Saturday, 22 February 2014

சிசேரியன் செய்த பெண்களுக்கு உகந்த உணவுகள்.. !

 விறுவிறுப்பான கர்ப்ப காலத்திற்கு பின் தாய்மையை ஆனந்தமாக எண்ணி மகிழும் இந்த தருணங்களில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய காரியமாக உள்ளது. சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சை பிரசவமாக இருந்தாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. முக்கியமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது.
 

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களின் தையல் ஆறுவதற்கும் சீக்கிரம் குணமடைவதற்கும் நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வகைகள் அவர்களுக்கு வாயு தொல்லை, மலச்சிக்கல் மற்றும் எந்த வித செரிமாண கோளாறுகள் கொடுக்கமாலும் இருக்க வேண்டியது அவசியமாகும். உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இதற்கு உணவும் ஒரு வகையில் காரணமாகும். நாம் இந்த பகுதியில் பிரசவ அறுவை சிகிச்சைக்கு பின் என்ன உணவு உண்ணலாம் என்பதை குறித்துப் பார்ப்போம்.

முட்டை

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்கள் சாப்பிட வேண்டிய மிக முக்கிய உணவு முட்டை. இதில் உள்ள புரதச் சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவை பிரசவத்திற்கு பின் உடலுக்கு மீண்டும் அதன் வலிமையை கொண்டு வர உதவுகின்றன. இந்த உணவை ஒதுக்கி விடாமல் உண்டு நாம் கடந்து வந்த கடினமான கர்ப்ப கால மாற்றங்களை சரி செய்யலாம்.

மீன்

உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தியாகும். குழந்தை பெற்ற பின் நீங்கள் உண்ண வேண்டிய உணவுகளில் மீன் மிகவும் முக்கியமானதாகும். மேலும் ஓமேகா 3 உள்ள மீன்களை உண்பது சிறந்த பலன்களைத் தரும். இவை உடலுக்கு இழந்த சக்தியை மீட்டுத் தருகின்றன.

பால்

பாலில் உள்ள சுண்ணாம்பு அதாவது கால்சியம் தாய்ப்பால் தரும் பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. தாய்ப்பால் உருவாவதற்கு சுண்ணாம்பு சத்து அதிகம் தேவைபடுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது இரணடு டம்ளர் பால் அருந்துவது நல்லதாகும்.

தர்பூசணி

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களின் உடல் நிலை மீண்டும் அதன் பழைய சக்தியையும் செயல்களையும் செய்வதறகு சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. இதனால் நமது செர்மானம் மற்றும் வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் செயல்கள் பாதிக்கப்படுகின்றது. தர்பூசணி இதை சரிசெய்வதில் சிறந்த பழமாக உள்ளது. உண்பதற்கு எளிதாகவும் நிறைய நீர் சத்து நிரைந்ததாகவும் உள்ள இந்த பழம் செரிமானத்தை எளிதாக்க வல்லது.

தண்ணீர்

உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி ஈரப்பதத்தை மேம்படுத்த தண்ணீர் உதவுகிறது. இது உங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், தாய்ப்பாலும் நான்றாக சுரக்கும்.

தயிர்

கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ள தயிர் மிகவும் சிறந்த உணவாகும். இதை நாமக்கு விருப்பமான எந்த வகை உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். பிரசவ அறுவை சிகிச்சையை எதிர் கொண்டிருக்கும் மகளிருக்கு தயிர் மிக சிறந்த மற்றும் ஊட்டமளிக்கும் உணவாகும்.

வால்நட்

அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதை சாப்பிடுவதால் அவர்களுடைய உடலில் புரதச் சத்துகளும், போலிக் அமிலத்தின் உற்பத்தியும் மிகுதிப்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை பிரசவத்திற்கு பின் இதை சாப்பிடுவது உடலின் சக்தியை அதிகரிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த பழமாகும். இவை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு எந்த வித தொற்று நோய்கள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளும். தையலில் புண்கள் இருக்கும் போது எளிதாக அந்த இடத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுவது நம்மை கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கிறது.

