில் அவர்கள் துடிப்பது, கை கால்களை முறுக்குவது, ஆங்காங்கே காணப்படும் இரத்தங்களும் நீர்களும் ஆண்களுக்கும் குமட்டலை ஏற்படுத்தி தலை சுற்றச் செய்யும். அதனால் தான் பல ஆண்கள் பிரசவ நேரத்தில் கண்டிப்பாக மனைவிகளுக்கு துணையாக இருப்பதில்லை.

புது வாழ்க்கை தொடங்கும் போது, முடியும் ஒன்றை எண்ணி நாம் ஒன்றுமே செய்ய முடியாது. தந்தையாக போகிறவர்களுக்கு புதிதாக இன்னொரு உயிர் வரப்போவதால், தங்கள் இளமை பறி போய்விட்டது என்ற பயம் உண்டாகும். தந்தை என்றால் தன் குழந்தை மற்றும் குடும்ப தேவைக்காக பாடுபட்டு தன்னுடைய சுகங்கள் மற்றும் தேவைகளை எல்லாம் மூட்டை கட்டி விட வேண்டும் என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும்.

பிரசவத்தின் போது தங்கள் மனைவி அல்லது குழந்தையை இழந்து விடுவோமா என்ற பயம் பொதுவாக ஆண்களுக்கு வருவது தான். ஒரு வேலை மனைவி இறந்துவிட்டால், குழந்தையை தனியாக வளர்க்க வேண்டும் என்ற பயம் சூழும். குழந்தையை பெற்றெடுக்க தாய் வலியால் துடிப்பதை பார்க்கும் போது, குழந்தை பிறப்பு என்பது நம்மை உறைய வைக்கும் ஒரு அனுபவமாக விளங்கும். ஆனால் இவ்வகை பயங்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பயங்களாகும். அவைகளை முதலில் அகற்றுங்கள்.
தன் குழந்தைக்கு தான் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியுமா என்பது ஒவ்வொரு ஆணின் ஆழ்மனதில் நீடிக்கும் பயமாகும். தன் குழந்தையை பண ரீதியாக எந்த பிரச்சனையுமின்றி வளர்க்க முடியுமா என்ற பயமும் இருக்கும்.

தன் குடும்பத்தையும், குழந்தையின் கல்வியையும் பண ரீதியாக சமாளிக்க வேண்டுமே என்ற பயமும் பல ஆண்களிடம் இருக்கும். குழந்தை பெற்ற பின், தன் மனைவி வேலையை விட்டு நின்று விட்டதால், தன் ஒருவனின் சம்பளத்தை வைத்து குடும்ப தேவைகளை சமாளிக்க முடியுமா என்ற பயமும் உண்டாகும். இது நியாயமான பயமே. பல பேர் குடும்பத்தில் குழந்தை பிறந்தவுடன் இரண்டு பேருக்கு பயன்படுத்தப்பட்ட இருவரின் சம்பளம், இப்போது மூன்று பேருக்கு ஒரு ஆள் சம்பளமாக மாறி விடுவது வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வெற்றிக்கு காரணம் யார்?: மனம் திறந்து கூறுகிறார், பாலசந்தர்!

'என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.

அவர் ஒரு கட்டுரையில் மனைவி ராஜம் பற்றி கூறியிருப்பதாவது:-

'ஆரம்பத்தில் இருந்தே என் மனைவியின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் சிறப்பு அடைந்திருக்க முடியாது. அப்போது இவள் செய்ததை `தியாகம்' என்றே சொல்லவேண்டும்.

எங்களுக்குத் திருமணம் நடந்த நாள் 31-5-1956. தஞ்சை மாவட்டத்தின் நன்னிலத்தில் இருந்த என்னையும், பல மைல்களுக்கு அப்பால் திருவனந்தபுரத்தில் இருந்த ராஜத்தையும் திருமணம் ஒன்று சேர்த்தது.

பெண் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன், 'பார்ப்பதற்கு குமாரி கமலா மாதிரி இருக்கிறாள்' என்றார். 18 வயது பாவையான ராஜம் என்னை கைப்பிடித்தபோது, நான் ஏ.ஜி.எஸ். ஆபீஸ் குமாஸ்தா. என்னுடைய இப்போதைய வளர்ச்சியை இவள் அப்போது கனவில் கூட கற்பனை செய்திருக்க முடியாது.