பச்சை இலை மற்றும் காய்கறிகள்

நார்ச்சத்து மிகுத்த உணவுகளை உண்ண வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கீரைகள், பச்சை காய்கறிகள் அகியவற்றை தினசரி சாப்பிட வேண்டும். இது நமது செரிமாணத்தை அதிகப்படுத்தி குடலை சுத்தப்படுத்த உதவுகின்றன. இவைகளெல்லாம் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களுக்கு ஏற்ற சிறந்த உணவு வகைகளாகும். 

33 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கிய நடிகை...!

ஹாலிவுட் படங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை ஏஞ்சலீனா ஜோலீ பெற்றுள்ளார்.  இவர் கடந்த 2013ம் ஆண்டில் 33 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற ஜோலீ அதிக சம்பளம் வாங்கியவர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.  இவருக்கு அடுத்தபடியாக ஜெனிபர் லாரன்ஸ் 26 மில்லியன் டாலர் பெற்று 2வது இடத்திலும், கிறிஸ்டன் ஸ்டூவர்ட் 21.5 மில்லியன் டாலர் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர்.


இதேபோன்று, 4வது மற்றும் 5வது இடத்தில் ஜெனீபர் ஆனீஸ்டன் 20 மில்லியன் டாலர் மற்றும் எம்மா ஸ்டோன் 16 மில்லியன் டாலர் வருமானமும் பெற்று உள்ளனர்.  ஹாலிவுட் நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் என்ற பெருமையை ராபர்ட் டவுனி ஜூனியர் பெறுகிறார்.  கடந்தாண்டு அவரது வருமானம் 75 மில்லியன் டாலர்.


அவரை அடுத்து சானிங் டாட்டம் 60 மில்லியன் டாலருடன் 2வது இடமும், ஹக் ஜேக்மேன் 55 மில்லியன் டாலருடன் 3வது இடமும், 4வது இடத்தில் மார்க் வால்பெர்க் 51 மில்லியன் டாலர் பெற்றும் உள்ளனர்.  டாப் 10 நடிகர்களில், டுவைன் ஜான்சன், லியோனார்டோ டிகேப்ரியோ, ஆடம் சாண்ட்லர், டாம் குரூஸ், டென்செல் வாஷிங்டன் மற்றும் லியாம் நீசன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

இலக்கணத்தை மாற்ற வல்லவன் - பிரம்மன்! திரைவிமர்சனம்!

நடிகர் : சசிகுமார்
நடிகை : லாவண்யா திரிபாதி
இயக்குனர் : சாக்ரடீஸ்
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
ஓளிப்பதிவு : ஜோமோன் டி ஜான் / பைசல் அலி


சிறு வயதிலிருந்தே சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகின்றனர் சசிகுமாரும், அவருடைய நெருங்கிய நண்பரான நவீன் சந்திராவும். இதில் நவீன் சந்திரா மட்டும் சென்னையில் சென்று பெரிய இயக்குனராகிவிடுகிறார்.


சசிகுமார் கோயம்புத்தூரிலேயே ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதே தியேட்டரில் இவருடைய நண்பன் சந்தானமும் ஆபரேட்டராக பணிபுரிகிறார். நஷ்டத்துடன் இயங்கும் அந்த தியேட்டரை கஷ்டப்பட்டு நடத்தி வரும் சசிகுமார், ஒருநாள் நாயகி லாவண்யா பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். இந்நிலையில், நாயகியின் அண்ணனையே தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால், இருவரும் நெருங்கி பழக வாய்ப்பு அதிகமாகிறது.


இருவரும் காதலித்து வரும் நிலையில், ஒருநாள் தியேட்டருக்கு வரிகட்ட வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதை கட்ட சசிகுமாரிடம் பணம் இல்லை. அதனால், சென்னையில் பெரிய இயக்குனராக இருக்கும் தனது நண்பனிடம் சென்று உதவி கேட்கலாம் என்று சென்னை கிளம்பி வருகிறார்.