எனக்கு முதல் காதல் நாடகத்தின் மீதுதான். மனைவி, குடும்பம் எல்லாம் அப்புறம்தான். என் பெரும்பாலான இரவுகளை ஏ.ஜி.எஸ். ஆபீஸ் விழுங்கி விடும். புதிதாகத் திருமணம் ஆன இளம் தம்பதியாகிய நாங்கள் உல்லாசமாகப் பயணம் போவதோ, சினிமா பார்ப்பதோ, வெளியில் எங்காவது சென்று வருவது அவசியம் என்பது கூட என் மனதில் தோன்றாத அளவுக்கு அசுர உழைப்பு உழைத்து விட்டு வந்து படுக்கையில் விழுவேன்.

இப்படியிருக்க, நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே செல்ல நேரம் ஏது? ஆனால் இவள் கொஞ்சமாவது முகம் சுளித்தது இல்லை. குடும்பப் பொறுப்புகளையும் என் கண்ணில் காட்டியதில்லை. அதனால்தான் என் முழு கவனத்தையும், கலைத்துறைக்குத் திருப்ப முடிந்தது.

அன்று முதல் இன்று வரை, குடும்பப் பிரச்சினைகள் எதுவும் என் காதுக்கோ, கவனத்துக்கோ வராதபடி பார்த்துக் கொள்வதில் இவள் மிகவும் சாமர்த்தியசாலி. அந்த மாதிரி தொல்லைகளை எல்லாம் தன் தோளிலேயே தூக்கிப்போட்டுக்கொள்வாள்.

குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சுழன்றால் போதும் என்ற மனோபாவம் கொண்டவள். அநாவசியமான நண்பர் குழாம், வம்பு பேச்சுக்கள், ஆடம்பரம், போலி கவுரவம், நகை ஆசைகள் இவை அனைத்துமே அவள் அகராதியில் இடம் பெறுவதில்லை.

கணவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக, `ஓகோ' என்றெல்லாம் புகழ்வதில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால், 'பிடிக்கவில்லை'தான். வழவழ கொழகொழ வெல்லாம் கிடையாது.

அலங்காரம், அலங்கார வார்த்தைகள், அகங்காரமான எண்ணங்கள் - இவை என்னவென்றே தெரியாதவள், அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலக குமாஸ்தாவின் மனைவியாக இருந்தபோதும் சரி, பிரபலமான திரைப்பட இயக்குனரின் மனைவியாக இருக்கும்போதும் சரி, அவள் 'அவளாகவே இருக்கிறாள்.'

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தரின் மனைவி ராஜம், தன் கணவர் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

'எங்கள் கல்யாணம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெரியவர்கள் செய்து வைத்ததுதான். எனக்குப் பாலக்காடு சொந்த ஊர். அப்பா ஹெல்த் இன்ஸ்பெக்டராகப் பல ஊர்களில் வேலை பார்த்தவர்.

என் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது. திருமணமானவுடனேயே சென்னையில் கோபாலபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அங்கு பல ஆண்டுகள் வசித்தோம்.

அந்த நாளிலும் சரி, இப்போதும் சரி அவர் வீட்டில் பகல் நேரத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. பட விஷயமான வேலைகளைக் கவனிக்க வெளியே சென்று விடுவார். இரவில் படுக்க எவ்வளவு நேரமானாலும் சரி, காலையில் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டார். எழுந்ததும் உடனே பல் தேய்த்துவிட்டு, ஒரு கப் காபி குடித்தவுடன் தான் மற்ற வேலைகளைக் கவனிப்பார்.

முன்பெல்லாம் தினமும் விடியற்காலையில் கடற்கரைக்குச் சென்று குறைந்தது இரண்டு மைல்களாவது வாக்கிங் போவார். இப்போது போவதில்லை. ஏனென்றால் இப்போது அவருக்கு ஏது ஓய்வு நேரம்?

முன்பு இவருக்கு அதிகமாக கோபம் வரும். அப்படி கோபம் வரும்போது இவர் எதிரில் யாரும் போகமாட்டோம். ஆனால் வந்த வேகத்திலேயே அது மறைந்து போய் விடும். இப்போதெல்லாம் இவருக்கு வீட்டில் கோபம் வந்து பார்ப்பது ரொம்ப அபூர்வம்.

வீட்டில் அவருடைய புத்தகங்களோ மற்றும் பேனா பேப்பர் போன்ற பொருள்களோ அவர் வைத்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். அவை அவர் தேடும்போது இடம் மாறிவிட்டால் அவருக்குப் பிடிக்காது.

பலருடைய பாடல்களை டேப்புகளில் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறார். எப்பொழுதாவது அபூர்வமாகப் பொழுது போகாமல் வீட்டில் இருக்கும்போது தமக்குப் பிடித்த பாடல்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். பாட்டுக் கச்சேரிக்கோ, கதா காலட்சேபங்களுக்கோ போக அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. போக வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. `டேப்பின்' மூலம் அந்த ஆசையை நேரம் கிடைக்கும்போது நிறைவேற்றிக் கொள்கிறார்.

அவர் சினிமாவுக்காக, தான் எழுதிய கதையைப் பற்றி என்னிடம் அபிப்ராயம் எதுவும் கேட்க மாட்டார். பொதுவாக யாரிடமுமே அவர் கேட்பதில்லை. முன்பெல்லாம் படம் மூவாயிரம் அல்லது நாலாயிரம் அடி வளர்ந்த பிறகு என்னை அழைத்துக்கொண்டு போய் படத்தைப் போட்டுக் காண்பிப்பார். அப்போதும்கூட என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்கமாட்டார். இப்போது படம் முடிந்து வெளியிடப்பட இருக்கும் சமயத்தில்தான் வீட்டில் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய் படத்தைக் காண்பிக்கிறார்.

புதுப்படம் ஆரம்பிக்கும் நாளில் கூட இவர் எவ்வித டென்ஷனும் இல்லாமல் என்றும் போலவே இருப்பார். அதேபோல இவர் டைரக்ட் செய்த புதுப்படம் ரிலீஸ் ஆகும் அன்றும் இவர் சாதாரணமாகவே இருப்பார். அதற்காக ஸ்பெஷலாகக் கோவிலுக்குப் போவதோ, பூஜை செய்வதோ அதெல்லாம் இவரிடம் கிடையாது. மனதிற்குள்ளே கடவுளை வேண்டிக்கொள்வார் என்று நினைக்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று சுறுசுறுப்பாய்ப் பணியாற்றும் இவர், வெளிப்படையாக கடவுளிடம் எதையும் வேண்டிக்கொண்டதை நான் பார்த்ததில்லை.

ரசிகர்களிடமிருந்து இவருக்கு நிறையக் கடிதங்கள் வருகின்றன. அவற்றிற்கு உடனுக்குடன் பதில் எழுத நேரம் கிடையாது. ஆனால் இனிமேலும் சேர்ந்தால் சமாளிக்க முடியாது என்கிற அளவிற்கு கடிதங்கள் குவிந்து விடும் பொழுது ஒரே நாளில் எல்லாவற்றையும் பார்த்து முக்கியமான கடிதங்களுக்குப் பதில் எழுதி விடுவார்.

எதையும் செய்யாமல் ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார இவரால் முடியாது. இதனால் இவர் காரில் ஏறிக்கொண்டால் கார் வேகமாகப் போகவேண்டும். டிரைவரிடம் சீக்கிரமாகப் போகும்படி சொல்வார். முன்பு இவரே டிரைவிங் செய்து கொண்டிருந்தார். இவர் ஓட்டும்பொழுது வேகமாக ஓட்டுவார். இவர் இப்போது காரை ஓட்டுவதில்லை.

இவ்வாறு ராஜம் பாலசந்தர் கூறியுள்ளார். 

2-வது கதாநாயகியாக நடிக்க ஒத்துக்கொண்ட நடிகை!

சமீபத்தில் வெளியான வேற மாதிரியான பட நாயகி, தன் படம் நன்றாக ஓடியதால் உடனே சம்பளத்தை அதிகமாக்கி விட்டாராம்.


முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லையாம்.


வெற்றிப்பட இயக்குனர் ஒருவர் சமீபத்தில் 2-வது நாயகி கதாபாத்திரத்திற்கு அவரை அணுகினாராம்.


அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் வந்த வாய்ப்பை விட கூடாது என நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.


2-வது நாயகியாக நடித்தால் தொடர்ந்து இந்த மாதிரி வாய்ப்புகள்தான் வரும் என நடிகைக்கு தெரியாது போல! 

கௌதம்மேன்னுக்காக அட்ஜெஸ்ட் செய்யும் சமந்தா!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.


இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அனுஷ்கா நடிப்பதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.


அனுஷ்கா தெலுங்கில் இரண்டு சரித்திர படங்களில் நடித்து வருகிறார். அதற்காக மொத்தமாக டேட்ஸும் கொடுத்துவிட்டார். இரண்டு படங்களிலுமே அனுஷ்காவுக்கு நல்ல சம்பளமும் கூட.


அஜீத்துடன் விரைவில் நடிப்பேன் என்று கௌதம் மேனனின் மனம் கவர்ந்த நாயகி சமந்தா அண்மையில் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அது எப்படி விரைவில் என்று வியந்தவர்களுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.


கௌதம் படத்தில் அவரது ஆஸ்தான நாயகி சமந்தா தான் அஜீத் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் தான் என் ரோல் மாடல் என்று சமந்தா முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கௌதம் தனது படத்தில் நடிக்குமாறு சமந்தாவிடம் கேட்டாராம். ரோல் மாடல் கேட்டு இல்லை என்றா கூற முடியும். அதனால் விஜய், சூர்யா படங்களில் நடித்து வரும் சமந்தா கௌதமுக்காக டேட்ஸை அட்ஜெஸ்ட் செய்கிறாராம்.

மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும்????

மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌க்க கூடாது.


மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.


குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.


கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.


முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் த‌ற்போதைய த‌த்துவவா‌திக‌ள்.


பெ‌ண்க‌ளிட‌ம் இரு‌க்க வே‌ண்டிய குண‌ங்க‌ள் ப‌ற்‌றி ஒளவையா‌ரி‌ன் அமுத வா‌க்‌கினை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.


தாயானவ‌ள் த‌ன் குழ‌ந்தை‌யிட‌ம் எ‌வ்வாறு பாச‌ம் கா‌ட்டுவாளோ, அ‌ப்படி கணவ‌னிட‌ம் பாச‌ம் கா‌ட்ட வே‌ண்டு‌ம். ப‌ணிபு‌ரியு‌ம் வேலை‌க்கா‌ரியை‌ப் பால, ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்.


செ‌ந்தாமரை‌யி‌ல் ‌வீ‌ற்‌றி‌ரு‌‌க்கு‌ம் ல‌ட்சு‌மியை‌ப் போல ‌சி‌ரி‌த்த முக‌த்துட‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். கணவ‌ன் கோ‌பி‌த்து‌க் கொ‌ண்டாலு‌ம், பூமாதே‌வியை‌ப் போல பொறுமையாக இரு‌க்க வே‌ண்டு‌ம். படு‌க்கை அறை‌யி‌ல் கணவ‌னிட‌ம் அ‌ன்பு கா‌ட்டி அரவணை‌த்த‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.


தேவையான போது ம‌ந்‌தி‌ரியை‌ப் போல, ந‌ல்ல ஆலோசனைகளையு‌ம் கூற வே‌ண்டு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்ட குண‌ங்களை‌ப் பெ‌ற்ற பெ‌ண்ணே இ‌ல்ல‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற இ‌னிய பெ‌ண்ணாக இரு‌ப்பா‌ள்.

வீட்டு வைத்திய குறிப்புகள்!

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு
உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்
இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்
வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு
இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி
கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும். கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

முடி வளர சித்த மருத்துவம் !

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

நோய்களுக்கான சில டிப்ஸ்!

கண்கள்

கண்கள் உப்பியிருந்தால்...

என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்

என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது.

என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்

தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது

என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம்

கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல்

என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்

என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

கைகள்

சிவந்த உள்ளங்கை

என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள்

என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி

என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல்

என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்

ஈறுகளில் இரத்தம் வடிதல்.

என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்

என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.

என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

பலாப்பழத்தின் நன்மைகள்!

பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் . சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .

மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் . பலாக்கொட்டைகளை வேக வைத்தோ , அவித்தோ , பொரித்தோ , காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம் .

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும் . இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது .

மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படுகிறது

இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது . பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது. பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத் தடுக்கும் "ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்' பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. சீசனில் கிடைக்கும் பழங்கள், நம் உணவில் இடம் பெற வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து பாருங்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள் . அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்.

கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்!

சாதாரணமாக எல்லா காலகட்டத்திலும், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கத்திரிக்காயின் அபாரமான மருத்துவகுணங்களைப் பார்ப்போம்.


உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.


அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும்.


'பி' காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.


மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.


கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.

என் திருமணம் கேள்விக்குறியாகவே உள்ளது : ஆர்யா!!

இன்னும் நான் தேடும் கனவுக் கன்னி என் கண்ணில் படவில்லை. அதனால் என் திருமணம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.


கோலிவுட்டின் பிசி நாயகர்களுள் ஒருவர் ஆர்யா. கடந்த ஆண்டு அவர் நடித்த சேட்டை, ராஜா ராணி, ஆரம்பம் மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் வெளியாகின.


இந்த ஆண்டும் அவரது படங்கள் குறைவில்லாமல் வெளியாகும். ஆர்யா தற்போது மீகாமன் மற்றும் புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் புறம்போக்கு படத்தில் அவருடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.


ஆர்யா என்றாலே நடிகைகளுடன் ஜாலியாக பேசுவார், அவர்களை கலாய்ப்பார் என்று அனைவருக்கும் தெரியும். ஆர்யாவுக்கு மச்சம் தான் பலர் கூறும்படி அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.


ஆர்யாவும், நயன்தாராவும் காதலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. இந்நிலையில் நயன்தாராவின் பெயர் தற்போது அவரது முன்னாள் காதலருடன் சேர்ந்து அடிபடுகிறது.


ஆர்யாவுக்கு திருமணம் எப்பொழுது என்று பலர் கேட்டாலும் அதற்கு பதில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் திருமணம் பற்றி பேசியுள்ளார்.


ஆர்யா நினைக்கும் கனவுக் கன்னி இன்னும் அவர் கண்ணில் படவில்லையாம். அத்தகைய கனவுக் கன்னி கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வாராம். அதுவரை அவரது திருமணம் ஒரு கேள்விக்குறிதானாம்.

அடுக்கு மாடி (Appartment) வீடுகளி‌ன் அடிப்படை வாஸ்து விதிகள்!

அடுக்கு மாடி (Appartment) வீடுகளில் வடகிழக்கு மூலையில் உள்ள வீடுகளுக்கு மட்டும்தான் ஓரளவு வாஸ்து பொருந்தும்.


அடுக்கு மாடி (Appartment) வீடுகளில் பார்க்க வேண்டிய முக்கிய அடிப்படை வாஸ்து விதிகள்.


வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் இருக்க வேண்டும்.
தலை வாசல் உச்சத்தில் இருக்க வேண்டும்.


தாய்சுவரின் எந்த முனையும் உடையாமல் இருக்க வேண்டும்.


கழிவறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.


சமையலறை / பூஜையறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.

திரை உலகுக்கு வாருங்கள்: பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு !

நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, 'தெய்வத்தாய்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று 'மெழுகுவர்த்தி.' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.

அவர் பேசும்போது, 'பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்' என்றார்.

அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க 'தெய்வத்தாய்' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.

அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.

சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது.

அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.

ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.

இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.

அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது' என்கிறார், பாலசந்தர்.

'தெய்வத்தாய்' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.

'தெய்வத்தாய்' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.

நாடகமாக பெரிய வெற்றி பெற்ற 'சர்வர் சுந்தர'த்தை படமாக்க ஏ.வி.எம். நிறுவனம் தீர்மானித்தது. அதன் கதை-வசனத்தை பாலசந்தர் எழுதினார். முத்துராமன், நாகேஷ், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ட் செய்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது.

அடுத்து, இதே ஆண்டில் முக்தா சீனிவாசன் தயாரித்து டைரக்ட் செய்த 'பூஜைக்கு வந்த மலர்' படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதினார்.