சென்னைக்கு வரும் சசிகுமாருக்கு எதிர்பாராத விதமாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. முற்றிலும் அனுபவமே இல்லாத சசிகுமாருக்கு சூரி உதவி செய்கிறார்.


இந்நிலையில், தன்னுடைய நண்பனான நவீன் சந்திரா தன்னுடைய கதையை படமாக எடுக்க விரும்புகிறான் என்று தெரிந்ததும் தனது நண்பனுக்காக அந்த கதையை விட்டுக் கொடுக்கிறார் சசி.


நண்பனுக்காக விட்டுக்கொடுத்த மகிழ்ச்சியில் சொந்த ஊர் திரும்பும் சசிகுமாருக்கு அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. தனது காதலியான லாவண்யாவுக்கும், நண்பன் நவீன் சந்திராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விடுகிறது. நட்புக்காக தனது காதலையும் துறக்கிறார் சசி.


நட்புக்காக இயக்குனர் கனவு, காதல், தியேட்டர் என எல்லாவற்றையும் இழந்த சசிகுமாரின் வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.


இதுவரையிலான படங்களில் கிராமத்துப் பாணியில் நடித்து வந்த சசிகுமார் இந்த படத்தில் நகரத்துவாசியாக வருகிறார். படம் முழுக்க துறுதுறுவென நடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, அடாவடி என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக செய்திருக்கிறார். தனது முந்தைய படங்களைப்போல இப்படத்திலும் நட்புக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். ஆனால், நட்புக்காக கிடைக்கிற பணத்தையெல்லாம் விட்டுக்கொடுப்பது கொஞ்சம் ஓவர்தான்.


நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியில் இன்றைய இளைஞர்கள் விழுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். நடிப்பிலும் ஓகேதான். தமிழில் ஒரு ரவுண்டு வரலாம்.


முதல்பாதியை கலகலப்பாக நகர்த்தத சந்தானம் மிகவும் உதவியிருக்கிறார். இவரது ஒன்லைன் காமெடி சூப்பர். இரண்டாம் பாதியில் சென்னை வரும் சசியுடன் சூரி சேர்ந்துவிடுகிறார். சினிமாவில் வாய்ப்பு தேடுபவராக வரும் சூரியும், சசியும் சேர்ந்து செய்யும் அலப்பறை இரண்டாம் பாதியை கலகலக்க வைக்கிறது.


ஒரே படத்தில் ஆசை, காதல், நட்பு, தியாகம் என எல்லாவற்றையும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சாக்ரடீஸ். ஆனால், அதை திரைக்கதையில் சரியாக சொல்ல தடுமாறியிருக்கிறார். இன்றைய தியேட்டர்களின் நிலைமையை அழகாக எடுத்துக் கூறியதற்காக பாராட்டலாம். அதேபோல், சசிக்கும், தியேட்டருக்கும் உண்டான பிணைப்பை அழகாக காட்டியிருக்கிறார்.


தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் ஓகே ரகம்தான். ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன.

பிரியயிருந்த ஜோடியை சேர்த்து வைத்த - கமலஹாசன்!


நடிகை லிசிக்கும் டைரக்டர் பிரியதர்ஷனுக்கும் 1996–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.


லிசிக்கும் பிரியதர்ஷனுக்கும் இடையே சமீபத்தில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். லிசிக்கு ரூ.80 கோடிக்கு மேல் ஜீவனாம்சம் கொடுத்து விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் பரவின.


 இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே சமரச முயற்சிகளை சிலர் மேற்கொண்டார்கள். அதற்கு பலன் கிடைத்துள்ளது. கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் மீண்டும் சேர்ந்துள்ளார்கள். கமலஹாசன்தான் இவர்களை சேர்த்து வைத்துள்ளார்.