இதே ஆண்டில் வெளிவந்த 'நீலவானம்' படத்துக்கும் பாலசந்தர் கதை- வசனம் எழுதினார். சிவாஜி கணேசனும், தேவிகாவும் இணைந்து நடித்தனர். தேவிகாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம்.

இந்த படத்தை டைரக்ட் செய்தவர் பி.மாதவன்.

'நீலவானம்' சிறந்த படமாக அமைந்தது.

இந்த சமயத்தில், பாலசந்தர் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு தேடி வந்தது. 

அபூர்வ நாயகன் கமலஹாசன்! - ஒரு சிறப்புப் பார்வை!

நடிகர் கமலஹாசனைப் பற்றிய ‘அபூர்வ நாயகன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள கமலஹாசனின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இப்புத்தகத்தை உருவாக்கிய ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் புத்தகத்தை வெளியிட, கலைஞானி கமலஹாசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கமலஹாசனின் அபூர்வ புகைப்படங்களும், அவர் நடித்த திரைப்படங்கள் குறித்த தகவல்களும் பல முன்னணி கவிஞர்களின் வாழ்வியல் கவிதைகளும் அடங்கிய தொகுப்பாக, களஞ்சியமாக இப்புத்தகம் திகழ்கிறது.


உலக அரங்கில் தமிழ் திரைத்துரையை தலைநிமிரச் செய்த கலைஞன் கமலஹாசனின் சாதனைகள் குறித்த பெட்டகமாக திகழும் இப்புத்தகம், நிகழ்காலத்தில் மட்டுமின்றி வருங்கால சரித்திரத்திலும் தனியிடம் பெறு
மென்பதில் ஐயமில்லை.


1960-ல் திரைத்துறையில் நுழைந்து, 55 வருடங்களாக தனது உழைப்பின் மூலம் தமிழகத்தின் பெருமையை தரணியில் உயர்த்திய தமிழனுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சமர்ப்பணமாக இப்புத்தகம் அர்ப்பணிக்கப்படுகிறது என்று ராம்ராஜ் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் கூறினார். 

எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை நடிகர் அமீர் கான் சொல்கிறார்!

எனக்கு எதிராக எந்த மிரட்டலும் வரவில்லை என்று இந்தி நடிகர் அமீர் கான் தெரிவித்தார்.

நடிகர் அமீர் கான்

இந்தி நடிகர் அமீர் கான் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதில் பெண்சிசு கொலை, ஆஸ்பத்திரியில் நடைபெறும் மோசடிகள் மற்றும் சமூகத்தில் நிலவும் கவுரவ கொலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு சில விஷமிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதை உறுதிபடுத்தும் விதமாக அமீர் கான் சமீபத்தில் குண்டுகள் துளைக்காத விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது.

பயம் இல்லை

இந்த நிலையில், நடிகர் அமீர் கான் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தனக்கு எதிராக வந்த கொலை மிரட்டல்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அமீர் கான் கூறியதாவது:–

எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. வந்தாலும் நான் பயப்பட மாட்டேன். வதந்திகளை நம்பாதீர்கள். என்னை பொறுத்தவரை நான் ஒரு தகவல் தொடர்பாளர். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது என் பொறுப்பு. மக்கள் என்னோடு சேர வேண்டும். இதை தான் நான் விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில், பெண்கள் கையில் அதிகாரம் இருப்பதை நான் விரும்புகிறேன்.

அரசியலில் ஆர்வம் இல்லை

மேலும் எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. அதில் இருந்து விலகி இருக்கவே நான் விரும்புகிறேன். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளில் தான் நான் கவனம் செலுத்துகிறேன். அரசியலில் அல்ல.

நான் உணர்ச்சிப்பூர்வமானவன். இதயம் நொறுங்குகிற அளவுக்கு கதைகளை கேட்கும்போது என்னை அறியாமலே அழுதுவிடுவேன். ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் நான் அழுத காட்சிகளை எல்லாம், ஊழியர்கள் நீக்கிவிடுவார்கள்.

இந்த உலகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது தைரியத்தையும், தீர்மானத்தையும் பார்த்து நான் தலை வணங்குகிறேன்.