இதுகுறித்து நடிகை லிசி கூறியதாவது:–


பிரியதர்ஷனுக்கும் எனக்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தோம். எங்கள் இருவருக்கும் நண்பராக இருந்தவர்தான் இந்த தகராறுக்கு காரணம். மனம் விட்டு பேசாததால் பிரச்சினை பெரிதானது.


இவை எல்லாமே நாங்கள் நேருக்கு நேர் சந்தித்து மனம் விட்ட பேசியதும் முடிந்து போனது. இப்போது தெளிவாகி விட்டோம். குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்ந்து நாங்கள் சேர்வதற்கு கமலஹாசனும் கவுதமியும் உதவினார்கள். இது போல் மோகன்லாலும் அவரது மனைவியும் முயற்சி எடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு லிசி கூறினார்.

தன்னுடைய பாலியல் பலாத்கார வீடியோவை வெளியிட்ட நடிகை!

பாலியல் பலாத்காரம் செய்த டைரக்டரை நடிகை அடித்து உதைத்தார். இது வீடியோ படமாக இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகையின் பெயர் கீத்திகா. இவர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். வாட்தபிஷ், ஆத்மா, ஒன் பைடூ போன்ற படங்களில் நடித்துள்ளார்.


கீத்திகாவை ‘ஜாலி எல்.எல்.பி.’ என்ற இந்தி படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியானார். கீத்திகா ஆவேசமாக டைரக்டர் சுபாஷ் கபூர் கன்னத்தில் மாறி மாறி அடித்தார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பு இச்சம்பவம் நடந்துள்ளது.


இந்த படத்தை கீத்திகா தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். டைரக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குறிப்பிட்டு உள்ளார். தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


போலீசில் புகார் செய்யவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தனுஷின் 25வது படம் அருமை - புகழ்ந்துதள்ளும் கே.வி.ஆனந்த்,!

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படத்தை அவருடைய சொந்த நிறுவனமான வொண்டர்பார் தயாரிக்கிறது.


 இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை வேல்ராஜ் இயக்கிருக்கிறார்.


அனிருத் இசையில் அனைத்து பாடல்களையும் தனுசே எழுதி பாடியிருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இப்படத்தின் ஆடியோவை கேட்ட இயக்குனர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் அனிருத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.


 மேலும் படத்தின் பாடல் வரிகள் எளிமையாகவும், அற்புதமாகவும் இருக்கிறது என்று தனுஷ் மற்றும் இயக்குனர் வேல்ராஜை வாழ்த்தியுள்ளார்.


‘வேலையில்லா பட்டதாரி’ தனுஷின் 25வது படமாகும். 

கால்ஷீட் தர மறுக்கும் விநோத நடிகை!

பிரியாமணியிடம் கால்ஷ¦ட் கேட்டால் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் கிராமத்து பெண்ணாக பரபரப்பாக பேசப்பட்ட பிரியாமணி பின்னர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்க மறுத்து கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.


 கிராமத்து பெண்ணாக தொடர்ந்து நடித்தால் கிராமத்து நடிகை என்று முத்திரை குத்திவிடுவிவார்கள் என்ற பயத்தால் அந்த வேடங்களை தவிர்த்தார். தெலுங்கு படங்களில் டூ பீஸ் உடையில் நடித்து சக ஹீரோயின்களுக்கு சவால் விட்டார். ஆனாலும் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் குவியவில்லை. டோலிவுட் படங்கள் கைவிட்ட நிலையில் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். அதைத் தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வருகிறார்.


இதற்கிடையில் தமிழ் படங்களில் நடிக்க சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொன்னார்கள். ஆனால் கால்ஷீட் தர மறுத்துவிட்டார். கன்னட இயக்குனர் பட்நாயக் இயக்கும் படமொன்றில் சிபிஐ அதிகாரியாக கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுபற்றி பிரியாமணி கூறும்போது, இதுவரை சிபிஐ கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. எனவேதான் ஒப்புக்கொண்டேன்.