இவ்வாறு நடிகர் அமீர் கான் தெரிவித்தார்.

ரஜினியால் மறக்க முடியாத மார்ச் 11...?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படம் ஏப்ரல் 11 அன்று திரைக்கு வரவிருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.


கிட்டதட்ட மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் படம் திரைக்கு வருவதால் இந்த வெளியீட்டை பிரமாண்டமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் அதற்கு சரியாக ஒரு மாதம் முன்பாக ரஜினியின் குடும்பத்தில் ஒரு பெரிய கொண்டாட்டமே நடக்க இருக்கிறது.


ஆமாங்க, மார்ச் 11 ரஜினியின் வாழ்வில் மிக முக்கியமான நாள். அந்த நாளில்தான் சிவாஜி கெய்க்வாடாக இருந்தவர் ரஜினிகாந்த் என்று தன் குருநாதல் இயக்குநர் கே.பாலச்சந்தரால் பெயர்சூட்டப்பட்டார்.


கடந்து வந்த பாதையையும் ஏற்றிவிட்ட கரங்களையும் என்றும் மறவாதவரான ரஜினி, தன் வெற்றிக்கு காரணமான பெயரைப் பெற்ற நாளைக் கொண்டாடாமல் இருப்பாரா? ஒவ்வொரு ஆண்டும் போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைவாழ்வில் தன் முன்னேற்றத்துக்குப் பங்களித்த பெரியவர்களுக்கு விருந்து கொடுப்பார்.


இந்த விருந்தில் இடம்பெறும் உணவு வகைகளை ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தே சமைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் ‘ரஜினி பெயர் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்துவருவதாகக் தெரியவந்துள்ளது.

சத்யராஜுடன் இணைந்து பரத் நடிக்கும் ‘ஏழு கடல் தாண்டி’!

’ஐந்து ஐந்து ஐந்து’ படத்தை தொடர்ந்து பரத் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ‘ஏழு கடல் தாண்டி’  என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் செந்தில் குமார் இயக்குகிறார். இவர், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.


இந்தப் படத்தில் பரத்துடன் சதயராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது. படப்பிடிப்பு விரைவில் ஆரமபமாகவுள்ளது.


தற்போது பரத் ‘கூதற’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லட்சத்தீவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாறுபட்ட ஒரு கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தில் மோகன்லாலும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை பரத் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.


காதல் படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் பரத். அதன் பிறகு சில படங்கள் அவருக்கு கை கொடுத்தாலும் காதல் போன்று பெயர் வாங்கி கொடுக்கும் படம் இல்லாத ஏக்கம் அவரிடம் இருந்து வருகிறது.


வெங்கடேஷ் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்த ‘கில்லாடி’ என்ற படம் இன்னமும் ரிலீசாகாமல் இருப்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்!

அஜித்துக்கு கௌரவம் தேடிக் கொடுத்த 'வல்லினம்'!

'ஈரம்' இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள இரண்டாவது படம்'வல்லினம்'. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகுல் பேஸ்கட்பால் வீரராக நடித்திருக்கிறார். ஹீரோயினாக மிருதுளா நடித்துள்ளார்.


'ஈரம்' படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றதால், 'வல்லினம்' படத்தையும் ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.


இந்தப் படத்தில் பல விளையாட்டு வீரர்களுக்கு கிரெடிட் வழங்கப்படுகிறது. சச்சின், பி.டி.உஷா, நரேன் கார்த்திகேயன், தோனி, கபில்தேவ், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருடன் அஜித்தின் பெயரும் இடம்பெறுகிறது.


பைக் மற்றும் கார் ரேஸில் அசாதரணமாக பல சாதனைகளைச் செய்ததற்காக அஜித்தை கௌரவம் தேடித்தந்துள்ளார்களாம்.

கன்னடப்படத்தை ரீமேக் செய்யும் தனுஷ்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ரீமுரளி, ஹரிப்ரியா நடித்த கன்னடப் படம் 'உக்ரம்'. அதுல் குல்கர்னி, அவினாஷ் ஆகியோர் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 21ல் ரிலீஸ் ஆனது.


'லூசியா' படத்துக்குப் பிறகு 'உக்ரம்' கன்னடத்தில்  சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு பெரிதும் பேசப்படுகிறது.