மேலும் இயக்குனர் பட்நாயக் எனக்கு நல்ல நண்பர். அவர் கேட்டபோது மறுக்க முடியவில்லை. தெலுங்கு பட ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன். கன்னடம், மலையாளத்தில் பிஸியாக இருப்பதால் வேறு படத்தை ஏற்பதற்கு யோசிக்கிறேன் என்றார். 

நடிகர் மீது இயக்குனர் கடும் தாக்கு!

சம்பள பாக்கி கேட்ட நடிகர் சுதீரை கடுமையாக தாக்கியுள்ளார் இயக்குனர் வினயன். என் மன வானில், காசி ஆகிய படங்களை இயக்கிய வினயன் மலையாளத்தில் ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். டிராகுலா 3டி என்ற மலையாள படத்தையும் அவர்  இயக்கினார். இப்படத்தில் சுதீர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.


இதில் நடித்ததற்கு தனக்கு வைத்திருக்கும் சம்பள பாக்கியை உடனே தர வேண்டும் என்று இயக்குனர் வினயனிடம் கேட்டு வருகிறார். இதில் கோபம் அடைந்த வினயன், சுதீரை கடுமையாக விமர்சித்தார். இது பற்றி இயக்குனர் கூறும்போது, சுதீரை என் படத்தில் நடிக்க வைத்தது என்னுடைய தவறு என்பதை உண்மையிலேயே இப்போது  உணர்கிறேன்.


முதல் ஷாட் நடிக்க தொடங்கிய நாளிலிருந்து பணம், பணம் என்று கேட்டு வருகிறார். இந்திரஜித், ஜெயசூர்யா போன்ற நடிகர்களை என் படத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.


அவர்கள் பெற்ற முதல் சம்பளத்தைவிட சுதீருக்கு அதிகமாக தரப்பட்டுள்ளது. அவரை முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து பெரிய ரிஸ்க் எடுத்தேன். அவ்வளவு பெரிய படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ததற்காக அவர்தான் எனக்கு பணம் தர வேண்டும் என்றார். விரைவில் நடிகர் மீது மானநஷ்ட வழக்கு தொடரவும் வினயன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

அமலாவுக்கு புது பழக்கம்!

அமலா பால் தனது செல்லபிராணியான நாயை அருகில் படுக்க வைத்து கட்டி பிடித்து தூங்குவதை பழக்கமாக வைத்திருக்கிறார். நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் அமைப்பாக செயல்படுகிறது பீட்டா. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக பல நடிகர், நடிகைகள் உள்ளனர்.


இதில் தீவிரமாக கவனம் செலுத்தும் த்ரிஷா தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கும்படி அட்வைஸ் தருவதுடன் தானே அதுபோல் பல நாய்களை தத்தெடுத்து வளர்க்கிறார். சமீபத்தில் இந்த அமைப்பில் உறுப்பினராக இணைந்தார் மதராசபட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன்.



பல ஹீரோயின்கள் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கின்றனர். இதற்காக பிரத்யேக ஏசி ரூம் அமைத்து கொடுத்து அதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் செல்ல பிராணியுடன் கொஞ்சி விளையாடி பொழுதை போக்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.


இதில் ஒருபடி மேலே போய் தனது செல்ல நாய்குட்டியை எங்கும் அலைய விடாமல் தான் உறங்கும்போது தன் அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வதுடன் அதை கட்டிப்பிடித்து தூக்கத்தில் ஆழ்கிறார் அமலா பால். இதற்கு முன் அவருக்கு இப்படி பழக¢கம் கிடையாதாம். ஆனால் தனது செல்ல நாய்க்குட்டி மீது பாசம் அதிகரித்த பிறகு அதை கட்டிப்பிடித்து தூங்கினால்தான் தூக்கமே வருகிறதாம்.