சமீபத்தில் 'உக்ரம்' படத்தின் டிரெய்லர் பார்த்த தனுஷ் மிரண்டு போய்விட்டாராம். இப்படியெல்லாம் கேங்ஸ்டர் வாழ்க்கையைப் பதிவு செய்ய முடியுமா என ஆச்சர்யப்பட்டவர் இப்போது ரீமேக் செய்யவும் முடிவெடுத்துவிட்டார்.


தமிழ், இந்தி என இரு மொழிகளில் தனுஷ் ரீமேக் செய்கிறார். இது தனுஷ் ரீமேக் செய்யும் இரண்டாவது கன்னடப் படம். சிவராஜ்குமார் நடித்த 'ஜோகி' என்ற படத்தின் ரீமேக்தான் தமிழில் 'பரட்டை என்கிற அழகு சுந்தர,' ஆனது.


தனுஷ் 'உக்ரம்' ரீமேக்கில் ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். பிரசாந்த் நீல் தமிழ், இந்தியிலும் இயக்க வாய்ப்பு இருக்கிறதாம்.


ஹீரோயின் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம்.

பிப்ரவரி 28-ல் வெளியாகிறது வாயை மூடிப் பேசவும் டீசர்!

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிவரும் புதிய திரைப்படமான வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 28ல் வெளியாகவுள்ளது.


துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகிவரும் திரைப்படம் வாயை மூடி பேசவும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கெனவே பிரபலமடைந்துள்ளன.
.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வித்தியாசமான முறையில் டிசைன் செய்யப்பட்டிருப்பதாகப் பாராட்டப்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. வருகிற பிப்ரவரி 28ல் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரேடியன்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இப்படத்தினைத் தயாரித்துவருகின்றன. பிரபல கிதார் இசையமைப்பாளரான சீன் ரோல்டன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.


இப்படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலாஜி மோகன் தனுஷ் - காஜல் அகர்வால் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார்.

காதலருடன் துபாய் சென்ற காஜல் அகர்வால்!

திரையுலகப் பிரபலங்கள் காதல் வயப்படுவதும், அதனை மறுப்பதும், பின்னர் அதனைச் சுற்றி கிசுகிசுக்கள், வதந்திகள் பரவுவதும் தொடர்கதைதான்.


அந்தவகையில் சமீபமாக மீடியாக்களுக்குத் தீனி போட்டுவருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரைக் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் சில நாட்களாக பேசப்பட்டுவருகிறது.


ஆனால் காஜல் அகர்வால் தனது காதல் விவகாரத்தையும், திருமணம் குறித்த செய்திகளையும் மறுத்தே வருகிறார். சினிமா நட்சத்திரங்கள் இதுபோன்ற செய்திகளை மறுப்பதும், பின்னர் திடீரென ஒப்புக் கொள்வதும் புதிதல்ல.


 இதுவரையிலும் தனது காதல் மற்றும் திருமணம் குறித்த வதந்திகளுக்குப் பதில் சொல்லாமல் இருந்துவரும் காஜல் அகர்வால் சமீபமாகத் தனது காதலருடன் துபாய் சென்று வந்ததுள்ளதாகச் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.


காஜல் அகர்வாலின் தீவிர ரசிகர் ஒருவர் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டிருப்பதாகவும், அந்தப் புகைப்படத்தில் இருப்பது காஜல் அகர்வாலின் காதலர்தானென்றும் கிசுகிசுக்கப்படுகிறது.


விரைவில் காஜல் அகர்வால் இதுகுறித்து வாய்திறப்பார் என்றும் பேசப்படுகிறது. 

கோச்சடையான் இசை வெளியீடு உறுதி செய்யப்பட்டது!

மிக நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


வருகிற மார்ச் 9 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெறும் என்று கோச்சடையான் இசைத் தட்டுக்களை வெளியிடும் உரிமை பெற்ற சோனி மியூசிக் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.


சூப்பர் ஸ்டாரின் இளைய மகளான சௌந்தர்யா இயக்கத்தில், மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கிறது கோச்சடையான். இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.


ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


கோச்சடையான் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 11ல் உலகெங்கிலும் சுமார் 6000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


 தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உட்பட மொத்தம் எட்டு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.